Wednesday, September 22, 2010


மீண்டும் ஜென்சி

இவ்வுலக வாழ்க்கையே ஒரு வினோதம்தான். எல்லோருமே வாழ்க்கையை அனுபவிக்கிறோம். ஆனால் துன்பத்தையா, இன்பத்தையா என்பது தான் வித்தியாசம். உலகில் பிறந்த அனைவருக்குமே வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்புகள் கிடைத்தாலும் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள எல்லோராலும் முடிவதில்லை. அப்படி திரையுலகில் வாய்ப்பு கிடைத்தும் தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்களுள் ஜென்சியும் ஒருவர்.


பெண்கள் பொதுவாக குடும்பமா வேலையா என்று வரும்போது குடும்பத்திற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். அப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில்தான் அவர் பாடுவதை நிறுத்திவிட்டார். ஜென்சியின் குரல் தனித்துவம் வாய்ந்தது. அவர் குறைந்த அளவு பாடல்களே பாடியிருந்தாலும் அத்தனையும் முத்துக்கள். அப்போது உள்ள சூழ்நிலையில் அவர் பாடுவதை நிறுத்தினாலும், எதிர் காலத்தில் ஜென்சி நிறைய பாட வேண்டும் என்பதே இசை ரசிகர்களின் விருப்பம். இந்த நம்பிக்கையோடு அவர் பாடிய முத்தான பாடல்கள் சிலவற்றைக் கேட்போம்.

என் வானிலே ஒரே வெண்ணிலா (ஜானி)


ஒரு இனிய மனது (ஜானி)


இரு பறவைகள் மலை முழுவதும் (நிறம் மாறாத பூக்கள்)


இதயம் போகுதே (புதிய வார்ப்புகள்)


காதல் ஓவியம் (அலைகள் ஓய்வதில்லை)


மயிலே மயிலே (கடவுள் அமைத்த மேடை)


மீன்கொடி தேரில் (கரும்பு வில்)


ஆயிரம் மலர்களே மலருங்கள் (நிறம் மாறாத பூக்கள்)


தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் (உல்லாசப் பறவைகள்)


அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் (முள்ளும் மலரும்)


தீர்த்தக் கரை தனிலே (தைப்பொங்கல்)


கீதா சங்கீதா (அன்பே சங்கீதா)


பனியும் நானே மலரும் நீயே (பனிமலர்)


பூ மலர்ந்திட (டிக் டிக் டிக்)


என்னுயிர் நீதானே (பிரியா)


ரஜினியின் நடிப்புத் திறமையை அழகாக வெளிக் கொண்டு வந்தவர்களுள் இயக்குனர் மகேந்திரனும் ஒருவர். அவர் இயக்கிய ஜானி, முள்ளும் மலரும் படங்களில் பாடியுள்ளார் ஜென்சி. மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கி, ஸ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்தின் மூலம் மீண்டும் பாட வந்துள்ளார் ஜென்சி. வாய்ப்பு மீண்டும் அவரது வாசல் படி வந்துள்ளது. அவரது இனிய குரலைக் கேட்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இசைத்துறையில் அவரது மறுபிரவேசம், எந்தவித தடங்கல்கள் இல்லாத இனிய பயணமாகத் தொடர இசைப் பிரியர்களின் வாழ்த்துக்கள்.

23 comments:

ஜிஎஸ்ஆர் said...

எல்லாமே அருமையான பாடல் அதிலும் ஜானி படத்தில் பாடலை எப்போது கேட்டாலும் ஒரு வித கிறக்கம் இருக்கும்

ராமலக்ஷ்மி said...

வாழ்த்தி வரவேற்போம்.

சுட்டியிருக்கும் அத்தனையுமே ‘தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்’களே!

அருமையான பகிர்வுக்கு நன்றி.

Menaga Sathia said...

சூப்பர்ர் கலெக்‌ஷன்ஸ்...என் வானிலே இந்த பாடலை இவ்வளவு நாள் வாணி ஜெயராம் பாடிய பாடல் என்று நினைத்திருந்தேன்.இப்போழுது தான் ஜென்சி பாடிய பாடல் என்று தெரிந்துக் கொண்டேன்..நன்றி!!ஜென்சிக்கு வாழ்த்துக்கள்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆமாம் ஜிஎஸ்ஆர். நன்றி.

நிச்சயமாக அத்தனையும் தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்களே. நன்றி ராமலக்ஷ்மி.

மிக்க நன்றி மேனகா.

Chitra said...

அவரது மறுபிரவேசம், எந்தவித தடங்கல்கள் இல்லாத இனிய பயணமாகத் தொடர இசைப் பிரியர்களின் வாழ்த்துக்கள்.

....Best wishes to Jensi Madam!

Your song selections are very good. Thank you.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி சித்ரா.

Anonymous said...

சுவையான செய்தி. சரவெடி பாடலைக் கேட்க காத்திருக்கிறேன்

Asiya Omar said...

குறிப்பிட்ட அனைத்து பாடலும் சூப்பர்.ஜென்சிக்கு வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி பாண்டியன்.

நன்றி ஆசியா மேடம்.

Thameez said...

இன்னும் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் விட்டது போல ஒரு எண்ணம். அனால் சூப்பர் collections . வருக வருக நல்ல பாடல் தருக தருக. அனால் ஸ்ரீ காந்த் தேவா தான் கொஞ்சம் இடிக்கிறது

புவனேஸ்வரி ராமநாதன் said...

என்ன பாடல்கள்னு சொல்லுங்கள். அவசியம் சேர்த்து விடலாம். நன்றி தமீஸ்.

Sriakila said...

மீன்கொடித் தேரில் மன்மதராஜன்...பாடலும், ஆயிரம் மலர்களே... பாடலும் நான் இன்றும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல்கள்.

இந்த இரண்டுப் பாடல்களையும் கேட்கும்போது நாம் அந்தப் பாடலுடன் சேர்ந்து வானில் பறப்பது போன்ற உணர்வு!

அவர் மறுபடியும் பாட வருகிறார் என்பது புதியத் தகவல். தகவலுக்கு நன்றி!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நீங்கள் கூறிய இரு பாடல்களும் எனக்கும் மிகவும் பிடிக்கும். மிக்க நன்றி ஸ்ரீஅகிலா.

தமிழ் அமுதன் said...

ஆஹா.. அழகிய தொகுப்பு நன்றி..!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி தமிழ் அமுதன்.

R.Gopi said...

இப்போ தான் கசப்பும் கூடவே மருத்துவ குணமும் கலந்த பாகற்காய் பிட்ளை படிச்ச மாதிரி இருந்தது... உடனே தேனினும் இனிய குரல் கொண்ட ஜென்ஸி பற்றிய ஒரு இனிப்பான பதிவு....

ஜென்ஸி பாடிய ஏனைய பாடல்கள் ஹிட் வகையே.. மிக மிக வித்தியாசமான குரலமைப்பு கொண்டவர்.. மீண்டும் பாட வருகிறார் என்பதே ஒரு இனிப்பு செய்தி தான்...

மீண்டும் பாட வந்த ஜென்ஸிக்கும், அதை பதிவின் மூலம் தெரிய வைத்த உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நிச்சயம் இசை ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்திதான். நன்றி கோபி.

DEEN_UK said...

WOW...FIRST CLASS COLLECTION MADAM..
THEIVEEGA RAAGAM...THEIVEEGA KURAL..YETTHANAI THADAVAI KETTAALUM SALIKKAATHA KURAL...NANDRI MADAM....

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி தீன்.

Anonymous said...

I am a devotee of Jency though I am much elder to her. No one can dispute the mesmerism of her voice. You close your eyes while listening to her song you would see a teenage girl on the screen of your mind. Thanks a lot for posting her songs.

பால கணேஷ் said...

ஜென்ஸியின் அருமையான பாடல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். எனக்குப் பிடித்த அந்தக் குரல் மீண்டும் கேட்க முடியும் என்பதில் மகிழ்ச்சி. மெட்டி படத்தில் ‘கல்யாணம் என்னை முடிக்க’ என்று தொடங்கும் பாடல் பாடியிருப்பார். எனக்குக் கிடைக்கவில்லை. இருந்தால் இணையுங்களேன்... நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ Anonymous...

நீங்கள் சொல்வது நிஜம்தான். கருத்துக்கு மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நீங்கள் குறிப்பிட்ட பாடலை இணைக்க முயற்சிக்கிறேன்.

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கணேஷ்.

Post a Comment

Related Posts with Thumbnails