
இவரது குரல்தான் அதிசயக் குரல் என்றால், தமிழில் அட்சர சுத்தமாகப் பேசத் தெரிந்த ஒரு பாடகி, தமிழகத்தில் வேலூரில் பிறந்த ஒரு பாடகி, தமிழ் இசை உலகில் ஒரு நல்ல இடத்தில், நிறைய பாட வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றதும் ஒரு அதிசயம்தான். தமிழகத்தில் பிறந்தாலும், இந்திய இசைத் துறையையே ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் இந்த குரலழகி, இசையழகி வாணி ஜெயராம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, மொத்தம் பதினான்கு மொழிகளில் பாடியிருக்கிறார் இந்த குரலோவியம். எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் வார்த்தைகளை கொஞ்சம் கூட அதன் அர்த்தம் மாறாமல் தெளிவாக பாடுவதில் வாணி ஜெயராம் வல்லவர்.
*******
உயர்ந்தவர்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட, அவை இரண்டும்
சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட என்ற பாடலில் ஜேசுதாஸ் அவர்களின் குரலுடன் இணைந்து வரும் வாணிஜெயராம் குரலில் இழையோடும் சோகம், அந்த பாடலில் வரும், உங்களுக்காக நானே சொல்வேன், உங்களுக்காக நானே கேட்பேன், தெய்வங்கள் கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா என்ற பாடல் வரிகளின் முழுமையான அர்த்தத்தை வெளிக்கொணரும் வண்ணம் அமைந்த பாடல். பாடலின் அர்த்தம் தெரிந்து பாடுபவர்களால் தான் இத்தனை உணர்ச்சிகரமாகப் பாட முடியும். தங்களது குறைபாடு, தங்கள் குழந்தைக்கும் வந்து விடக் கூடாது என்ற சுஜாதா, கமல் நடிப்பு, தவிப்பு இந்தப் பாடலில் அற்புதமாக வெளிப் பட்டிருக்கும். இந்தப் பாடலைக் கேட்பவர்கள், கண்ணில் கண்ணீர் வடியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.
*******
பாலைவனச் சோலை படத்தில் வரும் மேகமே மேகமே என்று தொடங்கும் பாடலில், சங்கர் கணேஷ் அவர்களின் இசை விளையாட்டும், வாணி ஜெயராம் அவர்களின் கூர்மையான குரலமைப்பும், வைரமுத்து அவர்களின் வார்த்தை ஜாலங்களும், உதாரணமாக தினம் கனவு, எனதுணவு, நிலம் புதிது, விதை பழுது, எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும், அது எதற்கோ? என்ற கொக்கியில் முடியும் பாடல் வரிகள், அனைத்தும் ஒன்றிணைந்த இசைச் சித்திரம், இந்த பாடல். வட இந்திய இசையின் சாயலைக் கொண்ட பாடல் இது.
*******
அபூர்வ ராகங்கள் படத்தில் இடம் பெற்ற ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல் என்று தொடங்கும் பாடல் இவரது குரல் வளத்திற்கு தீனி போட்ட பாடல். இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும், என்றும் எனக்காக நீ அழலாம், இயற்கையில் நடக்கும், நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் என்ற வாழ்வியலை நமக்குப் பட்டவர்த்தனமாக உணர்த்தும் பாடல் வரிகள். வாழ்வின் சந்து, பொந்து, இண்டு, இடுக்கு என எல்லா விஷயங்களையும் தன் பாடல்களில் கொண்டு வந்த கருத்துப் பெட்டகம் கண்ணதாசன் இயற்றிய பாடல் அல்லவா இது. அதனால்தான் இறைவன் தன் பக்கத்தில் சீக்கிரமே அழைத்து வைத்துக் கொண்டார் போல. இவற்றையெல்லாம் தாண்டி M.S.V. அவர்களின் இசைமழை, ஸ்ரீ வித்யா அவர்களின், தனது கண்களிலேயே நவரசங்களையும்
கொட்டி நடிக்கும் திறம் பெற்ற அவரது தேர்ந்த நடிப்பு என, இவை அனைத்தும் சேர்ந்த கூட்டணி இந்தப் பாடலை உலகம் உள்ளவரை அழியாமல் வைத்திருக்கும்.
*******
வாணிஜெயராம் பாடல்களைக் குறிப்பிடும்போது இந்தப் பாடலைக் கட்டாயம் குறிப்பிட்டுச் சொல்லித்தான் ஆக வேண்டும். முள்ளும் மலரும் படத்தில் வரும், நித்தம் நித்தம் நெல்லுச் சோறு என்ற பாட்டைக் கேட்பவர்கள், இந்த பாடல் கேட்கும்போது செவிக்கு உணவிட்டு விட்டு, உடனே வயிற்றுக்கு உணவளித்துதான் ஆக வேண்டும். பழையதுக்குத் தோதா, புளிச்சிருக்கும் மோரு, பொட்டுக் கடலை தேங்காய் சேர்த்து அரச்ச துவையலு, சாம்பாரு வெங்காயம், சலிக்காது தின்னாலும், அதுக்கு இணை உலகத்துல இல்லவே இல்ல என இப்படி பாடலைக் கேட்டு விட்டு யாருக்காவது பசி எடுக்காமல் இருக்குமா. (ஆஹா, பாடல் ஆசிரியருக்குத்தான் எத்தனை தீர்க்க தரிசனம், வெங்காயத்திற்கு இணையா(விலையில்) எதுவும் இல்லை என்று பல வருடங்கள் முன்னரே சொல்லிவிட்டார்).
*******
"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது", "என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்", "கேள்வியின் நாயகனே", என்று வாணி ஜெயராம் அவர்களின் குரல் இனிமைக்கு, சாட்சிகளாக எத்தனையோ பாடல்களை உதாரணமாகக் கூறலாம். அவரது பாடல்களைக் கேட்டு அந்த சுகானுபவத்தைப் பெறலாம்.
யாரது.. சொல்லாமல் நெஞ்சள்ளி போறது.. (நெஞ்சமெல்லாம் நீயே)
என் கல்யாண வைபோகம்.. (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
கேள்வியின் நாயகனே.. (அபூர்வ ராகங்கள்)
ஏ பி சி, நீ வாசி.. (ஒரு கைதியின் டைரி)
அந்த மானைப் பாருங்கள் அழகு.. (அந்தமான் காதலி)
என்னுள்ளில் எங்கோ.. (ரோசாப்பூ ரவிக்கைக்காரி)
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே.. (வைதேகி காத்திருந்தாள்)
கவிதை கேளுங்கள்.. (புன்னகை மன்னன்)
நானே நானா.. (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
நாதமெனும் கோவிலிலே.. (மன்மத லீலை)
ஒரே நாள், உன்னை நான்.. (இளமை ஊஞ்சலாடுகிறது)
ஒரே ஜீவன், ஒன்றே உள்ளம்.. (நீயா)
70 comments:
பகிர்வு அருமை.எனக்கும் நீங்கள் குறிப்பிட்ட வாணி ஜெய்ராம பாடல்கள் அனைத்தும் பிடிக்கும்.
அனைத்தும் மிக அருமையான பாடல்கள்,பாடலை தொகுக்க மெனக்கெட்டு இருக்கீர்கள். மிக்க நன்றி
What a talent,her voice is so melodious.Vani jayaram is soo good.Thanks for sharing.
வாணி ஜெயராம் அருமையான பாடகி. அவருடைய பாடல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
மிக இனிமையான தொகுப்பு... தங்களது வர்ணிப்புகளும் மேலும் மெருகுட்டுகிறது.. மிக்க நன்றி.
அத்தனை பாடல்களும் எனக்கும் பிடித்தமானவையே: அதிலும் 'நானே நானா' - வேறு யாராலும் பாடியிருக்க முடியாது!
பகிர்வுக்கு நன்றி!
வாவ்வ்வ்.......
புவனா மேடம்... மற்றுமொரு அசத்தல் பதிவு...
வாணி ஜெயராம் அவர்களின் மந்திரன் குரலில் இந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை...
1) மல்லிகை முல்லை பூப்பந்தல், மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
2) மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ...
அருமையான பகிர்வு சகோ
நன்றி
விஜய்
அருமையான பகிர்வு. வாணி ஜெயராமின் பாடல்கள் எல்லாமே கேட்க இனிமையாய் இருக்கும். நல்ல தொகுப்பு.
நல்ல பகிர்வு மேடம் !
உண்மைவிரும்பி
மும்பை
கவிதை கேளுங்கள் ...
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான...
மூன்றுமே வெல்லப்பாகு. ஷார்ப் குரல் வாணிக்கு. பகிர்வுக்கு நன்றி. ;-))
அதெப்படி? என் தொகுப்பில் உள்ள வாணி ஜெயராமின் பாடல்கள் அனித்தும் உங்கள் தொகுப்பிலும் வருகின்றன?
மிக அழகான பாடல் தொகுப்புகள். பகிர்வுக்கு நன்றி!
சூப்பர்ர் தொகுப்பு,எனக்கு மிகவும் பிடித்த பாடகி..
@ asiya omar
பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க
நன்றி ஆசியாம்மா.
@jothi
தங்களது வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜோதி.
@ Pushpa
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை புஷ்பா.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
@ Sriakila
அருமையான பாடகித்தான் வாணிஜெயராம்.
வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீஅகிலா.
@ Anonymous
பாடல்களோடு வர்ணிப்புகளையும் சேர்த்து
ரசித்தமைக்கு மிக்க நன்றி.
@ middleclassmadhavi
ஆமாம் மாதவி. அவரது குரலால் அழகு பெற்ற
பாடல்கள் நிறைய உள்ளன. வருகை தந்து
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.
@R.Gopi
நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள் அல்லவா. ரசித்து கருத்திட்டமைக்கு
மிக்க நன்றி கோபி ஸார்.
@விஜய்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ விஜய்.
@கோவை2தில்லி
அவர் பாடல்கள் அனைத்தும் இனிமைதான்.
மிக்க நன்றிங்க.
@எனது கவிதைகள்.
தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி உண்மை விரும்பி.
@RVS
//மூன்றுமே வெல்லப்பாகு//
வெல்லப் பாகில் தேன் கலந்தது போன்ற
இனிமையான குரல் வாணிக்கு.
வருகைக்கும் தித்திப்பான கருத்துக்கும்
மிக்க நன்றி RVS.
@கக்கு - மாணிக்கம்
//அதெப்படி? என் தொகுப்பில் உள்ள வாணி ஜெயராமின் பாடல்கள் அனித்தும் உங்கள் தொகுப்பிலும் வருகின்றன? //
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மாணிக்கம்.
@S.Menaga
எனக்கும் மிகவும் பிடித்த பாடகி வாணிதான்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேனகா.
"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது",
நானே நானா...
இனிமையான பாடல்கள்.
அருமையான தொகுப்பு.டல்கள்.
You forget malligai an mannan , the most popular vani jayaram song
அருமையான பதிவு நல்ல பாடகி வண்டிச்சோலை சின்னரசுவில் இது சுகம் சுகம் எதுவோ மீண்டும் மீண்டும் என்று ஜெயச்சந்திரனுடன் போட்டி போடும் அந்த ஹம்மிங் சலிக்காது அதிகம் புதியவர்கள் அவரை பயன்படுத்தாதது நம்துர்திஸ்டவசம்.
இனிமையான தொகுப்பு... வர்ணிப்புகளும் அருமை.
@அம்பிகா
பாடல்களை ரசித்து, கருத்து சொன்னதற்கு
மிக்க நன்றி அம்பிகா.
@ thiru
//You forget malligai an mannan , the most popular vani jayaram song //
ஆமாம் திரு. மிக இனிமையான பாடல்தான்.
விடுபட்டுவிட்டது. வருகைதந்து குறிப்பிட்டமைக்கு
மிக்க நன்றி.
@Nesan
நீங்கள் சொல்வது சரிதான் நேசன். வாணி அவர்களின் குரலை பயன்படுத்தாதவர்களுக்குத்தான்
நஷ்டம். வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
@Kanchana Radhakrishnan
பாடல்களோடு சேர்த்து வர்ணனைகளையும் ரசித்து
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி காஞ்சனா.
அருமையான பாடல் தொகுப்பு.அடிக்கடி இந்த பாடல்கள் கேட்பதற்காகவே உங்கள் பிளாக்கை இப்பொழுதெல்லாம் ஓப்பன் செய்து வருகின்றேன்.
மிகவும் அருமையான தேன்சிந்தும் குரலோசை பாடல்கள், அமைதியான சூழலில் கேட்க விரும்பும் பாடல்கள். இதமாக மனம் வருடும் பதமான பாடல்கள்.
தேர்ந்தெடுத்து தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
கருணாகரன்6,இடைப்பாடி,சேலம்.
இனிமையான பாடல்கள்.
நல்ல ரசனை உங்களுக்கு.
@ ஸாதிகா said...
//அடிக்கடி இந்த பாடல்கள் கேட்பதற்காகவே உங்கள் பிளாக்கை இப்பொழுதெல்லாம் ஓப்பன் செய்து வருகின்றேன்.//
மிக்க நன்றி ஸாதிகா அக்கா. பாடல்களை
ரசிப்பதற்கும் பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும்
மீண்டும் நன்றி.
@இர.கருணாகரன்
ஐயா தங்களது முதல் வருகைக்கும்
தங்களது கருத்திற்கும் மிக்க நன்றி.
@mahavijay
பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு
மிக்க நன்றி மஹா.
அருமையான தொகுப்பு.
'எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது', 'நீராட நேரம் நல்ல நேரம்', 'பொங்கும் கடலோசை', 'தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன்', 'திருமுருகன் அருகினிலே வள்ளி', 'பொன்னே பூமியடி', 'அழைத்தால் வராவிடில்', 'இலக்கணம் மாறுதோ', 'இதோ உன் காதல் கண்மணி', 'பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால்' 'பொன்மனச் செம்மலை', 'சோழனின் மகளே வா',...
புவனா அருமையான பாடல் தொகுப்பை கொடுத்தீர்கள்.
பெரியபையன் +2வா ரொம்பநாளாய் பதிவு இல்லையே!
நானும் ஊரில் இல்லை இப்போதுதான் பார்த்தேன் உங்கள் பதிவை. இனி கேட்டு மகிழவெண்டும்.
நீங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பாடல் மறக்க முடியாத, நெகிழ வைக்கும் பாடல்.
" தந்தை பேச்சு தாய்க்குப் புரியும்.
தாத்தா நெஞ்சில் உலகம் புரியும்.
உள்ளத்தில் நல்லோர் எல்லாம் உயர்ந்தவர் இல்லையா?"
என்ற வரிகள் அருமையானவை.
எங்கம்மா சபதம் படத்தில் வாணி பாடியிருக்கும் 'அன்பு மேகமே, இங்கு ஓடி வா"
என்ற பாடம் மிகவும் இனிமையான பாடல்.
ரொம்ப நாட்கள் இடைவெளிக்குப்பின் உங்கள் பதிவைப்பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது புவனேஸ்வரி!
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்
http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_05.html
Really a tribute 2 Vaani Jeyaraman.
பாடல் தொகுப்பு அருமை. எனக்கும் இந்த இடை கால பாடல்கள் ரொம்ப பிடிக்கும். வாணி ஜெயராமின் பாடல்கள் ரொம்பவே இனிமை. அழகான பதிவு. ரொம்ப நாளா உங்களை மிஸ் பண்ணினேன். இந்த பதிவை கவனிக்கலை மன்னிக்கவும்.
விருதுகள் காத்திருக்கின்றன. பெற்றுக்கொள்ளவும்:)
உங்களை பற்றி 7 தகவலும் சொல்லணும்...அதை படிக்க நான் ஆவலாய் இருக்கிறேன்:)
http://elitefoods.blogspot.com/2011/04/awards-and-me-me.html
அனைத்துப் பாடல் தொகுப்பும் நெஞ்சள்ளிப் போன்து சொல்லாம்லேயே.பாராட்டுக்கள்.
வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_08.html
அணைத்து பாடல்களும் உயர்ந்த ரகம்
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே...
நலமா?
http://youtu.be/NDcf7yg6_CM
http://youtu.be/7DC06zwltMY
@ Muniappan pakkangal
மிக்க நன்றி ஐயா.
@ அப்பாதுரை,
வாணிஜெயராம் அவர்களின் அரிய பாடல்களை
நினைவு கூர்ந்துள்ளீர்கள். பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு
மிக்க நன்றி ஐயா.
Bhuvana dear, How are you? So happy to see your comment....keep writing. Eager to see your posts soon.
மிக்க நன்றி அம்பிகா
மிக்க நன்றி கோமதி அம்மா. நீண்ட நாள் கழித்து வருகிறேன்.
இனி அடிக்கடி சந்திப்போம்
மிக்க நன்றி மனோம்மா. மீண்டும் சந்திப்போம்.
மிக்க நன்றி சௌந்தர்
பாராட்டுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி
என்னை நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி தங்கமணி.
மிக்க நன்றி மன்னன்.
வாணி பாடல்களைக் கேட்டாலே ஆனந்தம்தான் ராஜேஷ்.
மிக்க நன்றி.
@ SelvanmanukavinGroup...
மிக்க நன்றி.
கருத்துக்கும், விருதுக்கும் மிக்க நன்றி விக்கி டியர்.
அடாடா... மிகமிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். இத்தனை நாள் தவற விட்டதற்காக வருந்தவும், வாணி அவர்களின் தேனில் தோய்ந்த வெண்கலக் குரலில் பாடல்களையும் கேட்டு மகிழவும் செய்தேன். எனக்கும் எல்லாப் பாட்டுக்களும் பிடித்தமானவையே... நன்றி.
ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கணேஷ்.
எனக்கு மிகவும் பிடித்தமான குரலுக்குச் சொந்தக்காரரை குறித்த உங்களின் பதிவு அருமை.
எனக்கும் மிகவும் பிடித்த பாடகி வாணிஜெயராம்தான். தங்களது கருத்துக்கு மிக்க நன்றி கெளதம் ஐயா.
Post a Comment