Showing posts with label படங்கள். Show all posts
Showing posts with label படங்கள். Show all posts

Wednesday, June 25, 2014


கோபுர தரிசனம் - 4

நமது பெருமை மிகு திருக்கோயில் கோபுரங்கள், நமது கலைப் பொக்கிஷங்களாகவும், நமது கட்டிடக் கலையின் அடையாளங்களாக மட்டுமல்லாது, நம் தமிழர்களின் நுணுக்கமான அறிவியல் அறிவையும் உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளன. இதனை உணர்த்தும் விதமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி திருக்கோயில் கோபுரம் அமைந்துள்ளது.

காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி

மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலய கோபுரம். இக்கோயில் ராஜகோபுர வாசலில் அதிசயிக்கத் தக்க ஒரு நிகழ்வு அன்றாடம் நிகழ்கிறது. பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக இக்கோபுர வாசல் வரும் தென்றல், பக்தர்களை மேற்கிலிருந்து கிழக்காக வீசி வாரி அணைக்கிறது. அதே நேரத்தில் கோயிலின் உள்ளே செல்லும்போது எந்த வித செயற்கை தடுப்பும் இல்லாமலேயே கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசி நம்மை திருக்கோயிலின் உள்ளே தள்ளுகிறது. ஒரே நேர்க்கோட்டில் எந்த வித தடுப்பும் இல்லாமல் இரு பக்கங்களில் இருந்தும் காற்று வீசும் வண்ணம் இக்கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. எவ்வாறென்றால் இத்திருக்கோயிலின் வேறு எந்த பகுதியிலும் காற்று வீசாத நேரத்தில் கூட இந்த கோபுரத்தின் உள்ளே, கோபுர வாசலிலே காற்றின் ஆளுமை கண்ணுக்கு மட்டுமல்ல நம் உணர்வுகளுக்கும் விருந்து.

‌பிரஹ‌தீ‌ஸ்வர‌ர் திருக்கோயில்
கங்கைகொண்ட சோழபுரம்
கைலாசநாதர் திருக்கோயில்
பிரம்மதேசம், திருநெல்வேலி


திருவேங்கடமுடையான் திருக்கோயில்
அரியக்குடி, சிவகங்கை
தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
பட்டீஸ்வரம்


வடபத்திர சாயி ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில்
ஸ்ரீவில்லிபுத்தூர்
வைரவன் சுவாமி
திருக்கோயில்
வைரவன்பட்டி, சிவகங்கை


பிரகதாம்பாள் திருக்கோயில்
திருக்கோகர்ணம்
சங்கரநாராயணர் திருக்கோயில்
சங்கரன்கோயில்


சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்
காளையார்கோயில்
தட்சிணாமூர்த்தி திருக்கோயில்
பட்டமங்கலம், சிவகங்கை


பாபநாசநாதர் திருக்கோயில்
பாபநாசம், திருநெல்வேலி
சௌமியநாராயண பெருமாள்
திருக்கோயில், திருக்கோட்டியூர்


சீனிவாச பெருமாள் திருக்கோயில்
நாச்சியார்கோவில், குடந்தை
கொப்புடை நாயகி அம்மன்
திருக்கோயில், காரைக்குடி


கோபுர தரிசனம் - 1

ஸ்ரீரங்கத்து கோபுரங்கள் (கோபுர தரிசனம் - 2)

கோபுர தரிசனம் - 3

Thursday, December 29, 2011


கோபுர தரிசனம் - 3

தென்னகத்து திருக்கோயில்களின் பிரதான அடையாளமே, திருக்கோயில் கோபுரங்கள்தான். ஒவ்வொரு திருக்கோயிலின் வாசலில் மட்டுமல்லாது திருக்கோயிலின் உட்புறம் அமைந்துள்ள எல்லா சுவாமி சன்னதிகளுக்கும், சிறியது முதலாக பெரியது வரை கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயிலின் பிரதான ராஜ கோபுரத்தில் எல்லா விதமான சிலைகளும் வடிக்கப் பட்டிருக்கும். எல்லா கடவுள்களின் அவதாரம் முதல் அன்று வாழ்ந்த மனிதர்களின் அடையாளம் வரை கோயில் கோபுரத்தில் வடிக்கப்பட்டிருக்கும்.

ராஜகோபாலசுவாமி திருக்கோயில்
மன்னார்குடி
மார்க்கசகாய சுவாமி திருக்கோயில்
மூவலூர்


வானமாமலை திருக்கோயில்
நாங்குநேரி
சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில்
தாடிக்கொம்பு


ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருவெண்காடு
பிரகதீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்


மங்களாம்பிகை திருக்கோயில்
திருமங்கலக்குடி
ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில்
குணசீலம்


ஆமருவியப்பன் திருக்கோயில்
தேரழந்தூர்
சிவன் திருக்கோயில்
தேரழந்தூர்


முல்லைவனநாதர் திருக்கோயில்
பாபநாசம்
ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்
திருப்பைஞ்ஞீலி


சத்யகிரீஸ்வரர் திருக்கோயில்
திருமெய்யம்
பாலைவனநாதர் திருக்கோயில்
பாபநாசம்


தாமரைக்கண்ணன் திருக்கோயில்
திருவெள்ளறை
கோபுர தரிசனத்தில் இன்னொரு வசதியும் உண்டு. திருக்கோயிலின் உள்ளே செல்லாமலேயே கோபுரத்தை பார்த்தாலே தெரிந்துகொள்ளும் வண்ணம் அக்கோயில் மூலவரின் சிற்பம் கோபுரத்தின் வாயிலின் நேர் மேலாக செதுக்கப் பட்டிருக்கும். நாம் எந்த கோயில் சென்றாலும் கோபுரத்தின் அழகை கீழிருந்து மட்டுமல்லாது, திருக்கோயில் கோபுரத்தின் உள் பக்கமாகவோ, அல்லது வெளிப் புறமாவோ கோபுரத்தின் மேலே சென்று பார்க்க வசதியாக படிகள் அமைக்கப் பட்டிருக்கும். திருக்கோயில் பணியாளர்களைக் கேட்டால் அதன் விவரம் சொல்வார்கள். படிகள் ஏறி மேலே சென்று கோபுர அழகை காணும் போது ஏற்படும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

உதாரணமாக தஞ்சை பெரியகோவிலில், பிரதான கோபுரத்தின் உள் புறமாக படி ஏறிச் சென்று அதன் உள் கூட்டின் அமைப்பை தரிசித்து மகிழலாம். ஆச்சர்யத்தில் உறையலாம். நம் தமிழ் மக்களின், மன்னர்களின் அறிவுத் திறனுக்கும், கலை நயத்திற்கும், இந்த கோயில் கோபுரங்கள் ஒன்றே சாட்சியாகும். கோபுரத்தின் உச்சியில் அமைக்கப் பட்டிருக்கும் கலசங்களின் மேல் படும் சூரிய ஒளி பல வேதியியல் மாற்றங்களை உண்டாக்கி நமக்கு நன்மை பயப்பதாக சொல்கிறார்கள் முன்னோர்கள். இது போன்ற கிடைத்தற்கு அரிய பொக்கிஷங்களை பேணிப் பாதுகாப்பதே நம் இளைய தலைமுறையினரின் தலையாய கடமை எனலாம்.

கோபுர தரிசனம் - 1

ஸ்ரீரங்கத்து கோபுரங்கள் (கோபுர தரிசனம் - 2)

Saturday, November 13, 2010


கோபுர தரிசனம் - 1

திருக்கோயில்கள் என்றாலே நம் மனக்கண்முன் முதலில் வந்து நிற்பது கோயில் கோபுரங்கள் தான். கோயிலின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாத தருணங்களில் கூட கோயிலின் வெளியே நின்று கோபுர தரிசனத்திலேயே மனம் திருப்தி அடைவோர் உண்டு. திருக்கோயில் கோபுர தரிசனங்கள் அருகில் சென்றால் தான் கிடைக்கும் என்றில்லை. பல மைல் தூரத்துக்கு அப்பாலிருந்தும் கூட கோபுர தரிசனம் நமக்குக் கிடைக்கும் வண்ணம் அக்காலத்தில் கோயில் கோபுரங்களை கட்டி வைத்து உள்ளார்கள் புண்ணியவான்கள். நாங்கள் சென்று பார்த்த கோயில்களில் எடுத்த கோபுர படங்கள் சிலவற்றை மட்டும் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

மயூரநாதர் திருக்கோயில்,
மயிலாடுதுறை
அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்


கைலாசநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்கூடலழகர் திருக்கோயில்,
மதுரை


திருமால்பாடி டிரான்ஸ்பர் பெருமாள் திருக்கோயில்ஸ்தல ஸயன பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம்


மதுரை மீனாட்சி திருக்கோயில்முருதேஷ்வர் கோயில், கர்நாடகா


விஜயாசன பெருமாள் திருக்கோயில், நத்தம்திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயில்


மயான திருக்கடவூர் வனதிருப்பதி, திருநெல்வேலி


குடுமியான்மலை திருக்கோயில், புதுக்கோட்டை ஏரிகாத்த ராமர் திருக்கோயில், மதுராந்தகம்


சிருங்கேரி வித்யாசங்கரா கோயில், கர்நாடகாமஹா சரஸ்வதி அம்மன் ஆலயம், கூத்தனூர்


ஆலங்குடி குரு பரிகார ஸ்தலம்கஞ்சனூர் சுக்ரன் பரிகார ஸ்தலம்


லலிதாம்பிகை திருகோயில்,
திருமீயச்சூர்
நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி


கள்ளபிரான் சுவாமி திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம்திருஇந்தளூர் திருக்கோயில், மயிலாடுதுறை

திருக்கோயில் தரிசனத்தின்போது தெய்வத்தை மட்டும் நினைக்காமல், இத்தகைய வரலாற்றுச் சின்னங்களை நமக்காக கட்டிய அரசர்களையும், தங்கள் வியர்வை சிந்தி வேலை பார்த்தவர்களையும் சில நிமிடங்கள் நாம் நினைத்துப் பார்ப்பது அவர்களுக்கு நாம் செய்யும் ஆத்ம பரிபாலனம்.

ஸ்ரீரங்கத்து கோபுரங்கள் (கோபுர தரிசனம் - 2)

கோபுர தரிசனம் - 3

Related Posts with Thumbnails