நமது பெருமை மிகு திருக்கோயில் கோபுரங்கள், நமது கலைப் பொக்கிஷங்களாகவும், நமது கட்டிடக் கலையின் அடையாளங்களாக மட்டுமல்லாது, நம் தமிழர்களின் நுணுக்கமான அறிவியல் அறிவையும் உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளன. இதனை உணர்த்தும் விதமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி திருக்கோயில் கோபுரம் அமைந்துள்ளது.
காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி
மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலய கோபுரம். இக்கோயில் ராஜகோபுர வாசலில் அதிசயிக்கத் தக்க ஒரு நிகழ்வு அன்றாடம் நிகழ்கிறது. பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக இக்கோபுர வாசல் வரும் தென்றல், பக்தர்களை மேற்கிலிருந்து கிழக்காக வீசி வாரி அணைக்கிறது. அதே நேரத்தில் கோயிலின் உள்ளே செல்லும்போது எந்த வித செயற்கை தடுப்பும் இல்லாமலேயே கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசி நம்மை திருக்கோயிலின் உள்ளே தள்ளுகிறது. ஒரே நேர்க்கோட்டில் எந்த வித தடுப்பும் இல்லாமல் இரு பக்கங்களில் இருந்தும் காற்று வீசும் வண்ணம் இக்கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. எவ்வாறென்றால் இத்திருக்கோயிலின் வேறு எந்த பகுதியிலும் காற்று வீசாத நேரத்தில் கூட இந்த கோபுரத்தின் உள்ளே, கோபுர வாசலிலே காற்றின் ஆளுமை கண்ணுக்கு மட்டுமல்ல நம் உணர்வுகளுக்கும் விருந்து.
கோபுர தரிசனம் - 1
ஸ்ரீரங்கத்து கோபுரங்கள் (கோபுர தரிசனம் - 2)
கோபுர தரிசனம் - 3
மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலய கோபுரம். இக்கோயில் ராஜகோபுர வாசலில் அதிசயிக்கத் தக்க ஒரு நிகழ்வு அன்றாடம் நிகழ்கிறது. பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக இக்கோபுர வாசல் வரும் தென்றல், பக்தர்களை மேற்கிலிருந்து கிழக்காக வீசி வாரி அணைக்கிறது. அதே நேரத்தில் கோயிலின் உள்ளே செல்லும்போது எந்த வித செயற்கை தடுப்பும் இல்லாமலேயே கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசி நம்மை திருக்கோயிலின் உள்ளே தள்ளுகிறது. ஒரே நேர்க்கோட்டில் எந்த வித தடுப்பும் இல்லாமல் இரு பக்கங்களில் இருந்தும் காற்று வீசும் வண்ணம் இக்கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. எவ்வாறென்றால் இத்திருக்கோயிலின் வேறு எந்த பகுதியிலும் காற்று வீசாத நேரத்தில் கூட இந்த கோபுரத்தின் உள்ளே, கோபுர வாசலிலே காற்றின் ஆளுமை கண்ணுக்கு மட்டுமல்ல நம் உணர்வுகளுக்கும் விருந்து.
பிரஹதீஸ்வரர் திருக்கோயில் கங்கைகொண்ட சோழபுரம் ![]() | கைலாசநாதர் திருக்கோயில் பிரம்மதேசம், திருநெல்வேலி ![]() |
திருவேங்கடமுடையான் திருக்கோயில் அரியக்குடி, சிவகங்கை ![]() | தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் பட்டீஸ்வரம் ![]() |
வடபத்திர சாயி ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ![]() | வைரவன் சுவாமி திருக்கோயில் வைரவன்பட்டி, சிவகங்கை ![]() |
பிரகதாம்பாள் திருக்கோயில் திருக்கோகர்ணம் ![]() | சங்கரநாராயணர் திருக்கோயில் சங்கரன்கோயில் ![]() |
சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார்கோயில் ![]() | தட்சிணாமூர்த்தி திருக்கோயில் பட்டமங்கலம், சிவகங்கை ![]() |
பாபநாசநாதர் திருக்கோயில் பாபநாசம், திருநெல்வேலி ![]() | சௌமியநாராயண பெருமாள் திருக்கோயில், திருக்கோட்டியூர் ![]() |
சீனிவாச பெருமாள் திருக்கோயில் நாச்சியார்கோவில், குடந்தை ![]() | கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில், காரைக்குடி ![]() |
18 comments:
அருமையான பகிர்வு.
இத்திருக்கோயிலின் வேறு எந்த பகுதியிலும் காற்று வீசாத நேரத்தில் கூட இந்த கோபுரத்தின் உள்ளே, கோபுர வாசலிலே காற்றின் ஆளுமை கண்ணுக்கு மட்டுமல்ல நம் உணர்வுகளுக்கும் விருந்து. -
உண்மையாகவே உணர்ந்தபோது பிரமித்து வியந்தேன்..
அருமையான கோபுரதரிசனங்களுக்கு நன்றிகள்..
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" - இன்றைக்கு தங்களால் கோபுர தரிசனம் கிடைத்தது. நன்றி
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.
ஆம்,உண்மை எங்களுக்கு ஒரு பதிவில் அத்தனை கோவிலின் கோபுர தரிசனம் காணவைத்த புவனாவுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
தென்காசி போய் பலவருடங்கள் ஆகி விட்டது கோபுர தரிசனம் கண்டவுடன் காண ஆவல் வந்து விட்டது.
வெகு நாட்களாய் காணவில்லையே! ஆலய தரிசனம்(ஆன்மீக பயணம்) சென்றீர்களா?
@ராமலக்ஷ்மி.....
மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
@இராஜராஜேஸ்வரி........
ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி.
@Chokkan Subramanian.....
வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சொக்கன்.
@கோமதி அரசு .....
கோமதி அம்மா நலமாக உள்ளீர்களா? வருகை தந்து நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி கோமதி அம்மா.
பிள்ளைகளின் பள்ளி விடுமுறை நேரத்தில் நிறைய கோவில்களை தரிசித்து வந்தோம் அம்மா. அப்படி கிடைத்ததுதான் திருநெல்வேலி பக்கப் பயணம். தென்காசி, பாபநாசம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் என அந்தப் பக்கம் நிறைய திருக்கோயில்கள் சென்று வந்தோம் அம்மா. அதனால்தான் இடையில் கொஞ்சம் வலைப் பக்கம் வர முடியவில்லை.
இனி தொடர்வேன் அம்மா. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதி அம்மா.
//வைரவன் சுவாமி திருக்கோயில்,வைரவன்பட்டி, சிவகங்கை// இவ்வளவு பெரிய கோபுரத்துடன் வைரவருக்குக் கோவிலா?
இலங்கையில் வைரவருக்குக் மிகச் சிறிய கோவில்களே உண்டு. யாழ்ப்பாணம் ,கொக்குவில்,தலையாளி வைரவர் கோவிலே மிகப் பெரிய உள்வீதி, வெளி வீதியுடன் கூடிய கோவில்.
தமிழரின் பாரம்பரிய கட்டிடக்கலையின் சாட்சி இக்கோபுரங்கள்.
பிரஹதீஸ்வரர் திருக்கோயில்,கங்கைகொண்ட சோழபுரம்(பெரிய கோவில்) இக்கோபுரமின்றே தரிசித்துள்ளேன்.
இலங்கையில் இவ்வளவு பெரிய கோபுரங்கள் இல்லை. இப்போது பல கோவில்களுக்கு ஓரளவு கோபுரங்கள் கட்டுகிறார்கள்.
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் சோழரால் கட்டப்பட்ட அழகிய பழைய கோபுரங்கள் உண்டு.
நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு இப்போது ஒரு பெரிய கோபுரம் கட்டியுள்ளார்கள்.
இவற்றைத் தரிசிக்க, ஆசையிருக்கலாம், அழைப்பும் இருக்கவேண்டுமே!
ஐயா வணக்கம். வருகை தந்து தங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி யோகன். வாழ்த்துக்கள். வைரவன் திருக்கோயில் பற்றிய விரிவான எனது பதிவின் இணைப்பினை தந்துள்ளேன். தரிசித்து மகிழுங்கள்.
http://maragadham.blogspot.in/2012/01/blog-post_09.html
கோபுரதரிசனம் கோடி புண்ணியம் காண்பவர்களுக்கே இப்படியென்றால் இதை காணவைத்த தங்களுக்கு மில்லியன் புண்ணியம் கிடைக்கட்டும் சகோதரி, நேரமிருப்பின் எனது வலைப்பூவிற்க்கு(ம்) வரவும்.
அன்புடன்
Killergee
அன்பின் புவனேஸ்வரி இராமநாதன் - அருமையான பதிவு - கோபுர தரிசனம் கோடி புண்ணியம் எனக் கூறுவர். எத்த்னை கோபுரங்களின் புகைப் படங்கள் - விளக்கங்கள் - ஆன்மீகத்தினைப் பரப்பும் வண்ணம் பதிவு இட்டிருக்கிறீர்கள் - நற் செயல் - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
கோபுரங்கள் அனைத்தும் மிக அழகு!!
தங்கள் வலைப்பதிவைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். பாராட்டுதலுக்குரியது தங்கள் பணி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@ KILLERGEE Devakottai.....
வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரரே. வாழ்த்துக்கள்.
@ cheena (சீனா)......
வருகை தந்து தங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஐயா. வாழ்த்துக்கள்.
@ மனோ சாமிநாதன்....
வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மனோம்மா.
@ முனைவர் இரா.குணசீலன்...
வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி குணசீலன். வாழ்த்துக்கள்.
Post a Comment