Saturday, September 18, 2010


மந்திரங்களின் மகிமைகள் - பகுதி 7

புரட்டாசி மாதம் திருமாலுக்கு உகந்த மாதம். புரட்டாசி மாதம் சனிக் கிழமைகளில் பெருமாளை நினைத்து நமது இல்லங்களில் தளியல் போடுவது வழக்கம். அன்று சுவாமிக்கு வடை, பாயசம் செய்து, பெருமாளுக்கு வடை மாலை சாற்றி, அதோடு மட்டுமல்லாது முருங்கைக் கீரையில் துவட்டல் செய்து பெருமாளுக்குப் படைப்பது மிக விசேஷம்.


திருமால் துதி
:
வந்தாய் போலே வாராதாய் !
வாராதாய் போல் வருவானே !
செந்தா மரைக்கண் செங்கனிவாய் !
நால்தோள் அமுதே ! என்னுயிரே !
சிந்தா மணிகள் பகர் அல்லைப்
பகல் செய் திருவேங் கடத்தானே
அந்தோ ! அடியேன் உன் பாதம்
அகல கில்லேன் இறையுமே !
அகல கில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா !
நிகரில் புகழாய் ! உலகம் மூன்று
உடையாய் ! என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிகணங்கள்
விரும்பும் திருவேங் கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே !
செடியாய வல்வினைகள்
தீர்க்கும் திருமாலே !
நெடியானே ! வேங்கடவா !
நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும்
அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன்
பவளவாய் காண்பேனே !
வந்தாய்; என் மனம் புகுந்தாய்; மன்னி நின்றாய்
நந்நாத கொழுஞ்சுடரே ! எங்கள் நம்பீ !
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் ! இனி யான் உனை என்றும் விடேனே
தெரியேன் பாலகனாய் பல
தீமைகள் செய்துவிட்டேன்
பெரியேன் ஆயினபின்
பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர் பூம்பொழில் சூழ்
கனமா மலை வேங்கடவா !
அரியே ! வந்தடைந்தேன்
அடியேனை ஆட்கொண்டருளே !

பச்சை மாமலை போல் மேனி..


3 comments:

R. Gopi said...

\\மாதம் சனிக் கிழமைகளில் பெருமாளை நினைத்து நமது இல்லங்களில் தளியல் போடுவது வழக்கம். அன்று சுவாமிக்கு வடை, பாயசம் செய்து, பெருமாளுக்கு வடை மாலை சாற்றி, அதோடு மட்டுமல்லாது முருங்கைக் கீரையில் துவட்டல் செய்து பெருமாளுக்குப் படைப்பது மிக விசேஷம்.\\

நாங்கள் சிறிய கொண்டைக் கடலை குழம்பு, கீரை துவட்டல், புளித் தண்ணீரை ஊற்றி வதக்கிய கொத்தவரங்காய், சாதம் எல்லாவற்றையும் கலந்து உருண்டை சாதம் என்று படைப்போம். நல்ல ருசியாக இருக்கும்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

கேட்கவே ருசியாக இருக்கிறதே. நன்றி கோபி.

R.Gopi said...

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா...

அந்த திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா....

வழக்கம் போலவே அழகாக பக்தி வழிந்தோடியது... படிக்க ஆனந்தமாய் இருந்தது...

பெருமாளின் கடைக்கண் பார்வை நம் அனைவரின் மேலும் பட வேண்டும் என்பதே என் அவா...

Post a Comment

Related Posts with Thumbnails