நிலக்கடலை : 1/4 படி
கடுகு : 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் : 2
பச்சை மிளகாய் : 1
பெருங்காயத்தூள் : 1 சிட்டிகை
தேங்காய் : 1/4 மூடி
மிளகாய்த்தூள் : 2 சிட்டிகை
நல்லெண்ணெய் : 1 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
கொத்தமல்லித் தழை : சிறிதளவு
செய்முறை:
நிலக்கடலையை நன்கு களைந்துவிட்டு ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் நிலக்கடலை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அதில் சிறிது பெருங்காயம் கலந்து நன்கு வேக வைக்கவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், மிளகாய்தூள், தேவையான அளவு உப்பு இவற்றைப் போட்டு தாளித்து அதன்மேல் வெந்த நிலக்கடலையைப் போட்டு கலக்கவும். ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கிளறி இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, துருவிய தேங்காய் தூவி கலந்தால் நிலக்கடலை சுண்டல் தயார்.
மிகச் சுலபமாகத் தயார் செய்யக் கூடிய உணவு இது. ஆனால் இதனால் கிடைக்கும் சத்தோ மிக அதிகம். பொதுவாக நிலக் கடலையை அவித்து சாப்பிடுவோம். இப்போது உரித்த பச்சைக் கடலை பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அவற்றை சிறிது நேரம் ஊற வைத்து இவ்வாறு சுண்டல் போல் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுவர்.
20 comments:
சுண்டல் வகைகளில் ஒன்றை, மாலை டிபனுக்கு அடிக்கடி செய்வேன். இதையும் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
நல்ல குறிப்புக்கு நன்றி.
wow luvly chickpeas salad
நிலக்கடலை சாப்பிட்டால்
நிஜமாகவே இதயத்திற்கு நல்லதாம்
நித்தமும் சாப்பிட சற்றே வித்தியசமாய்
நினைத்து பார்க்கும் வகையில் இருந்துவிட்டால்
நிம்மதியான வாழ்வுதான் ஐயமே இல்லை நன்றி புவனா உங்களின் படைப்புக்கு...
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல் வகைகளில் இதுவும் ஒன்று..அருமை!!
செய்துபாத்துட்டு சொல்லுங்க சித்ரா. நன்றி.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி மோகன்.
நன்றி கமலகண்ணன்.
நன்றி மேனகா.
எங்க வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சுண்டல்...நான் எப்பொழுதும் தாளிப்பு கொடுப்பதில்லை...ஆனால் படத்தினை பார்த்ததுமே செய்துவிட தோனுது...தாளிப்பு கொடுத்துவிட்டால் போச்சு...நல்லெண்ணெய் சேர்த்து தாளிப்பு கொடுத்தால் சுண்டால் நல்லா இருக்குமா...நான் இதுவரை சுண்டலிற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தியதில்லை...
எந்த தாளிப்புக்கும் நல்லெண்ணெய் சேர்த்தால் சுவையை கூட்டும். வாசனையாகவும் இருக்கும். நல்லதும் கூட. நன்றி கீதா.
நிலக்கடலை சுண்டல் செய்வதுண்டு ,தாளித்தாலும் இதுவரை இந்த சுண்டலுக்கு தேங்காய் சேர்த்ததில்லை.அருமை.
தேங்காய் சேர்த்து செய்துபாத்துட்டு சொல்லுங்க. நன்றி ஆசியா மேடம்.
எப்போதும் செய்யும் சுண்டல்தான் என்றாலும் உங்களின் புகைப்படத்தின் அழகு உடனே மறுபடியும் செய்து பார்க்கத் தூண்டுகிறது!!
நன்றி மனோ மேடம்.
பார்க்கும் போதே எனக்கும் ஒரு கப் என்று கேக்கத் தோணுது புவனா..:)0
நன்றி தேனம்மை மேடம்.
அடடா...
சுடச்சுட ஒரு கப் கெடச்சா அப்படியே சாப்பிட்டுட்டு இன்னொரு கப் கேக்கலாமே!!ன்னு சொல்ல வைக்கற மாதிரி இருக்கு....
கொண்டைக்கடலை சுண்டலுக்கு பின் எனக்கு மிகவும் பிடித்த சுண்டல் இது தான்...
இப்போ எல்லாம், நவராத்திரி சமயத்தில் கூட இது போன்ற வித்தியாசமான சுண்டல்கள் செய்வதில்லையோ!!
அன்பின் புவனேஸ்வரி
செஞ்சு பாக்கச் சொல்லுவோம் - நல்லாத்தான் இருக்கும் -
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நன்றி கோபி.
செய்துபாத்துட்டு சொல்லுங்க. நன்றி சீனா அவர்களே.
நான் பல முறை செஞ்சுருக்கேங்க. நேரம் குறைவா இருக்கும்போது சட்னு செஞ்சுக்க முடியுது. கடலையை ஒரு அரைமணி நேரம் ஊறவச்சு, நல்லா கழுவிட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் வச்சுருவேன். ஒரு கப் கடலைக்கு அஞ்சே நிமிஷம் போதும்.
மற்ற தாளிப்பு எல்லாம் நீங்க சொன்னதுபோலத்தான். ஒரே ஒரு காய்ஞ்ச மிளகாய்.
நம்ம வீட்டில் நவராத்திரியில் ஒரு நாள் இது கண்டிப்பாக உண்டு.
நல்ல குறிப்பு.
செய்முறை விளக்கத்துக்கு மிக்க நன்றி துளசி கோபால்.
நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.
Post a Comment