பச்சரிசி : 1/4 படி
வெந்தயம் : 4 தேக்கரண்டி
பயத்தம் பருப்பு : 1 பிடி
பூண்டு : 5 பல்
பால் : 1/4 லிட்டர்
தேங்காய் : 1/4 மூடி
உப்பு : தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாலைக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரில் பச்சரிசி, பயத்தம் பருப்பு, வெந்தயம், பூண்டு இவற்றைப் போட்டு, சாதம் வடிப்பதற்கு ஊற்றுவதை விட இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் ஊற்றி நன்கு குழைய வேக வைக்கவும்.
வெந்த அரிசி கலவையில் உப்பு கலந்து தட்டில் நேரடியாக வைத்து பால் ஊற்றி, தேங்காய் துருவல் கலந்தும் சாப்பிடலாம். இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் இந்த கலவையைப் போட்டு கொஞ்சம், தண்ணீர், உப்பு, பால், தேங்காய் துருவல் கலந்து கஞ்சி பதத்தில் தயார் செய்தும் பருகலாம்.
வெந்தயம் நார்ச் சத்து நிறைந்தது. அதனாலேயே ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை இவற்றின் அளவை சரியான அளவில் வைத்திட வெந்தயம் உதவுகிறது. வெந்தயத்தினை அன்றாட சமையலில் சேர்ப்பதன் மூலம் பல உடல் கோளாறுகளை சரிசெய்யலாம்.நமக்கு சில நேரங்களில் நாம் செய்யும் சமையல் வேலை சீக்கிரமும் முடிய வேண்டும், வயிறும் அடங்க வேண்டும் என்று தோன்றும். இப்படிப்பட்ட நேரங்களில் செய்ய வேண்டிய சாப்பாடு தான் இந்த வெந்தயக் கஞ்சி. ஒரு வயது குழந்தை முதல் எண்பது வயது பெரியவர்கள் வரை உண்ணத் தகுதியான உணவு இது.
முதல் நாள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கவில்லை, பசியில்லை என்றால், அடுத்த நாள் காலையில் இந்த வெந்தயக் கஞ்சி சாப்பிட, அடுத்த இரண்டு மணி நேரத்தில் கபகபவென்று பசிக்க ஆரம்பித்துவிடும். நம் வயிற்றுப் பிரச்சினையும் தீர்ந்துவிடும். ஏனென்றால் வெந்தயத்தின் மகிமை அப்படி. வெந்தயத்திற்கு வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும் திறன் உள்ளது.
முதல் நாள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கவில்லை, பசியில்லை என்றால், அடுத்த நாள் காலையில் இந்த வெந்தயக் கஞ்சி சாப்பிட, அடுத்த இரண்டு மணி நேரத்தில் கபகபவென்று பசிக்க ஆரம்பித்துவிடும். நம் வயிற்றுப் பிரச்சினையும் தீர்ந்துவிடும். ஏனென்றால் வெந்தயத்தின் மகிமை அப்படி. வெந்தயத்திற்கு வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும் திறன் உள்ளது.
8 comments:
New recipe to me .Looks yummy!!
New here also .Do drop by padhuskitchen when u find time
வெந்தயக்ஞ்சி வெள்ளையாக அருமை.
வயிற்றுக்கு இதமான அருமையான கஞ்சி!!
நன்றி Padhu.
நன்றி ஆசியாக்கா.
நன்றி மேனகா.
வெந்தயம் நார்ச் சத்து நிறைந்தது. அதனாலேயே ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை இவற்றின் அளவை சரியான அளவில் வைத்திட வெந்தயம் உதவுகிறது. வெந்தயத்தினை அன்றாட சமையலில் சேர்ப்பதன் மூலம் பல உடல் கோளாறுகளை சரிசெய்யலாம்.
.....மருத்துவ குணம் கொண்ட வெந்தயம் பற்றிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.
நன்றி சித்ரா.
பயத்தம் பருப்பும் தேங்க்காயும் தவிர மத்தது போட்டு செய்வேங்க நான்.. தொட்டுக்க பிள்ளைனஙகளுக்கு பச்சைப்பயிறு சுண்டலும் , வெல்லமும் வேணும். எனக்கு கூடவே கொஞ்சூண்டு ஊறுகாய்.. ஆகா வேலையும் ஈஸி உடம்புக்கும் நல்லது ன்னு சரியாச் சொன்னீங்க...
தொட்டுக்க பச்சைப்பயிறு சுண்டல், வெல்லம் சூப்பரா இருக்கும் போலருக்கே. நானும் சாப்பிட்டு பார்க்கிறேன். நன்றி முத்துலெட்சுமி.
Post a Comment