கடலைப் பருப்பு : 250 கிராம்
அச்சு வெல்லம் : 4
தேங்காய் : 1/4 மூடி
உப்பு : ஒரு சிட்டிகை
கடலை எண்ணெய் : பொரிக்க
செய்முறை:
கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். வெல்லத்தை பொடித்துக் கொண்டு ஊறிய கடலைப் பருப்புடன் போட்டு வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். துருவிய தேங்காய், ஒரு துளி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அடுப்பை இளந்தீயில் வைத்து வடை போல தட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மதுர வடை தயார்.
வீட்டு விசேஷங்களுக்கு நாம் இனிப்பு செய்து படைப்பது வழக்கம். சீக்கிரத்தில் செய்து படைப்பதற்குத் தோதான உணவு வகை இந்த மதுர வடை. விசேஷ தினத்தன்று அவசர வேலை ஏதும் இருந்தால் நம்மால் விரிவாக எப்போதும் போல வடை, பாயசம் செய்து படைக்க முடியவில்லை என்றால் இந்த வடையை படைத்தோம் என்றால், வேலை சுலபமாக முடியும். விருந்தினர்கள் நம் வீட்டிற்கு திடீர் விஜயம் செய்தார்கள் என்றால் உடனடியாகவும், வித்தியாசமாகவும் செய்து கொடுக்கத் தகுந்த சிற்றுண்டி இந்த மதுர வடை.
19 comments:
மதுரமாக இருக்கு.சூப்பர்.
சுலபமாக செய்யக் கூடிய இனிப்பு வடை. இப்போதுதான் அறிகிறேன். பகிர்வுக்கு நன்றி.
நன்றி ஆசியா மேடம்.
நன்றி ராமலக்ஷ்மி மேடம்.
வடை பற்றி ஒரு தனிப்பதிவே எழுத விருப்பம் எனக்கு. வடை செய்முறை பற்றி அன்று. நிச்சயம் அது பற்றி எழுதினால் பதிவும் நன்றாக வராது. அதன்படி செய்யும் வடையும் நன்றாக வராது:) வடை பற்றிய சுவாரஸ்யமான தொகுப்பாக எழுத எண்ணம். அந்தப் பதிவில் உங்களின் இந்தப் பதிவின் சுட்டியைத் தர அனுமதி உண்டா?
சாம்பிளுக்கு ஒரு சில வடைகள், மன்னிக்கவும், பதிவில் எழுத நினைக்கும் விஷயங்கள்.
இட்லி வடை என்ற இரு பெரிய கோட்டை வாசல்களைத் தாண்டித்தான் தமிழ்க் கலாசாரம் என்ற ஊருக்குள்ளேயே நுழைய முடியும்.
ஏமாற்றத்தின் வலியை, ஒரு பொருள் கைக்குக் கிடைக்காத சோகத்தை எவ்வளவு வார்த்தைகள் கொண்டு எழுதினாலும் சரி வர சொல்ல முடிவதில்லை. ஆச்சரியம். 'வட போச்சே' என்ற இரு சொற்கள் அந்த வேலையை சிறப்பாக செய்கின்றன.
என்ன சாம்பிள் சுவையாக இருக்கிறதா? மறுபடியும் மன்னிக்கவும். எழுத நினைக்கும் விஷயங்கள் சுவையாக உள்ளனவா?
நன்றி.
மதுரமா இருக்கு
இலகுவாக செய்யக் கூடியது தான்.. நல்ல சுவையாகவும் இருக்கும் என்று தெரிகிறது.. ருசி பார்க்கணும்ல சோ நமக்கு ஒரு பார்சல் அனுப்பிடுங்க.. :))
@Gopi Ramamoorthy,
சாம்பிளே பிரமாதமா இருக்கே கோபி. வடைய பத்தி சமையல் குறிப்பு அல்லாத ஒரு பதிவா..?! நிச்சயம் சுவையாக தான் இருக்கும். கலக்குங்க. வடை பத்தி உங்க பதிவுல எத்தன சொல்வடைகள சேர்க்கப்போறீங்க:) ஏதோ நம்மளால முடிஞ்சது. இந்த பதிவின் சுட்டியையும் உபயோகித்துக் கொள்ளுங்கள். நன்றி.
@Chef.Palani Murugan,
நன்றி செஃப். பழனி முருகன்.
@Dharshi,
மிகவும் இலகுவாக செய்யக்கூடியது தான். பார்சல் தானே? அப்படியே தட்டோட எடுத்துக்குங்க. நன்றி.
super.. I will prepare this @ home & make my wife surprised..
நன்றி மாதவன். செய்து பார்த்துட்டு விளைவுகள சொல்லுங்க:)
அட.. வட புதுசா இருக்கே.. :)
நன்றி முத்துலெட்சுமி.
அட! பாக்கிறதுக்கே நல்லாருக்கே வட...
வித்தியாசமான வடை,இப்போழுதுதான் கேள்விபடுகிறேன்....
நன்றி ஸ்ரீஅகிலா.
நன்றி மேனகா. செய்து பாத்துட்டு சொல்லுங்க.
மதுர வடை புதுசாக இருக்கிறது! கலரும் வடையின் அழகும் உடனேயே செய்து பார்க்கத் தூண்டுகிறது!
மிக்க நன்றி மனோ மேடம். செய்து பாத்துட்டு சொல்லுங்க.
நன்றி மோகன்.
Post a Comment