Sunday, September 12, 2010


மலேசியா வாசுதேவன் - என்றும் இனியவை

சமீபத்தில் ஒரு பிரபல வார இதழில், கம்பீரமான, அதே நேரத்தில் மென்மையான குரலுக்குச் சொந்தக்காரரான பிரபல பாடகர் திரு. மலேசியா வாசுதேவன் அவர்களின் பேட்டியினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில வருடங்களாக அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அத்தகைய சூழ்நிலையில் திரையுலகை சேர்ந்தவர்கள் ஓரிருவரைத் தவிர யாரும் தன்னை வந்து பார்க்கவோ, தன்னை தொலைபேசியின் மூலமாகக் கூட யாரும் நலம் விசாரிக்கவில்லை என மிகவும் வருத்தப்பட்டுக் கூறியிருந்தார்.


மலேசியா வாசுதேவன் அவர்களை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வேண்டுமானால் அவரை மறந்திருக்கலாம். அவரைப் பார்த்தே இராத, அவரது குரலில் ஒலிக்கும் பாடல்கள் மூலமாக மட்டுமே அவரைக் காணும் எங்களைப் போன்ற கோடானுகோடி இசை ரசிகர்கள் அவரைப் போன்றவர்களை மறப்பதில்லை. நல்ல இசையையும் சரி, அதனை இவ்வுலகிற்குத் தருபவர்களையும் சரி இசை ரசிகர்கள் என்றுமே மறப்பதில்லை. என்னைப் பொறுத்த வரை இசைக்கு உயிர் கொடுப்பவர்கள் கடவுளுக்கு மிக அருகில் இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களுள் ஒருவரான திரு. மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய பாடல்களை நாங்கள் இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அதற்கு பின்வரும் பாடல்களே சாட்சி.

அள்ளி தந்த பூமி (நண்டு)


தேவனின் கோவிலிலே (வெள்ளை ரோஜா)


பூங்காத்து திரும்புமா (முதல் மரியாதை)


வெட்டி வேரு வாசம் (முதல் மரியாதை)


காதல் தீபம் ஒன்று (கல்யாண ராமன்)


குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் (என் உயிர் தோழன்)


வா வா வசந்தமே (புதுக்கவிதை)


வெத்தல வெத்தல (ரோசாப்பூ ரவிக்கைக்காரி)


ஆசை நூறு வகை (அடுத்த வாரிசு)


ஆகாய கங்கை (தர்மயுத்தம்)


ஒரு தங்க ரதத்தில் (தர்மயுத்தம்)


ஆட்டுக்குட்டி முட்டையிட்டு (பதினாறு வயதினிலே)


பூவே இளைய பூவே (கோழி கூவுது)


காதல் வைபோகமே (சுவர் இல்லா சித்திரங்கள்)


இந்த மின்மினிக்கு (சிகப்பு ரோஜாக்கள்)


மலேசியா வாசுதேவன் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

16 comments:

Unknown said...

சூப்பர்....(ஸ்டார் இல்லாட்டியும்...) பதிவு
நாங்க இருக்கோம் வா-சு-தேவன்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி யுவராஜ்.

Madhavan Srinivasagopalan said...

//மலேசியா வாசுதேவன் அவர்களை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வேண்டுமானால் அவரை மறந்திருக்கலாம். அவரைப் பார்த்தே இராத, அவரது குரலில் ஒலிக்கும் பாடல்கள் மூலமாக மட்டுமே அவரைக் காணும் எங்களைப் போன்ற கோடானுகோடி இசை ரசிகர்கள் அவரைப் போன்றவர்களை மறப்பதில்லை. //

Well & rightly said

R.Gopi said...

மேடம்....

ஆஹா.... என்னே ஒரு அருமையான பதிவு... திரையுலகில் அவருடன் நெருங்கி பழகியவர்களே அவரை மறந்து விட்டார்கள் என்று சொல்லும் பொழுதில், அவரை நினைத்து ஒரு பதிவிட்ட உங்களை பாராட்டுகிறேன்...

நீங்கள் இந்த பதிவோடு, அவரின் பல இனிமையான பாடல்களை இணைத்தது இந்த பதிவிற்கு சுவை கூட்டியது...

உங்களால் இது போன்றும் கலக்க முடியும் என்று நிருபிப்பதாய் இருந்தது....

வாழ்த்துக்கள் புவனா மேடம்....

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மாதவன்.

நன்றி கோபி.

a said...

nice collection of songs...

Yes. i too read his interview...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி யோகேஷ்.

அபி அப்பா said...

அருமையான கலக்ஷன்ஸ்!!!! அவர் இன்று ஸ்வர்னலதா அஞ்சலி நிகழ்சியில் டிவியில் பார்த்தேன். அவர் உடல் நலமடைய என் வேண்டுதல்கள்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஸ்வர்ணலதா அவர்களின் மரணம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

velji said...

இந்த கலெக்சன அவர் பார்த்தா கூட தெம்பாயிருவார்!

Chitra said...

Good selections. :-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி வேல்ஜி.

நன்றி சித்ரா.

அருண்மொழிவர்மன் said...

மலேஷியாவின் நிறையப் பாடல்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. நான் நினைக்கிறேன் ஷாஜி உயிர்மையில் எழுதிய கட்டுரை (அந்தக் கட்டுரை மீது எனக்கு நிறைய விமர்சனம் இருந்தாலும்) மலேஷியா மீது மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது என்று

புவனேஸ்வரி ராமநாதன் said...

கருத்துக்கு நன்றி அருண்மொழிவர்மன்.

Anonymous said...

அருமையான அவசியமான பதிவு. பதிவுலகின் நிறைபயனை எடுதியம்பியுள்ளீர்கள். வாழ்க!

மலேசியா வாசுதேவன் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails