பாகற்காய் : 1/4 கிலோ
புளி : சிறிய எலுமிச்சை அளவு
சாம்பார்பொடி : 2 தேக்கரண்டி
பெருங்காயம் : 1 சிட்டிகை
மஞ்சள்தூள் : 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் : 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு : 1/4 படி
தேங்காய் : 1/4 மூடிசின்ன
வெங்காயம் : 5
சீரகம் : 1 தேக்கரண்டி
அரிசி : 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு : 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு : 1/2 தேக்கரண்டி
கடுகு : 1/4 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
கொத்தமல்லித் தழை : சிறிதளவு
செய்முறை:
முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து புளி கரைசலை தயார் செய்துவைத்துக் கொள்ள வேண்டும். கடலைப் பருப்பை ஒரு மணி நேரம்ஊறவைக்கவும். பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளி கரைசலை அடுப்பில் வைத்து அதனுடன் சாம்பார்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயம், உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட்டு, அதில் பாகற்காயைப்போட்டு அரைவேக்காடு வேக வைத்து, பாகற்காயை வடிகட்டி தனியேவைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்புபோட்டு, அரைவேக்காடு வெந்த பாகற்காயை போட்டு நன்றாக வேகவிடவும்.
இதனிடையே , மிக்ஸியில் தேங்காய், சின்ன வெங்காயம், அரிசி, சீரகம்இவற்றை கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். பாகற்காய் நன்குவெந்ததும், அரைத்து வைத்த மசாலாவை அதனுடன் கலந்து நன்கு கொதிக்கவிடவும். மசாலா பாகற்காயுடன் கலக்கும் வரை கொதிக்க விடவும். இந்தகலவை தயாராகிக் கொண்டிருக்கும்போதே, ஊற வைத்த கடலைப் பருப்புடன்சிறிதளவு பெருங்காயம், மிளகாய்த்தூள், உப்பு போட்டு மிக்ஸியில்பகோடாவிற்கு அரைப்பதுபோல் அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில்எண்ணெய் வைத்து சின்ன சின்ன உருண்டைகளாக பகோடாபோல் பொரித்துஎடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாகற்காய் கலவை தயாரானதும் செய்து வைத்துள்ள பகோடாவில் பாதியை அதில்போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கி விடவும். அந்த சூட்டிலேயே பகோடா நன்றாக ஊறி பாகற்காயுடன் கலந்து விடும். கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்துக் கொட்டவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவவும். பாகற்காய் பிட்லே தயார்.
இந்த பாகற்காய் பிட்லே செய்யும் போது நமக்கு ஒரு வசதி. தனியாக தொட்டுக் கொள்ள எதுவும் செய்யவேண்டியதில்லை. அதனுள் ஊறிய பகோடாவும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். மீதி எடுத்து வைத்துள்ள பகோடவும் தொட்டுக்கொள்ளலாம். அல்லது அப்பளம் பொரித்து தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். விருப்பப் பட்டால், வீணாக்கக் கூடாது என்று நினைத்தால் பாகற்காய் வடிகட்டிய தண்ணீரில் வேறு ஏதாவது சாம்பார் செய்து கொள்ளலாம்.
14 comments:
good dish!
புதுசாக இருக்கு புவனா.அருமை.
சூப்பர்ர்!! பிட்லையுடன் பகோடா சேர்ப்பது வித்தியாசமா இருக்கு...
Thank you for the recipe. Looks good. :-)
நன்றி கீதா.
நன்றி ஆசியா மேடம்.
நன்றி மேனகா.
நன்றி சித்ரா.
சூப்பராக இருக்கு..பார்க்கும் பொழுதே சாப்பிட தோனுது...அதுவும் பகோடா சேர்த்து...ஆஹா சொல்லும் பொழுது ஆசையாக இருக்கே...
நன்றி கீதா.
Nice Recipe..but Different..
நன்றி அஹமது இர்ஷாத். நம்ம ஊர் பக்கம் தானா நீங்க.. மிக்க மகிழ்ச்சி.
அட....
இந்த ரெசிப்பியோட பேர் கேட்டே கொஞ்ச நாள் ஆச்சே... இப்போ ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி..
இந்த முறை ஊர் செல்லும் போது, சாப்பிட வேண்டும்..
எனக்கு பிடித்த பாகற்காய் பிட்லை ரெசிப்பிக்கு நன்றி.
பிட்லை நல்ல்ல இருக்கு.
செய்து பார்க்கனும்
நன்றி ஜலீலா மேடம். செய்து பாத்துட்டு சொல்லுங்க.
நம்ம ஊர் பக்கமா..நான் எந்த ஊருன்னு தெரியுமா உங்களுக்கு?
நீங்க அதிராம்பட்டினம்னு உங்க வலைதளத்துல தான் குறிப்பிட்ருக்கீங்கலே. என்னோட பிறந்த ஊர் மன்னை.
Post a Comment