அரிசி மாவு : 2 கப்
புளித்த மோர் : 1 கப்
பச்சை மிளகாய் : 1
கடுகு : 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு : 1 தேக்கரண்டி
பெருங்காயம் : 1 சிட்டிகை
நல்லெண்ணெய் : 1/2 குழி கரண்டி
உப்பு : தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன், புளித்த மோர், தண்ணீர், உப்பு கலந்து இந்த கலவையை நன்றாக நீர்க்கக் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மோர் மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, இதன் மேல் கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி, அடுப்பை இளந்தீயில் வைத்து நன்கு கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். பொன்னிறமாக வரும் வரை , பந்து போல் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். அரிசி மோர் கூழ் தயார்.
இந்த அரிசி மோர் கூழிற்கு, இதில் தாளித்துப் போட்டுள்ள மோர் மிளகாய், பச்சை மிளகாயயே தொட்டுக் கொள்ளலாம். இது போன்ற கூழினை கோதுமையிலும் செய்யலாம். நம் அன்றாட சமையலில் இது போன்ற நாட்டுப் புற சமையலை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து உண்ணலாம். நாட்டுப் புற சமையலின் மூலம் நம் உடம்பிற்குத் தேவையான அத்தனை சத்துக்களும் ஒருசேர கிடைக்கின்றன.
24 comments:
பார்த்ததுமே சாப்பிடத் தூண்டுதே.
//நம் அன்றாட சமையலில் இது போன்ற நாட்டுப் புற சமையலை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து உண்ணலாம். //
நிச்சயமாய். செய்து பார்க்கிறேன். நன்றி.
அவசியம் செய்துபார்த்துட்டு சொல்லுங்க. நன்றி ராமலக்ஷ்மி.
தாளிச்ச தயிர் சாதம் மாதிரி, நாவில் நீர் ஊறுதே!
நன்றி சித்ரா.
சிலர் சாதத்தை குழையவைத்து செய்வார்கள், உங்கள்முறை நன்றாக உள்ளது.
நன்றி பழனி முருகன்.
எப்போதுமே எனக்கு பிடித்தமான உணவு இந்த கூழ்! இதே பாணியில் கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் இரண்டும் பிடித்தமானவை. பை தி பை ரமணாஸ் கஞ்சி சாப்பிட்டதுண்டா?
wowww looks super,one of my favourite....
@அபி அப்பா,
நன்றி. ரமணாஸ் கஞ்சி சாப்பிட்டதுண்டு.
நன்றி மேனகா.
dear friend ur recipes v nice i like it nic pic also do it more recipes
நன்றி மோகன் ராஜ்.
சூப்பராக இருக்கின்றது....
நன்றி கீதா.
ம்ம்... பாக்குறததுக்கே சூப்பர்..........
நன்றி யோகேஷ்.
வாவ்வ்வ்வ்வ்வ்....... என்று சொல்ல வைத்தது...
இந்த முறை விடுமுறையில் சென்னை சென்றிருந்த போது, சாப்பிட வாய்ப்பு கிடைத்தது.... எனக்கு மிகவும் பிடித்த ஒரு டிஷ்....
நன்றி.....
நன்றி கோபி.
Super and traditional. Love your blog.
http://shanthisthaligai.blogspot.com/
நன்றி சாந்தி.
அரிசி மோர்க் கூழ் அருமையா இருக்கும் - நட்புடன் சீனா
அரிசி மோர்க்கூழ் அருமையாய் இருக்கும் - நட்புடன் சீனா
எங்க அம்மா இதை மோர்களி என்றும் சொல்லி செய்து சாப்பிட்டு இருக்கேன். நல்ல உணவு.
வருகைக்கு நன்றி சீனா.
ஆமாம் விஜி. மிக நல்ல உணவுதான். நன்றி.
Post a Comment