Thursday, July 29, 2010


திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

ஓம் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம!!


இன்றைய திருக்கோயில் பதிவில் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலை தரிசனம் செய்வோம்.

கோயில் அமைவிடம்:
மதுரை, மேலூர் வழித்தடத்தில் மதுரையிலிருந்து 10 km தொலைவில், இந்த அழகிய காளமேகப் பெருமாள் வீற்றிருக்கும் திருமோகூர் அமைந்துள்ளது. மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்தும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் நிறைய பேருந்துகள் இங்கே செல்கின்றன. மதுரையிலிருந்து ஒத்தக்கடை சென்று, அங்கிருந்து ஆட்டோவிலும் இந்த கோயிலுக்கு செல்லலாம்.

மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 7 km தொலைவிலும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 15 km தொலைவிலும், யானைமலை ஒத்தைக்கடை என்னும் ஊரில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது இந்த திருமோகூர் திருத்தலம்.


மதுரைக்குள் நாம் நுழையும் போ
தே நம்மை வரவேற்பது யானை மலை என்ற அழகிய மலைதான். இந்த மலையின் நீளம் சுமார் 3 km. இந்த மலையின் முகப்பு யானையின் வடிவத்தை ஒத்துள்ளது.


திருத்தலக்குறிப்பு:
மூலவர்: திருமோகூர் காளமேகப் பெருமாள் (நின்ற திருக்கோலம்).
தாயார்: மோகனவல்லித் தாயார் (மேகவல்லி, மோகூர்வல்லி).
சன்னதிகள்: காளமேகப்பெருமாள், மோகனவல்லித் தாயார், ஆண்டாள், கருடாழ்வார், கிருஷ்ணன், ஆழ்வார்கள், ஹனுமார், நரசிம்ஹர், சக்கரத்தாழ்வார்.


இந்த திருமோகூர் திருத்தலம் 108 திவ்ய தேசங்களுள் 46-வது திவ்ய தேசமாக திகழ்கிறது. இங்கே காளமேகப் பெருமாள் நின்ற திருக் கோலத்தில் நமக்குக் காட்சி தருகிறார். பாற்கடலில் அமிர்தம் கடையும் போது அதிலிருந்து ஒரு துளி அமிர்தம் இக்கோயிலில் உள்ள குளத்தில் விழுந்ததால், இக்கோயில் குளத்திற்கு பெரிய திருப்பாற்கடல், சிறிய திருப்பாற்கடல் என்ற பெயர் உண்டானது.


காளமேகப்பெருமாள் கிரீடம், சங்கு, சக்கரம் ஆகியவை வெண் கற்களால் செய்து அணிவிக்கப்பட்டுள்ளது. பெருமாளுக்கு சாளகிராம மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
சாளகிராமம் என்பது இமய மலையில் கிடைக்கும் ஒரு புனிதமான கல். இதனை மகாவிஷ்ணுவின் வடிவமாகவே
பூஜிக்கின்றனர். சாளகிராமத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வது சிறந்த புண்ணிய பலன்களைத் தரும் என்பது ஆன்றோர்களின் அருள் வாக்கு.


அளவற்ற சக்தி வாய்ந்த சுதர்சன சக்கரம் இக்கோயிலில் உள்ளது. ஒருபுறம் ஸ்ரீ யோக நரசிம்மர், மறுபுறம் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். இக்கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இங்கே சக்கரத்தாழ்வார், 16 கைகளுடனும், 16 வகையான ஆயுதங்களுடனும் காட்சி தருகிறார். நரசிம்மர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். சக்கரத்தாழ்வார் சன்னதியில், ஒரு கல்லில் சக்கரத்தாழ்வாரை சுற்றி 154 எழுத்துக்களும், 48 கடவுள்கள் உருவங்கள், 6 வட்டங்களுள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாரின் பிறந்தநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


இந்தத் திருத்தலம் நவக்ரஹ தோஷங்களை போக்கக் கூடிய ஸ்தலம். இதற்கு ஸ்ரீ மோகன க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு. திருமோகூர் ராகு கேது ஸ்தலமாகும். ராகு கேதுவினால் உண்டாகும் தோஷங்களுக்கு திருமோகூர் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்புகள் மிக்க இக்கோயிலை தரிசித்து நம் வாழ்வில் சிறப்படைவோம்.

14 comments:

சௌந்தர் said...

நல்ல தகவல்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சௌந்தர்.

Chitra said...

படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சித்ரா.

Menaga Sathia said...

nice post!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

vanathy said...

அழகான படங்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி வானதி.

ராம்ஜி_யாஹூ said...

படங்களும் விளக்கங்களும் மிக அருமை.

எனக்கு பிடித்த கோவில்களுள் இதுவும் ஒன்று.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராம்ஜி.

RVS said...

இரண்டு மாதங்களுக்கு முன் தான் திருமோகூர் காளமேகப் பெருமாளைத் தரிசித்தேன். சிந்தை குளிர்ந்தேன். நீண்ட நெடுமாலாக நின்ற பிரானின் தோற்றம் அட்டகாசம். இமையமலைச் சாரலில் கண்டகி நதியில் கிடைப்பது சாளக்கிராமம். இது பற்றி பெரிய கதையே உண்டு.பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஆர்.வி.எஸ்.

R. Gopi said...

திருமோகூருக்கு மூன்று ஆண்டுகள் முன் சென்றிருந்தேன். ஒத்தைக்கடையில் நரசிம்ஹர் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். முதற் குரவருள் ஒருவரான மாணிக்கவாசகரின் அவதாரத் தலமான திருவாதவூரும் திருமோகூருக்கு அருகில்தான் உள்ளது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தகவலுக்கு நன்றி கோபி.

Post a Comment

Related Posts with Thumbnails