Tuesday, July 6, 2010


மாயவரம் விட்டேனா பார்

செய்யத் தேவையான பொருட்கள்:
இட்லி : 10
நெய் : 1 தே..
நல்லெண்ணெய் : 1 தே..
சீரகம் : சிறிதளவு
பெரிய வெங்காயம் : 2
பூண்டு : 4 பல்
சிவப்பு மிளகாய் : 5
புளி : சிறிதளவு
மிளகு, சீரகப்பொடி : 1 தே..
உப்பு : தேவையான அளவு


செய்யும் முறை:
முதலில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அடுத்து வெங்காயம், பூண்டு, புளி, சிவப்பு மிளகாய், உப்பு போன்றவற்றை அரைத்து
தனியே வைத்துக்கொள்ள வேண்டும். இட்லியை சிறுசிறு துண்டங்களாக வெட்டி வைத்துக்கொள்ளவும். கடாயில் நெய், நல்லெண்ணெய் ஊற்றி, அதில் சீரகம் போட்டு வெடித்த பின், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். பிறகு மிளகு சீரகப்பொடி போட்டு அதன் பின், அரைத்து வைத்த மசாலாவை போடவும். நன்கு வதங்கிய பின்னர் துண்டுகளாக வைத்துள்ள இட்லியை அதில் போட்டு நன்கு சுருள வதக்கி 5 நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவும். விட்டேனா பார் தயார்.


20 comments:

payapulla said...

பொதுவாக மீந்து போன இட்லியில் இவ்வாறு செய்வதை பார்த்து இருக்கிறேன் . இட்லியே வேண்டாம் என்று மீதம் வைத்தால் உன்னை விட்டேனா பார் என்று இட்லி தன் ரூபத்தை மாற்றி இம்சை செய்வதால் அதற்கு விட்டேனா பார் என்று பெயர் வந்தது . நான் சொல்வது சரிதானே !

வாழ்த்துகள் .

GEETHA ACHAL said...

வித்தியசமாக இருக்கின்றது...சூப்பர்ப்....

புவனேஸ்வரி ராமநாதன் said...

@payapulla
நீங்கள் சொல்வதும் சரிதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@GEETHA ACHAL
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

soundr said...

அடுத்த விக்ரமன் படத்தில் ஹீரோவோ, ஹீரோயினோ இதை செய்யும் காட்சி வந்தாலும் வரலாம். (சூர்யவம்சம் போல‌)
:)

http://vaarththai.wordpress.com

புவனேஸ்வரி ராமநாதன் said...

@soundr
யார் கண்டது, வந்தாலும் வரலாம். தங்களின் வருகைக்கு நன்றி.

ஆயில்யன் said...

இது இட்லி உப்புமா தானே?

மீந்து போன இட்லி உப்புமாதான்னு செய்முறையில புரியுது ஆனா டக்கரா டெக்கரேட் செஞ்சு வைச்சிருக்கிறதை பார்த்தா டவுட்டோ டவுட்! :)

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ஆயில்யன்
இட்லி உப்மாவேதாங்க இது, கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க.

எல் கே said...

idili upmaava eppadinga ippadi peru maathareenga

புவனேஸ்வரி ராமநாதன் said...

இட்லி உப்மாவதாங்க எங்க ஊர்ல இப்படி சொல்வாங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நம்ம ஊரா நீங்க..

இட்லி உப்புமாக்கு இப்படி ஒரு அலங்காரமா... அருமை..

அபி அப்பா said...

எது நல்லா இருந்தாலும் அது எங்க ஊர் தான் காப்பிரைட் கார்த்தி:-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

@முத்துலெட்சுமி
ஆமாங்க. ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அபி அப்பா
ஆமாங்க.

R.Gopi said...

புவனா....

இதுக்கு “இட்லி உப்புமா” என்று பெயரல்லவோ!!

ஆனாலும், “விட்டேனா பார்”னு ரெடி பண்ணின இந்த டிஃபன் படு ஜோரா இருக்கும்...

ஆமாம், இந்த விட்டேனா பார் டிஃபனுக்கு தொட்டுக்க என்ன சேத்துண்டா நல்லா இருக்கும்?

புவனேஸ்வரி ராமநாதன் said...

இட்லி உப்மாவேதான் இது. எதுவும் தொட்டுக்கொள்ள தேவை இல்லை. தேவைப்பட்டால் கொஸ்து செய்து தொட்டுக்கொள்ளலாம்.

mohamedali jinnah said...

நம்ம ஊரா நீங்க.. மிக்க மகிழ்வு .நானும் மாயவரம்தான் -நீடூர்

மாயவரம் விட்டேனா பார் இது கேள்வி பட்டதில்லை! .இம் சமைத்துப் பார்ப்போம்
கட்டுரை நல்லா இருக்கு சகோதரி .

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி நீடூர் அலி அவர்களே.

அப்பாதுரை said...

சின்ன வயசுல அம்மா இதைப் பத்தி சொல்லும் பொழுது கிண்டல் பண்றாங்கனு நெனப்போம்.. பழைய ஆனந்த விகடன் ஜோக் ஒண்ணும் இதப் போல தான்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

உண்மை தான். மிக்க நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails