எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, இளமை ஊஞ்சலாடுகிறது, புவனா ஒரு கேள்விக்குறி, தில்லுமுல்லு, மூன்று முகம், பதினாறு வயதினிலே, அவர்கள், ஜானி போன்ற படங்கள் ரஜினி தன் நடிப்புத்திறமையை வெளிக்காட்டியுள்ளவைகளில் குறிப்பிடத்தக்கவை.
அப்பாவியான வேடங்களில் நடிப்பதில் ரஜினிக்கு நிகர் அவரே தான். ராஜாதி ராஜா, தம்பிக்கு எந்த ஊரு, தர்மதுரை, தர்மத்தின் தலைவன் போன்ற படங்களில் அவரது அப்பாவி நடிப்பில் சிறு நூல் அதிகம் நடித்திருந்தால் கூட அது அதிகப்படியான நடிப்பாகியிருக்கும். ஆனால் அந்த அப்பாவி நடிப்பின் நேர்த்தியினை இப்படங்களில் ரஜினியால் அழகாக வெளிக்கொணர முடிந்துள்ளது.
முள்ளும் மலரும் படத்தில், கையிழந்து வேலையையும் இழந்து, பேச்சில் நம்பிக்கையையும், இயலாமையை மனதிற்குள்ளும் தாங்கி நிற்கும் இடத்தில் ரஜினியின் அற்புதமான நடிப்புத்திறமை பளிச்சிடும்.
மூன்று முகம் படத்தில், வில்லன்களை சிறையில் அடைக்கச்சொல்லி வசனம் பேசிக்கொண்டிராமல் தன் ஸ்டைலான சைகையாலே அழகாக கூறும் நடிப்பு அந்த காட்சிக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
கதாநாயகனாக ரஜினி எத்தனையோ ஸ்டைல்களைச் செய்திருந்தாலும், பதினாறு வயதினிலே படத்தில் வில்லத்தனமாக அவர் செய்யும் ஸ்டைல் தனி அழகு தான்.
ஜானி படத்தில் ஸ்ரீதேவியிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் இடத்திலும் அவருடைய நடிப்பு மிக இயல்பாக இருக்கும். ஸ்ரீதேவியின் நடிப்பும் அற்புதமாக இருக்கும்.
இதைப்போல் எத்தனையோ காட்சிகள் இருந்தாலும், எனக்குப்பிடித்த சில காட்சிகளை இங்கே தொகுத்துள்ளேன்.
வசூல் சாதனைகள், சூப்பர்ஸ்டார் போன்ற அளவுகோல்களை மட்டுமே வைத்து ரஜினியை நோக்குபவர்கள், பல படங்களில் அவர் வெளிப்படுத்திய நடிப்புதிறனைக் கண்டால், தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ரஜினியும் ஒருவர் என்பதை ஒப்புக்கொள்வார்கள்.
20 comments:
ரஜினியின் சிறந்த நடிப்புக்கு- தப்புத் தாளங்கள், எங்கேயோ கேட்ட குரல், பைரவின்னு நிறைய படங்கள் சொல்லலாம். மசாலா படங்களில் கூட அழகாக நடிப்பாற்றல் வெளிப்படும். உதாரணத்திற்கு மன்னன் படத்தில் தாய்க்கு பணிவிடை செய்கின்ற காட்சி. உள்ளத்தை உருக்கிடாதா.
புவனா மேடம்....
யூ மேட் மை டே....
ரஜினியை பற்றிய இது போன்ற கட்டுரை உங்களை போன்ற நடுநிலை எழுத்தாளர் / வலைப்பதிவரிடம் இருந்து வர வேண்டும் என்று நினைத்திருந்தேன்... இன்று முள்ளும் மலரும் படத்தை பற்றி ஜாக்கி சேகர் கூட அழகாக எழுதியுள்ளார்... அதை தொடர்ந்து ரஜினியின் நடிப்பை பற்றி உங்களின் இந்த அருமையான பதிவு....
70, 80களில் ரஜினி அவர்கள் நடிப்பின் உச்சத்தை தொட்ட எத்தனையோ படங்களில் நடித்திருந்தார்..
பைரவி
தப்புத்தாளங்கள் (இன்று இருக்கும் ஒரு ஹீரோ கூட இந்த பாத்திரத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது... இது மிகையாக சொல்லவில்லை... படத்தை பாருங்கள்....)
காயத்ரி
முள்ளும் மலரும்
ஜானி
மூன்று முகம்
ஆறிலிருந்து அறுபது வரை
எங்கேயோ கேட்ட குரல்
ஸ்ரீராகவேந்திரர்
தில்லு முல்லு
நினைத்தாலே இனிக்கும்
படிக்காதவன்
நல்லவனுக்கு நல்லவன்
90களில் வெளிவந்த படங்களான :
தளபதி
அண்ணாமலை
மன்னன்
போன்ற கமர்ஷியல் படங்களில் கூட தன் முத்திரை நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்...
கமல் நடிக்கும் படங்களின் சாயல் வரவே கூடாது என்று முடிவு எடுத்த நிலையில் முழுக்க முழுக்க கமர்ஷியல் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்..
அதிலும் தமிழ் உதயம் சொன்னது போல், தன் தனித்துவமான முத்திரை நடிப்பை பதித்திருப்பார்...
ரஜினி / கமல் இருவருக்கு பிறகு அந்த இடத்தை விக்ரம் / சூர்யா நிரப்ப முயற்சிக்கலாம்... அதற்கு கடின உழைப்பு தேவை.... பார்ப்போம்...
இந்த அருமையான எழுத்திற்கு உங்களுக்கு ஒரு பெரிய ஓ....
@தமிழ் உதயம்,
தப்புத்தாளங்கள், பைரவி போன்ற படங்களை குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். நீங்கள் கூறியது போல் மன்னன் படத்திலும் ரஜினி தன் நடிப்பாற்றலை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார்.
@R.Gopi,
//போன்ற கமர்ஷியல் படங்களில் கூட தன் முத்திரை நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்...//
உண்மை கோபி. கமர்ஷியல் படங்களிலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்த தவறியதில்லை.
அடிச்சி தூள் கிளப்பிட்டீங்க.சூப்பர் ஸ்டார் பற்றிய பதிவு சூப்பர் .
Arumayaana pathivu madam...
Gopi annaa sonnathu pola,YOU MADE MY DAY ASWELL..ungal pathivai migavum rasitthu paditthen..rajini patri thootri mattum eluthi vilambaram thedum intha pathivu ulagil,ungalai pondra nadunilai elutthaalargal rajiniyin unmayaana thiramayai paaraatti eluthi iruppathu unmayil migavum santhosamaaga ullathu..
rajinyin utcha patcha masala padamaana basha vil kooda akrosamaagavum,saanthamaagavum kalakki iruppaar..!
NEEENGAL KAATIYULLA ANAITTHU VIDEOKKALUM ENATHU FAVORITE VIDEOS!!!THNX 4 THT..
ungal pathivaal indru engalai santhosa paduthiyulleergal!! ungal elutthukkalukku engal nandrigalum,vaaltthukkalum madam..
HAVE A GR8 DAY..
நன்றி ஆசியா மேடம்.
நன்றி தீன். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காட்சிகள் அவை.
super star rocks
super post!!
நீங்கள் சொன்ன அனைத்து காட்சிகளும் எனக்கு புடிக்கும்
தலைவர் ரஜினி குறித்த அழகான இடுகை. நன்றி.
ஸ்ரீ....
நன்றி மேனகா.
அத்தனை காட்சிகளும் அலுக்காத ஒன்று சௌந்தர்.
நன்றி ஸ்ரீ.
தூள்
இதுல சில படங்கள் பார்த்ததில்லை... ரசிக்க வைத்த காட்சிகள்.
நன்றிங்க.
நன்றி கார்த்திக்.
நன்றி அப்பாதுரை.
ரஜினி பற்றிய வீடீயோ மற்றும் தகவல்கள் அருமை.
நன்றி விக்கி.
ரஜனியின் நடிப்புத் திறனை வெளிப்படுத்திய படங்களைத் தொகுத்து வழங்கியிருப்பது அருமை.
நன்றி ராமலக்ஷ்மி மேடம்.
super post!
Post a Comment