அவல் : 1/4 படி
முருங்கைக்கீரை : ஒரு பிடி
தேங்காய் : 1/2 மூடி
கடலை மாவு : 1 ஸ்பூன்
சோள மாவு : 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் : 2
இஞ்சி : சிறிதளவு
மிளகாய்த்தூள் : 1/2 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
நெய் : 1/2 ஸ்பூன்
எண்ணெய் : பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அவலைப் போட்டு, அவல் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் ஊற வைக்கவும். முருங்கைக் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். இதனிடையே, மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு போட்டு அரைத்துக்கொள்ளவும்.
வேறு பாத்திரத்தில், 2 நிமிடம் ஊறிய அவலை நன்றாக பிழிந்து எடுத்துப் போட்டுக்கொள்ளவும். அதன்மேல், நறுக்கிய முருங்கைக் கீரை, தேங்காய், கடலைமாவு, சோள மாவு, அரைத்த விழுது, மிளகாய்த்தூள், என எல்லாவற்றையும் கலந்து, நெய் கலந்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சூடான பிறகு அடுப்ப்பை இளந்தீயில் வைத்து வடைதட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
அவல் கிருஷ்ணருக்கு விருப்பமான உணவு. பிடி அவல் உண்டு தன் நட்பின் ஆழத்தை கிருஷ்ணர் காட்டினார்.
*******************************************
எனக்குப் பிடித்த கண்ணன் பாடல்கள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன். உங்களுக்கும் பிடித்திருந்தால் கேட்டுப்பாருங்கள். கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே....
ஆயர்பாடி மாளிகையில்....
அலைபாயுதே....
20 comments:
I like Aval, Krishna, Both songs..
thanks
ரொம்ப அருமையான குறிப்பு. அதை விட பாடல்களுக்கு மிக்க நன்றி.
அதுவும் ஆயர்பாடி மாளிகையில்...ஆஹா! சின்ன வயதில் என் அக்கா இதை அழகாகப் பாடி என்னைத் தூங்க வைப்பார். அந்நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். :)
Enakkum pidikkum.
simple and humble,Super!
அவல் வடை அருமை.
நன்றி மாதவன்.
தங்களின் நினைவலைகளை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி தீபா.
நன்றி குமார்.
நன்றி பழனி முருகன்.
நன்றி ஆசியாக்கா.
பாடல்களுக்கு மிக்க நன்றி!! அவல் வடை அருமையாகவும்,ஈசியாகவும் இருக்கு...கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்!!
மிக்க நன்றி மேனகா. உங்களுக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.
கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் மேடம். உங்க பதிவில் பாட்டைத் தட்டினேன்... கேட்க முடிந்தது.அவல் வடை
போட்டோவைத் தட்டினா, அது வரவே இல்ல மேடம்.
! எங்க தாய்க்குலம் பார்த்திருக்காங்க... அரங்கேற்றிடுவாங்கன்னு நினைக்கிறேன். NICE
(ஊருல இல்லாததுனால) வட போச்சே.........
கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் மோகன்ஜி. செய்துபாத்துட்டு சொல்லச்சொல்லுங்க. நன்றி.
யோகேஷ், இன்னும் டீ வரல....
super. Thank you.
நன்றி சித்ரா.
அவல் வடை எனக்கு புதிது, ரொம்ப நல்லா இருக்குது. பாடலும் அழகு. மொத்தத்தில் அருமையான விருந்து குட்டி கிருஷ்ணருக்கு , பிறந்த நாளன்று :)
ரொம்ப நன்றி Viki.
ஆஹா....
அருமையான ரெசிப்பியுடன் கூடவே மிக மிக அருமையான, இனிமையான பாடல்கள்....
அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்....
நன்றி கோபி.
அவல் வடை பார்க்க நன்றாய் இருக்கிறாது - படித்த் உடன் உண்ணவும் நன்றாய்த்தான் இருக்கும் போலத் தோன்றுகிறது - செய்ய்ச் சொல்லிடுவோம்
எங்கள் வீட்டில் அவல் கிண்டுவோம். அவலுடன் தேங்காய் வெல்லம் நெய் ஏலம் சேர்த்து கிண்டினால் சாப்பிட சுவையாக இருக்கும். கிண்டிப் பாருங்களேன்.
@cheena (சீனா),
அவல் வடை சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள். நீங்கள் சொன்னது மாதிர் ஆவலுடன் தேங்காய், வெல்லம், நெய், ஏலக்காய் சேர்த்து கிண்டி சாப்பிடும் வழக்கமும் உண்டு. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.
Post a Comment