Saturday, November 6, 2010


என்றும் இனியவை - P.ஜெயச்சந்திரன்

தமிழ் தேசத்திலிருந்து அரிசி முதல் அஞ்சறைப் பெட்டி சாமான்கள் அனைத்தும் அண்டை மாநிலம் கேரள தேசம் செல்கிறது. அதே நேரத்தில் அங்கிருந்தும் சில நல்ல விஷயங்கள் நம்மைத் தேடி வருகின்றன. கடவுளின் தேசத்திலிருந்து நம்மிடையே கால் பதிக்க வருபவைகளில் இனிய குரலுக்குச் சொந்தக்காரர்களின் வருகை தான் அதிகம். அத்திப் பூத்தாற்போல், அப்படி வருபவர்களில் மனதை மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான திரு P.ஜெயச்சந்திரன் அவர்களும் ஒருவர். தனது பெயருக்கு ஏற்றாற்போல் சந்திரன் தேய்ந்து வளர்வது போல, இவரும் சில காலங்கள் அதிகமான பாடல்களையும், சில நேரங்களில் தமிழில் பாடுவது குறைந்தாலும், இன்று வரை தமிழ் திரைப் பாடல்கள் பாடிக் கொண்டுள்ளார் என்பது பெரிய விஷயம்.


A.R.ரஹ்மான் முதன் முதலில் மெட்டமைத்த "வெள்ளித்தேன் கிண்ணம் போல்" என்ற பாடலைப் பாடிய பெருமை கொண்டவர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள். ரஹ்மானின் தந்தை R.K.சேகர் அவர்கள் 1975-ம் ஆண்டு இசையமைத்த penpada என்னும் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். அவற்றுள் மூன்று பாடல்கள் முடிந்த நிலையில், ரஹ்மான் தற்செயலாக ஒரு சிறு மெட்டமைக்க, இவர் போட்ட மெட்டு பிடித்து விடவே அதனையே அந்தப் பாடலுக்குப் பொருத்திவிட்டனர். இதுவே ரஹ்மான் அவர்கள் மெட்டமைத்து ஜெயச்சந்திரன் அவர்களால் 1975-ம் வருடம் அரங்கேறிய பாடல். ரஹ்மானுக்கு அப்பொழுது ஒன்பது வயது தானாம். இடைவேளையில் இசையில் புகுந்த இறைவன் இன்று ரஹ்மானை இசையுலகின் உச்சாணிக் கொம்பில் நிறுத்திவிட்டார்.

வெள்ளித்தேன் கிண்ணம் போல்


இவர் பாடிய பாடலைப் போல வெள்ளித் தேன் கிண்ணம் தான் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும். மலையாள தேசத்திலிருந்து வந்தாலும், இவர் பாடிய பாடல்களில் வார்த்தைகளை மென்று துப்பாமல், அழுத்தம் திருத்தமாக நல்ல உச்சரிப்புடன் பாடக் கூடிய பாடகர். இவர் பாடிய பாடல்களைக் கேட்கும்போது மனதில் ஒரு அமைதி நிலவும். நம் எல்லோருக்குமே பாடல் கேட்பது பிடிக்கும். அந்தப் பாடலை பகல் நேர இரைச்சல்கள் முடிந்து இரவு பத்து மணிக்கு மேல் அப்பாடா என்று தலை சாய்க்கும் நேரத்தில், ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்பது, வாழும் காலத்திலேயே சொர்க்கம் சென்று திரும்பிய அனுபவம். அவர் பாடிய தேன் முத்துக்களில் சிலவற்றை நீங்களும் கேளுங்கள்.

பூவை எடுத்து ஒரு (அம்மன் கோயில் கிழக்காலே)


தாலாட்டுதே வானம் (கடல் மீன்கள்)


கொடியிலே மல்லிகைப்பூ (கடலோரக் கவிதைகள்)


எனது விழி வழி மேலே (சொல்லத் துடிக்குது மனசு)


என் மேல் விழுந்த மழைத் துளியே (மே மாதம்)


மாஞ்சோலைக் கிளிதானோ (கிழக்கே போகும் ரயில்)


மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் (நானே ராஜா நானே மந்திரி)


ஒரு தெய்வம் தந்த பூவே (கன்னத்தில் முததமிட்டால்)


இன்றைக்கு என் இந்த ஆனந்தமே (வைதேகி காத்திருந்தாள்)


சித்திரச் செவ்வானம் (காற்றினிலே வரும் கீதம்)


இசைக்கவோ நம் கல்யாண ராகம் (மலர்களே மலருங்கள்)


காளிதாசன் கண்ணதாசன் (சூரக்கோட்டை சிங்கக்குட்டி)


வசந்த காலங்கள் (ரயில் பயணங்களில்)


ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு (வைதேகி காத்திருந்தாள்)


கடவுள் வாழும் கோயிலிலே (ஒரு தலை ராகம்)


45 comments:

Unknown said...

ஜெயசந்திரன் ரசிகன் என்கிற வகையில் உங்கள் தொகுப்புக்கு என் வந்தனம்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சகோ.

தமிழ் அமுதன் said...

அருமையான தொகுப்பு...! நன்றி..!

RVS said...

நல்ல கலெக்ஷன். ;-)

தமிழ் உதயம் said...

நல்ல தொகுப்பு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி தமிழ் அமுதன்.

நன்றி ஆர்.வி.எஸ்.

நன்றி ரமேஷ்.

ராமலக்ஷ்மி said...

ஆகாகா, அருமையான பகிர்வு. கட்டிப் போடும் குரல் வளத்துக்கு சொந்தக்காரர். ‘சித்திர செவ்வானம்’ என் ஆல் டைம் ஃபேவரைட். தேன் முத்துக்களுக்கு நன்றி:)!

புவனேஸ்வரி ராமநாதன் said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அது. நன்றி மேடம்.

ராம்ஜி_யாஹூ said...

many thanks for sharing

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராம்ஜி.

மனோ சாமிநாதன் said...

மிகவும் நல்ல பதிவு புவனேஸ்வரி!

எல்லாமே அருமையான பாடல்கள். அதுவும் 'மாஞ்சோலைக்கிளிதானோ', ' என் மேல் விழுந்த மழைத்துளி' என்றுமே சாகாவரம் பெற்றவை.
இன்னும் நிறைய பாடல்கள்,

'தேவன் தந்த வீணை'[உன்னை நான் சந்தித்தேன்],

சொல்லாமலே யார்[பூவே உனக்காக]

'மதுக்குடமோ' [குமரிப்பெண்ணின் உள்லத்திலே]

இதெல்லாமே மிகவும் புகழ் பெற்ற‌வை!
25 வருடங்களுக்கு முன் இங்கு ஒரு நண்பர் வீட்டிற்கு வந்திருந்த திரு. ஜெயச‌ந்திரனிடம் எனக்கு மிகவும் பிடித்த அவரின் பாடலான' பொன்னென்ன பூவென்ன கண்ணே'[படம் 'அலைகள்' என்று நினைக்கிறேன்] பாடலைப் பாடும்படிக் கேட்டுக்கொன்டபோது, நண்பரொருவரின் வயலின் இசையில் மிக‌ அருமையாகப் பாடினார் அவர்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களுக்கு பிடித்த பாடல்களையும், இனிமையானதொரு நிகழ்வையும் இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மனோம்மா.

பொன் மாலை பொழுது said...

ஜெயச்சந்திரனின் பாடல் அணைத்தும் இனிமையானவை. அனைவராலும் விரும்பிக்கேட்கப்படுபவை.
உங்களின் தொகுப்பு மிக அழகாக ,ரசனையுடன் அமைந்துள்ளது.
பகிந்துகொண்டமைக்கு நன்றிகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மாணிக்கம்.

எம் அப்துல் காதர் said...

அவர் 'அலைகள்' படத்தில் முதல் முதல் தமிழில் அறிமுகமாகி பாடிய "பொன்னென்ன பூவென்ன கண்ணே. உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே, ஒரு கல்யாண பெண்ணாக உன்னை புவி காணாமல் போகாது பெண்ணே!!" பாடலை சேர்க்கலையே. தொகுப்பு மிக அருமை சகோ. நன்றி!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

அறிமுகப்பாடலை குறிப்பிட்டமைக்கு நன்றி சகோ. லிஸ்ட் ரொம்ப பெரியதா இருக்கேன்னு அந்த பாடலை விட்டுட்டேன்.

Unknown said...

Hi,

Aval halwa arumai...:)Happy Diwali to you...:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல தொகுப்பு நன்றி..:)

Menaga Sathia said...

வாவ்வ்வ் சூப்பர்ர் தொகுப்பு..இவரின் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அடுத்தது வாணி ஜெயராம் பாடிய பாடல் தொகுப்பு போடுங்கள்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Dr.Sameena Prathap,
நன்றி.

@முத்துலெட்சுமி/muthuletchumi,
நன்றி.

@Mrs.Menagasathia,
வாணி ஜெயராம் தொகுப்பு சீக்கிரம் போட்டுடறேன். நன்றி மேனகா.

Prasanna said...

சிறப்பான பாடகர்.. நல்ல பதிவு :)

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி பிரசன்னா.

CS. Mohan Kumar said...

I also like Jeyachandran's voice. Good compilation of songs. Thanks

தினேஷ்குமார் said...

நல்ல பதிவு சகோதரி

இனிய தீபவொளி திருநாள் வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மோகன்குமார்.

நன்றி தினேஷ்குமார். தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

உலக சினிமா ரசிகன் said...

அருமையான பதிவு..ராஜாவின் இசையில் ஜெயச்சந்திரன் தனித்துவக்குரலில் ஒலித்த எல்லாமே தேன்தான்

Ravi kumar Karunanithi said...

enaku piditha paadal adhu unakum pidikiradhu. nandri.

மதுரை சரவணன் said...

அருமையான தொகுப்பு... வாழ்த்துக்கள்

sonaramji said...

you have done a good thing. enabling me to hear the first song of ARR Thanks a lot.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி உலக சினிமா ரசிகன்.

நன்றி ரவி குமார்.

நன்றி சரவணன்.

நன்றி rtoram.

R.Gopi said...

புவனா மேடம்....

மற்றுமொரு அருமையான பதிவின் மூலம் எங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

கே.ஜே.யேசுதாஸ் அவர்களை தொடர்ந்து ஜெயசந்திரனின் குரலும் மயக்கும் வித்தையை கற்று வைத்திருந்தது...

அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் ஹிட் ரகம் என்பது குறிப்பிடத்தக்கது...

தன் தனித்துவமான குரலால் பல பெரிய ஹிட் பாடல்களை பாடியவர் என்பது இவரின் தனி சிறப்பு..

பிரமாதமான பதிவிற்கு என் நன்றி.....

வாழ்த்துக்கள் மேடம்....

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி கோபி.

விஜய் said...

இதுவரை யாரும் பகிராத பதிவு

என்ன ஒரு தேஜஸ் அவரது குரலில்

மழைக்கால இரவில் அவரது பாடல்கள் நமது மூளையின் ஆல்பா நிலைக்கு கொண்டு செல்லும்

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ

விஜய்

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையா சொல்லியிருக்கீங்க. மிக்க நன்றி சகோ.

Pushpa said...

Thanks for sharing those memorable songs.....

நாடோடிப் பையன் said...

Nice collection. Thank you.
More details on Jayachandran's bio can be found here
http://en.wikipedia.org/wiki/Jayachandran

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி புஷ்பா.

தகவலுக்கு நன்றி நாடோடிப் பையன்.

Kurinji said...

Arumaiyana Thoguppu...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி குறிஞ்சி.

Vikis Kitchen said...

தாலாட்டுதே வானம், eன் மேல் விழுந்த மழைத்துளி, both are my all time favorite:) Nice collection and thanks for reminding these songs.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி விக்கி.

Vijiskitchencreations said...

my favourite singer too. I like his sagara sangamam movie songs. I like mounamana neram song.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி விஜி.

பால கணேஷ் said...

என் மேல் விழுந்த மழைத்துளியே, சித்திரச் செவ்வானம் என் ஆல்டைம் ஃபேவரைட். இத்துடன் தவிக்குது தயங்குது ஒரு மனது பாடலையும் சேர்த்துக் கொள்ளலாம். அருமையான தொகுப்புக்கு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி கணேஷ்.

Post a Comment

Related Posts with Thumbnails