பால் : 1/2 லிட்டர்
பாதாம் பருப்பு : 12
முந்திரி பருப்பு : 7
சர்க்கரை : 200 கிராம்
ஏலக்காய் : 3
மைதா மாவு : 1/4 கிலோ
உப்பு : ஒரு சிட்டிகை
எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாதாம் பருப்பினை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். வெறும் வாணலியில் முந்திரிப் பருப்பை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பாதாம் பருப்பு நன்கு ஊறியபின் அதன் தோலினை நீக்கவும். தோல் நீக்கிய பாதாம் பருப்பு, லேசாக வறுத்த முந்திரிப் பருப்பு இரண்டையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
மைதா மாவில் சிறிதளவு உப்பு போட்டு பூரி மாவு பதத்தில் பிசைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்சி அதில் தேவையான அளவு சர்க்கரை கலந்து கொதிக்க விடவும். அரைத்து வைத்துள்ள பாதாம் முந்திரி கலவையை பாலில் போட்டு நன்கு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். ஏலக்காய் கலந்து இறக்கி விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் வைத்து, மைதாவில் பூரி போல இட்டு எண்ணையில் போடும்போது, இரண்டு வடவாரிகளை வைத்துக் கொண்டு பூரி உப்பி வரும்போது அதனை இரண்டாக அல்லது நான்காக மடித்து பொரித்து எடுத்து தயார் செய்து வைத்துள்ள பாதாம் பால் கலவையில் போட்டு ஊற விடவும்.
இந்த பூரி நன்கு ஊறிய பின் ஒரு தட்டில் எடுத்து வைத்து இந்த பாலையும் அதன் மேல் ஊற்றி சிறிது பாதாமினை துண்டுகளாக நறுக்கி அதன் மேல் தூவ பால் போளி தயார்.
19 comments:
Mouthwateringand delicious pal poli.
மிக்க நன்றி புஷ்பா.
looks yummy.
மிக்க நன்றி ஆசியாம்மா.
ஆகா! செஞ்சே பாத்துற்றது இன்னக்கு.
வாட் இஸ் வடவாரி?
// Mouthwateringand //
அவ்வ்வ்வவ்.... அப்படின்னா ஏன்னா...?
அந்த பாதாம் பருப்புகளை மட்டும் இப்படி கொடுத்துடுங்க தாயி... நாக்குல எச்சில் ஊறுது...
ஆஹா....
புவனா மேடம்.... ரொம்ப நாளாச்சு பால் போளியை கண்ணால் பார்த்தே.... அதை கண்ணில் காட்டியமைக்கு மிக்க நன்றி...
எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகைகளில் இதுவும் ஒன்று....
மிக்க நன்றி...
ம்ம் சூப்பர்ர்ர்,எனக்கு மிகவும் பிடித்தது...
அருமையான எளிமையான ரெசிபி
nalla irukke...
ரொம்பவும் பழமையான, ஆனால் இனிமையான இனிப்பு இது! புகைப்படத்தைப் பார்க்கும்போது மறுபடியும் செய்து பார்க்கத்தூண்டுகிறது!!
delicious pal poli.
So tempting!!
@அப்பாதுரை,
வடை கரண்டி தான்.
சூப்பர்........
(நாக்குல எச்சில ஊறவச்சி வேடிக்கப்பாக்கறத்துல அப்படி என்ன சந்தோசமோ...... )
ஆகா, மிக்க நன்றி யோகேஷ்.
nice recipe.
www.vijisvegkitchen.blogspot.com
மிக்க நன்றி விஜி.
Post a Comment