மைதா மாவு : 250 கிராம்
முந்திரி : 50 கிராம்
பாதாம் : 10
சர்க்கரை : 200 கிராம்
நெய் : 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் : 1 ஸ்பூன்
உப்பு : ஒரு சிட்டிகை
ஏலக்காய் : 3
கேசரி பொடி : ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் பாதாம் பருப்பினை வெந்நீரில் ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். மிக்ஸியில் தோலுரித்த பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பினை நன்றாக வழுவழுவென்று அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவில், சிறிதளவு உப்பு, ஒரு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், அரைத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் விழுது இவற்றை ஒன்றாகக் கலந்து பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவு பிசையும் போதே வாசனை கமகமக்கும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவு சர்க்கரை விட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். சர்க்கரைப் பாகு கம்பிப் பதம் வரும் வரை கொதிக்க விட்டு கேசரி பொடி, ஏலக்காய் பொடி கலந்து இறக்கி விடவும். ஏலக்காய் பொடி பொதுவாக நாம் எல்லா இனிப்புப் பலகாரங்களுக்கும் சேர்ப்போம். ஏலக்காய் பொடி பொடியும் போது ஏலக்காயை ஓர் வாணலியில் லேசான சூட்டில் தோலுடன் சேர்த்து வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு தோலுடன் சேர்த்து அரைக்கும் போது அதன் முழுமையான பயனும் கிடைப்பதோடு, ஏலக்காய் வாசனை இன்னும் அதிகமாகக் கிடைக்கும். ஏலக்காய் இனிப்பில் சேர்ப்பதே, அந்த பலகாரம் மணமுடன் இருப்பதற்கு மட்டுமல்ல. விரைவில் செரித்துவிடும் என்பதற்காகவும் தான்.
அடுத்து, பிசைந்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் இளந்தீயில் வைத்துக் கொண்டு உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணையில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். பொரிக்கும் போதே மாவில் முந்திரியும் பாதாமும் கலந்திருப்பதால் வீடே மணம் வீசும். ஐந்து நிமிடங்கள் கழித்து இந்த முந்திரி உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போடவும். பாகில் நன்றாக ஊறி வந்ததும் முந்திரி அமிர்தத்தை எடுத்துப் பரிமாறவும்.
34 comments:
Very colourful and tempting..
மிக்க நன்றி காயத்ரி.
Never know about this recipe before...sure do a try...
அழகா வித்தியாசமான இனிப்பு,நல்லாயிருக்கு...
@GEETHA ACHAL,
@S.Menaga,
@Chitra,
//இந்த ஸ்வீட் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. நாவில் நீர் ஊற வாசித்தேன்.//
சித்ரா, உங்களது கமெண்டை தவறுதலாக டெலீட் செய்துவிட்டேன்.
இந்த ஸ்வீட் புதுசா ட்ரை பண்ணேன். மிக்க நன்றி கீதா, மேனகா & சித்ரா.
புதுமையான இனிப்பு. பெயரும் அருமை.
இது புதுசா இருக்கு. ஆனா ஒரு ஸ்வீட் சாப்பிட்டா ஒன்பது மைல் நடக்கணும் போலயே:)
கரெக்ட் தான், கொஞ்சம் நடந்து தான் ஆகணும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கோபி.
புதுசா இருக்குதுங்க! செஞ்சு பாத்திடலாம்.
வித்யாசமாய் இருக்கு சகோ
மனைவியை செய்து பார்க்க சொல்கிறேன்
விஜய்
அடடே... குலோப் ஜாமுன் மாதிரி இருக்கு... ருசி அதைவிட அதிகமா இருக்குமா...?
New sweet,looks yummy.
@தெய்வசுகந்தி,
செய்து பார்த்துட்டு சொல்லுங்க. மிக்க நன்றி.
@விஜய்,
மிக்க நன்றி சகோ. சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க.
@philosophy prabhakaran,
குலாப் ஜாமுன் மாதிரியே தான், ஆனா ருசியும் மனமும் அதைவிட நல்லா இருக்கும். மிக்க நன்றி.
@Pushpa,
மிக்க நன்றி.
unmayavey amirtham thaan maam:-) parkum podhey navil echil ooruthu..book mark pannikaren..kandipa oru nal seithuvittu sollaren..
Plz. check this link at my blog..
http://www.nithubala.com/2010/11/my-bourbon-biscuits-recipe-selected-as.html
மிக்க நன்றி நிதுபாலா. அவசியம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Thanks Maam for your support and wishes:-) Kandipa seidhu parkaren..entha sweet unka kandupidipa illai one of the traditional sweets thana? rombha arumayana recipe..
இந்த ஸ்வீட் அம்மாவின் உதவியுடன் புதுசா தான் ட்ரை பண்ணேன். நிச்சயம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க. மிக்க நன்றி நிதுபாலா.
செஞ்சு பார்த்துட்டுச் சொல்றேன் புவனா.
வீட்டுலே நிறைய பாதாம் பருப்பு இருக்கு. அதை மட்டும் போட்டுச் செய்யலாமா? பாதாம் அமிர்தமா இருக்காதா:-)))))
பாதாம்ல செய்தாலும் நிச்சயம் அமிர்தமா தான் இருக்கும். செய்து பார்த்துட்டு சொல்லுங்க. மிக்க நன்றி துளசி கோபால்.
Yummy and truly tempting
மிக்க நன்றி.
புதுமையான செய்முறை...கட்டாயம் செய்துபார்க்கிறேன்.
பேரும் நல்லாருக்கு.
அவசியம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க. மிக்க நன்றி.
இது புதுசா இருக்கு
பெயரும் அருமை.
மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.
முந்திரி அமிர்தம் என்ற பெயர் மிக அழகு! புதுமையான குறிப்பாகவும் சொல்லியிருக்கும் விதம் மிக அருமையாகவும் இருக்கிறது!
மிக்க நன்றி மனோம்மா.
புதுமையான இனிப்பு. செய்து பார்க்க வேண்டும்.
நன்றி புவனேஸ்வரி.
அவசியம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க. மிக்க நன்றி கோமதியம்மா.
பார்க்கும் போதே வாய் ஊறுது உடனே சாப்பிடனும் போல இருக்கு.
ஏலக்காய் முட்டை வட்லாபப்த்துக்கு வருத்து பொடித்து தான் போடுவோம் வாசனை தூக்கலாக இருக்கும்\
ஆமாம், வறுத்து போடும்போது வாசனை தூக்கலாக இருக்கும். மிக்க நன்றி ஜலீலாம்மா.
Post a Comment