Sunday, November 28, 2010


என்றும் இனியவை - S.P.சைலஜா

திருக்குறள் உலகப் பொதுமறை என்பது போல, இசையும் கூட உலகத்தின் பொதுவான மொழி என்று கூறலாம். இசை எல்லோரையும் அழச் செய்கிறது, சிரிக்கச் செய்கிறது, சாந்தப் படுத்துகிறது. இசையை ரசிக்கும் போது மனிதன் ஒரு தவ நிலைக்குப் போய்விடுகிறான். இசைக்கு உயிர் கொடுப்பவர்களால் உருவாக்கப்படும் இசை, அதனை ரசிப்பவர்களால் மட்டுமே தொடர்ந்து வாழ்கிறது. எந்த விஷயமுமே உருவாக்கப் படுவது எத்தனை முக்கியமோ, அதை விட பல மடங்கு அதனை ரசிக்க பலர் இருந்தால் மட்டுமே அது தொடர்ந்து பயணிக்க முடியும். அந்த வரிசையில் S.P.சைலஜா அவர்களின் அசத்தலான குரலினை யாரும் ரசிக்காமல் இருக்க முடியாது.


இசைக்கு மொழி தடையில்லை என்பதை நிரூபிப்பது போல இவரும் சுந்தரத் தெலுங்கு பிரதேசத்தில் தன் இசைப் பயணத்தை தொடங்கியவர். தமிழகத்திலும் தன் இசைக் கொடியை நாட்டி இருக்கிறார். தனது பதினைந்தாவது வயதில் பாட ஆரம்பித்த இவரது குரல் இன்றும் எப்படி இளமை மாறாமல் அப்படியே உள்ளது என்பது வியப்பாக உள்ளது.

"பொண்ணு ஊருக்கு புதுசு" என்கிற படத்தில் வரும் "சோலைக் குயிலே காலைக் கதிரே" என்ற படத்தில் இவரது குரலில், சரிதா மிதிவண்டி ஓட்டிக்கொண்டே மலை கிராமம் முழுவதும் சுற்றிவரும் போது பாடலைக் கேட்கும் நாமும் அந்த கிராமத்தை ஒரு வலம் வந்து விடுவோம். அந்த அளவிற்கு மிக இனிமையான பாடல். பாடல் வரிகளும் இந்தப் பாடலின் இனிமைக்கு வலிமை சேர்த்துள்ளன. "ரோசாப்பூ ரவிக்கைக்காரி" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான்" பாடலில் தனது சகோதரர் S.P.B.யைப் போல, சற்று குரலை மாற்றிப் பாடினாலும் பாடல் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும்.

"சலங்கை ஒலி" என்ற படத்தின் மூலம் நடிப்புத் துறையிலும் கால் பதித்துள்ளார். இவரைப் போன்ற நல்ல குரல்வளம் கொண்டவர்களின் பாடல்களைக் செவிமடுக்கும்போது மனம் அமைதி பெறுகிறது. S.P.சைலஜா அவர்கள் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் சிலவற்றை கேட்டு மகிழ்வோம்.

ஆசைய காத்துல தூது விட்டு.. (ஜானி)


சின்னஞ்சிறு வயதில்.. (மீண்டும் கோகிலா)


அரிசி குத்தும்.. (மண் வாசனை)


ஏதோ.. நினைவுகள்.. (அகல் விளக்கு)


கீதம்.. சங்கீதம்.. (கொக்கரக்கோ)


காலை நேரக் காற்றே.. (பகவதிபுரம் ரயில்வே கேட்)


கண்ணுக்குள்ளே.. யாரோ.. (கை கொடுக்கும் கை)


மலர்களில் ஆடும் இளமை.. (கல்யாண ராமன்)


மாமன் மச்சான்.. (முரட்டுக் காளை)


மனதில்.. என்ன நினைவுகளோ.. (பூந்தளிர்)


ஒரு கிளி உருகுது.. (ஆனந்தக் கும்மி)


வரம் தந்த சாமிக்கு.. (சிப்பிக்குள் முத்து)


மொட்டு விட்ட முல்லைக் கோடி.. (இன்று நீ நாளை நான்)


ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. (தனிக்காட்டு ராஜா)


வான் போலே வண்ணம் கொண்டு.. (சலங்கை ஒலி)


42 comments:

RVS said...

வான் போலே வண்ணம் கொண்டு என்னோட ஆள் டைம் ஃபேவரிட். நல்ல கலெக்ஷன். ;-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.

கே.ஆர்.பி.செந்தில் said...

வரம் தந்த சாமிக்கு பாடல் நான் எப்போது கேட்டாலும் அது முடியும் வரை வேறு வேளைகளில் கவனம் செல்லாது ...

ராமலக்ஷ்மி said...

SP ஷைலஜாவின் அருமையான பாடல்களைத் தொகுத்துக் கேட்கத் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி.

// இசைக்கு உயிர் கொடுப்பவர்களால் உருவாக்கப்படும் இசை, அதனை ரசிப்பவர்களால் மட்டுமே தொடர்ந்து வாழ்கிறது.//

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

raja said...

மிக அற்பதமான தொகுப்புகள்.. சைலஜாவின் குரலில் பெண்மையின் லட்சணங்கள் குழைந்தோடும் அது தானே பெண் பாடகர்களின் பொக்கிஷம்.. ஆனால் இப்போதைய பெண்பாடகர்கள் ஆண் தன்மையுடன் பாடுவதே லட்சணமாக கொண்டு பாடுகிறார்கள்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கே.ஆர்.பி.செந்தில்,
ஆமாம் சகோ, அருமையான தாலாட்டு பாடல். மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி,
மிக்க நன்றி மேடம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@raja,
அருமையாச் சொன்னீங்க. மிக்க நன்றி ராஜா.

S.Menaga said...

good collection,she is my fav singer!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மேனகா.

Gopi Ramamoorthy said...

எல்லாமே சூப்பர். வரம் தந்த, ஒரு கிளி உருகுது,சின்னஞ்சிறு வயதில் என்னோட ஆல் டைம் பேவரைட்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆமாம் கோபி. இன்னும் சில அருமையான பாடல்கள் லிங்க் கிடைக்கவில்லை. மிக்க நன்றி.

தமிழ் அமுதன் said...

அருமை.. அருமை.. நன்றி..!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி தமிழ் அமுதன்.

raja said...

எனது சிறிய வருத்தம் ஒன்றை தங்களிடம் பதிவுசெய்கிறேன்.. ஆர்.சூடாமணி எனும் அற்புத பெண் எழுத்தாளர் இறந்துபோனார் பெண் வலைமனையாளர்கள் ஒருவரும் அவரைப்பற்றி ஒரு சிறு குறிப்புகூட எழுதவில்லை.. இலக்கியத்திற்காக திருமணம் கூட செய்யவில்லை அந்த இலக்கிய திருஉரு.

Chitra said...

Lovely selections!!! a keep sake!

கே.ரவிஷங்கர் said...

”ஆயிரம் மலர்களே மலருங்கள்” பாட்டில் “கோடையில் மழை வரும்” என்ற வரிகளைப் பாடியபடி இரண்டாவது சரணத்தில் ஷைலஜா பாட்டினுள்ளே வருவார் அப்படியே அள்ளிக்கொண்டுப்போகும்.

“கோடையில் மழை வரும்.... வசந்த காலம் மலரலாம்... எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமோ? காலட் தேவன் சொல்லும்....”

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Chitra,
மிக்க நன்றி சித்ரா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கே.ரவிஷங்கர்,
அற்புதமான பாடல். ஆனால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலைப் பாடியவர் ஜென்சி. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

தெய்வசுகந்தி said...

எல்லாமே எனக்கும் பிடித்த பாடல்கள்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தெய்வசுகந்தி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கே.ரவிஷங்கர்,
இரண்டாவது சரணம் பாடுவது சைலஜா அவர்களா? தகவலுக்கு மிக்க நன்றி.

விஜய் said...

எனக்கு பிடித்த எல்லாமே உங்கள் வரிசையில் வருகிறது

(ஆன்மீகம், கிரிக்கெட், பாடல்கள் )

உமா ரமணனுக்கு பிறகு ஷைலஜா எனக்கு மிகவும் பிடிக்கும்

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி.

Pushpa said...

Like her voice,thanks for sharing...

Kanchana Radhakrishnan said...

SP ஷைலஜாவின் பாடல்களைத் தொகுத்துக் தந்துள்ளீர்கள். எல்லாமே எனக்கும் பிடித்த பாடல்கள்!மிக்க நன்றி.

philosophy prabhakaran said...

ஆசையை காத்துல தூது விட்டு மற்றும் வான் போலே பாடல்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும்...
பதிவு கலக்கல்...

என்ன மேடம்....? நம்ம கடைப்பக்கம் வர்றதே இல்லை...

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Pushpa,
கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி புஷ்பா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Kanchana Radhakrishnan,
கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@philosophy prabhakaran,
"வான் போலே" பாடல் நிறைய பேருக்கு பிடித்த பாடலாக இருக்கிறது. உங்க பதிவுகள் அனைத்தையும் படித்து விடுவேன். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி பிரபாகரன்.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

"வரம் தந்த சாமிக்கு.."
எனக்கு ரொம்ப பிடிக்கும்.......

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான பாடல். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி யோகேஷ்.

R.Gopi said...

புவனா மேடம்...

மற்றுமொரு வித்தியாசமான பாடகர் / பாடகி செலக்‌ஷன்...

எஸ்.பி.ஷைலஜா அவர்கள் வித்தியாசமான குரலமைப்பு கொண்டவர்... கொஞ்சம் இனிமை, கொஞ்சம் ஆண்மைத்தனமான அழுத்தமான வாய்ஸ்.. ஆயினும் அந்த இனிமை நன்றாக இருக்கும்...

நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களில் என் ஃபேவரிட் பாட்டுக்கள் :

1) ஏதோ.. நினைவுகள்.. (அகல் விளக்கு)
2) கீதம்.. சங்கீதம்.. (கொக்கரக்கோ)
3) மலர்களில் ஆடும் இளமை.. (கல்யாண ராமன்)
4) மனதில்.. என்ன நினைவுகளோ.. (பூந்தளிர்)
5) ஒரு கிளி உருகுது.. (ஆனந்தக் கும்மி)
6) ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. (தனிக்காட்டு ராஜா)

மிகவும் பிடித்ததாக தனிக்காட்டு ராஜா பாடலை சொல்லலாம்... அது ஒரு மெகா ஹிட் பாடல்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆமாம், என்றும் இளமையான குரல். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கோபி.

vettippayapullaiga said...

i like the all songs

புவனேஸ்வரி ராமநாதன் said...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

vanathy said...

i like her very much.

புவனேஸ்வரி ராமநாதன் said...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி வானதி.

asiya omar said...

அருமை புவனா,பகிர்வுக்கு மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி ஆசியாம்மா.

mohamed hasan said...

80- களில் இளையராஜாவால் இரு இனிய இசை மலர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் ஜென்சி மற்றவர் SP.ஷைலஜா. இவர்கள் இருவரின் குரல்களில் வித்தியாசமான
ரசனை உண்டு.
ஜென்சி பாடிய............என் வானிலே ஒரே வெண்ணிலா .....................
ஷைலஜா பாடிய ....மலர்களில் ஆடும் இளமை புதுமையே ...................
இரண்டு பாடல்களும் வித்தியாசமான இனிமைதான் . இருவரின் குரல்களில் ஒரு குழைந்தை தனம் இருக்கும் .
இருவரும் சேர்ந்து பாடிய ... ஆயிரம் மலர்களே மலருங்கள் .............பாடலும் இனிமைதான்
இவ் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலில் ..............
ஆரம்ப ஹம்மிங் SP . ஷைலஜா ஹா ஹா ..........என்று பாட தொடர்ந்து ஜென்சி ஆயிரம் மலர்கள் ...........என்று பாட அழகாக இருக்கும் . தொடர்ந்து ஜென்சி ...வானில்லே வெண்ணிலா .................என்று பாடுவார் .அதை தொடர்ந்து அடுத்த சரணம் SP .ஷைலஜா
கோடையில் மழைவரும் வசந்த காலம் ....................என்று பாடி முடிப்பார் . இருவரின் குரல்களும் இரு வேறு இனிமை
80 - களில் வானொலியில் ஜென்சி , ஷைலஜா பாடல்கள் வலம் வந்ததை மறக்க முடியவில்லை. இப்பொழுது கேட்கும் பொழுது பசுமை . காலத்தால் அழியாத இரு இசை குரல்கள் ஜென்சி , SP.ஷைலஜா
சமீபத்தில் நண்பிகளான ஜென்சி யும் SP.ஷைலஜா வும் - "இரு பறவைகள் " எனும் இசை நிகழ்ச்சியில் கலந்து இருவரின் 80-களில் உருவான இனிய பாடல்களுடன் - ஆயிரம் மலர்களே மலருங்கள் ...............பாடலையும் பாடினார்கள் .

mohamed hasan said...

SP. சைலஜா பாடிய அமரகாவியம் திரைப்படத்தின் பாடல்.......... செல்வமே ...ஒரே முகம்
பார்க்கிறேன் .......... இந்த பாடல் கண்ணதாசன் இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
இந்த பாடலை பாடும் பொழுது சோலை குயில் S.P.சைலஜாவின் வயது 12.
இப்பாடல் பாடி முடிந்த பின் கவிஞர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும் சிறுமி ஷைலஜாவை பாராட்டினார்கள். பாடலை அந்த சிறு வயதிலும்
நன்றாக பாடியுள்ளார்.முதல் சரனத்தில் ... நான் பாடும் ராகம் .....என்று பாட்டினுள்ளே நுழைந்து மென்மையான குரலில் பாடலின் கருத்தும் பாடலை உள்வாங்கி பாடும் பொழுது பாராட்டாமல் இருக்க முடியுமா ? பாடலின் இடையே சோகமும் பாடலின் முடிவில் அழுகையும் இனிமையாக இருக்கும் .
திரை படத்தில்....... இறந்து போன தன் தாய் கற்று தந்த பாடலை பாடும் படி தந்தை சொல்லும் பொழுது 10 வயது சிறுமி பாடும் பாடலாக இடம் பெறுகிறது . 10 வயது சிறுமிக்காக பின்னணி பாடிய 12 வயது சிறுமி சைலஜா பாராட்டப்படவேண்டியவர்
இந்த பாடல் முன்னர் வானொலியில் அடிக்கடி ஒலிப்பரப்பான பாடல் . வானொலி அறிவிப்பாளர் விருப்பத்திலும் , இன்றைய நேயர் , தேர்ந்த இசை நிகழ்ச்சிகளில் இந்த பாடலை SP .சைலஜா உள்வாங்கி உருகி பாடியிருப்பதாகவும் , மென்மையான குரலில் குழந்தை தனத்தையும் இனிமையாக தந்துள்ளார் என்பார்கள் .

Post a Comment

Related Posts with Thumbnails