தேங்காய் : 2
வெல்லம் : 750 கிராம்
ஏலக்காய் : 5
நெய் : 50 கிராம்
செய்முறை:
முதலில் தேங்காயை அடிவரை துருவாமல் வெள்ளையாகத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். துருவிய தேங்காயை மிக்ஸியில் நன்றாக பட்டுபோல அரைத்து அந்த விழுதினை தனியே வைத்துக்கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லப் பாகை ஊற்றி நன்கு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினைக் கலந்து, அடிபிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். முக்கால் பாகம் வெந்ததும், நெய்யினை ஊற்றி கிளறவும். ஊற்றிய நெய் பிரிந்து வரும்போது ஏலக்காய் பொடி தூவி கலந்து வேறு பாத்திரத்தில் மாற்றி விடவும். தேங்காய் திரட்டிப் பால் தயார்.
எங்கள் ஊர் திருமணங்களில் தேங்காய் திரட்டிப் பால் மிகவும் பிரசித்தம். தேங்காய்க்கு வயிற்றுப் புண், வாய்ப் புண் இவற்றை ஆற்றும் சக்தி உள்ளது.
15 comments:
சூப்பப்ர்ப் குறிப்பு....
woww simply superb!!
நன்றி கீதா.
நன்றி மேனகா.
Looks so yummy!!!!
நன்றி சித்ரா.
ஆஹா....
புவனா மேடம்....
பார்த்தாலே நாக்குல தண்ணி ஊறறது....
திரட்டுப்பால் கேள்விப்பட்டு இருக்கேன்....தேங்காய் திரட்டுப்பால் இப்போ தான் கேள்விப்படறேன்.
ஆனா, இந்த ஃபோட்டோல பார்த்தா, அப்படியே பால் அல்வா மாதிரியே இருக்கு....
ரொம்ப நன்னா இருக்குமோ??!! பார்சல் அனுப்ப ஏதாவது சான்ஸ் இருக்கா??
நன்றி கோபி. பார்சல் கண்டிப்பா அனுப்பிடலாம்.
சூப்பர். எனக்கு ஒரு பீஸ் அனுப்புங்கோ!!!
அனுப்பிடலாம். நன்றி வானதி.
காணக் கண் கோடி வேண்டும்... (காண்பதோடு சரி :)
நன்றி அப்பாதுரை அவர்களே.
தேங்காய் திரட்டுப்பால் வித்தியாசமான குறிப்பு வாழ்த்துக்கள்
அப்படியே என்னோட தளத்துக்கும் வந்துட்டு போங்க. நன்றி
http://libastrichy.blogspot.com
நன்றி பழனி முருகன்.
நல்ல குறிப்பு. வெல்லம் சேர்த்து செய்ததில்லை. நன்றி. செய்து பார்க்கிறேன்.
நன்றி ராமலக்ஷ்மி. செய்துபாத்துட்டு சொல்லுங்க.
Post a Comment