Thursday, August 5, 2010


திருவையாறு அசோகா

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு : 200 கிராம்
பயத்தம் பருப்பு : 50 கிராம்
சர்க்கரை : 400 கிராம்
நெய் : 100 கிராம்
முந்திரிபருப்பு : 5
ஏலக்காய் : 3
ஃபுட் கலர் : தேவையான அளவு

செய்முறை:
முதலில் பயத்தம்பருப்பை குக்கரி
ல் நன்கு வேகவைத்து தனியே வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே நெய்யில் கோதுமை மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் கோதுமை மாவு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

கோதுமை நன்கு வெந்ததும், வேகவைத்த பயத்தம் பருப்பு, நெய் கலந்து, இந்த கலவை நன்கு
சுருண்டு வரும் வரை கிண்டிக் கொண்டே இருக்கவும். இதன்மேல் சர்க்கரையை கலக்கவும். ஒரு சிறிய கரண்டி பாலில் ஃபுட் கலர் சேர்த்து வைத்துக் கொள்ளவும். அசோகா கலவை நல்ல பதத்திற்கு வந்தவுடன் இந்த ஃபுட் கலர் கலந்த பாலை ஊற்றி நன்கு கிளறவும். வறுத்து வைத்த முந்திரி பருப்பு, பொடித்து வைத்த ஏலக்காய் மேலே தூவி பரிமாறவும்.


இந்த அசோகா தஞ்சை மாவட்டத்தில் மிகப் பிரபலமான இனிப்பு வகை. அசோகாவின் பூர்வீகம் திருவையாறு. திருவையாற்று காவேரி தண்ணீரில் செய்யும்போது இதன் ருசியே அலாதியாக இருக்கும். திருவையாறு தியாகராஜ ஆராதனைக்குச் சென்று பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை செவிக்கு உணவாகவும், அசோகாவை வயிற்றுக்கு உணவாகவும் பெற்று வரலாம். உள்ளம் அமைதிபெற ஐய்யாரப்பரை தரிசித்து வரலாம்.

காவேரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில், வீட்டு விசேஷங்களிலும் கல்யாணங்களிலும் சாப்பாட்டு மெனுவில் கட்டாயம் இந்த அசோகா இடம்பெறும். பொதுவாக அல்வா என்றால் கோந்து பதத்தில் கொஞ்சம் மென்றுதான் சாப்பிட வேண்டியிருக்கும். அசோகாவை சாப்பிடும்போது அதன் ருசியில் மனம் கரையும்போதே, நாவில் கரைந்து தொண்டைக்குள் சென்றுவிடும்.

29 comments:

துளசி கோபால் said...

கோதுமை மாவு சேர்க்கும் விஷயம் இதுவரை தெரியவே தெரியாது. வெறும் பயிற்றம்பருப்புன்னு நினைத்திருந்தேன்.

செஞ்சு பார்த்துட்டுச் சொல்றேன்.

நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி துளசி.

சௌந்தர் said...

பார்க்கும் போதே சாப்பிடவேண்டும் தோன்றுகிறது....

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சௌந்தர்.

கே.ஆர்.பி.செந்தில் said...

நான் வீட்டில், திருமணங்களில் சாப்பிட்டு இருந்தாலும், திருவையாறு ஆண்டவர் அசோகா கடையில் சாப்பிட்டது அற்புதம்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆமாம் செந்தில், ஆண்டவர் கடை அசோகா சுவை தனி தான்.

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது...பார்ர்கும் பொழுதே சாப்பிட தோனுது...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கீதா.

Mrs.Menagasathia said...

வாவ்வ்வ் கலரை பார்க்கும் போதே அப்ப்டியே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு..செய்து பார்த்து சொல்கிறேன்..அருமையாக இருக்கு!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா. செய்து பார்த்துட்டு அவசியம் சொல்லுங்க.

Madhavan said...

"காவேரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில், வீட்டு விசேஷங்களிலும் கல்யாணங்களிலும் சாப்பாட்டு மெனுவில் கட்டாயம் "

yes.. I really miss this last 14 yrs as I moved out of TN..

ஆயில்யன் said...

தஞ்சாவூர் போறப்ப எல்லாம் திருவையாறு கடை அசோகா கண்டிப்பாக வாங்கிட்டு வந்துடுவாங்க :) நாக்குல போட்ட கணத்திலயே சொய்ய்ங்ங்ங்க்ன்னு உள்ள போயிடும் அதுக்காகவே ரொம்ப நேரம் பார்த்து பார்த்து மெதுவா தின்போம் ! ஹம்ம்ம்ம்

இப்ப போட்டோவை பார்த்ததும் அள்ளி எடுத்து தின்னத்தான் தோணுது !

vanathy said...

very colorful & looking yummy!

மனோ சாமிநாதன் said...

அசோகா பார்க்கும்போதே நாவில் கரைவது மாதிரி இருக்கிறது. இங்கு தஞ்சையில் இதற்கென்றே தனித்தனி ஸ்டால்கள் இருக்கின்றன. சாயங்கால நேரத்தில் வியாபாரம் சூடு பறக்கும்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

Madhavan & ஆயில்யன்,
என்ன சொல்வதென்று தெரியவில்லை? பல பேருக்கு இதே நிலைமை தான்.

நன்றி வானதி.

நன்றி மனோ அவர்களே.

asiya omar said...

அசோகா சூப்பர்.படம் கலர்ஃபுல்.பார்த்தவுடன் சாப்பிடத்தோணுது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஆசியா அவர்களே.

R.Gopi said...

புவனா........

அசோகா அல்வா படு சூப்பரா இருக்கும்.... ஆனா, சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.... இவ்ளோ சிகப்பா இல்லாம, கொஞ்சம் மஞ்சளா பார்த்திருக்கிறேன்...

என்னோட ஒன் ஆஃப் த ஃபேவரிட் ஸ்வீட் இது...

கொஞ்சம் பார்சல் போட முடிஞ்சா, ஒரு சின்ன தூக்குல போட்டு, துபாய் அனுப்பவும்.....

புவனேஸ்வரி ராமநாதன் said...

கண்டிப்பா பார்சல் அனுப்பிவைக்கிறேன். நன்றி கோபி.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான அசோகா

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஜலீலா அவர்களே.

balutanjore said...

ahaha sonda oor gnabagam vanduduthe

thank you for the recipe madam

my father is from thiruvaiyaruu and mother puthamangalam(next to kalki house)

balasubramanyan vellore

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி பாலசுப்ரமணியன்.

Premalatha Aravindhan said...

This my all time fav,amma usedto prepare this almost for all occasions.That too my hometown special.luks very tempting.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி பிரேமலதா.

கமலகண்ணன் said...

நான் தஞ்சையில் 1 வருடம் இருந்த போது ரயிலடி வழியாக சென்றால் பாம்பே ஸ்வீட் கடையில் என்னுடைய வண்டி பிரேக் பிடிக்காமலேயே நிற்கும் அசோக ஸ்வீட் 100கிராம் சாப்பிட்ட பின்னர்தான் வண்டி கிளம்பும்... அதை உங்களின் செய்முறை நினைக்க வைத்துவிட்டது.


உங்களின் அருமையான செய்முறைக்கு நன்றிகள் பல...

புவனேஸ்வரி ராமநாதன் said...

பழைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி. மன்னார்குடியில் டெல்லி ஸ்வீட்ஸில் அசோகா அல்வா மிகவும் ருசியாக இருக்கும். மாலை நேரங்களில் அசோகா அல்வா சாப்பிடவே ஒரு கூட்டம் கூடிவிடும்.

alva arumugam said...

அல்வா அருமை

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails