Monday, August 30, 2010


பால்கறி

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு : 3
முருங்கைக்காய் : 2
தேங்காய் : 1/2 மூடி
பச்சை மிளகாய் : 5
சின்ன வெங்காயம் : 7 பல்
பூண்டு : 2 பல்
பொட்டுக்கடலை : 2 தேக்கரண்டி
சீரகம் : 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு

தாளிக்க:
கடுகு : 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு : சிறிதளவு
கடலைப் பருப்பு : சிறிதளவு
நல்லெண்ணெய் : 1 தேக்கரண்டி


செய்முறை:
முதலில் முருங்கைக்காய், உருளைக்கிழங்கு இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்றாகக் கொதித்தவுடன் அதில், முருங்கைக் காயைப் போடவும். முருங்கைக் காய் அரை வேக்காடு வெந்ததும், நறுக்கிய உருளைக் கிழங்கைப் போடவும்.

இதற்கிடையே, தேங்காய், பொட்டுக்கடலை, சீரகம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு இவற்றை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

முருங்கைக்காய், உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவினை கலந்து கொதிக்க விடவும். காயுடன் மசாலா நன்கு கலந்ததும், ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து கலக்கவும். பால்கறி தயார்.


இந்த பால்கறியை சாம்பார் சாதம், ரசம் சாதம், வெஜிடபிள் ரைஸ், பூரி, சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து உண்ணலாம். கார அடையுடன் சேர்த்து சாப்பிட ருசி அபாரமாக இருக்கும்.

7 comments:

பொன் மாலை பொழுது said...

பிரமாதமான ரெசிபிதான்.
பகிவுக்கு நன்றி.

Palani murugan said...

Superb! வாழ்த்துக்க‌ள்

Chitra said...

yummy

Menaga Sathia said...

looks super!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மாணிக்கம்.

நன்றி பழனி முருகன்.

நன்றி சித்ரா.

நன்றி மேனகா.

Asiya Omar said...

அருமை.நிச்சயம் செய்து அசத்த வேண்டும்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஆசியா அவர்களே. செய்துபாத்துட்டு சொல்லுங்க.

Post a Comment

Related Posts with Thumbnails