Thursday, August 19, 2010


கடாய் வெஜிடபிள்

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு
: 4
குடைமிளகாய்
: 1
கேரட்
: 4
தக்காளி
: 3
பெரிய
வெங்காயம் : 3
பச்சைமிளகாய்
: 2
இஞ்சி
: சிறிதளவு
பூண்டு
: 5 பல்
சீரகப்பொடி
: 1 ஸ்பூன்
மல்லிப்பொடி
: 1 ஸ்பூன்
மிளகாய்ப்பொடி
: 1 ஸ்பூன்
மிளகுப்பொடி
: 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள்
: 1/4 ஸ்பூன்
நெய்
: 2 ஸ்பூன்
நல்லெண்ணெய்
: 2 ஸ்பூன்
சீரகம்
: 1/2 ஸ்பூன்
உப்பு
: தேவையான அளவு
கொத்தமல்லி
தழை: சிறிதளவு

செய்முறை:
முதலில் உருளைக் கிழங்கு, வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கேரட், இவற்றை பெரிய துண்டுகளாக
நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு
கடாயில், கொடுத்துள்ள அளவில் நெய், நல்லெண்ணெய் ஊற்றி அதில், சீரகம் தாளித்து, பின் அரைத்து வைத்த விழுதினைப் போட்டு நன்றாக வதக்கவும். இதன் மேல், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். இவை வதங்கும்போதே சீரகப்பொடி, மஞ்சள் தூள், மிளகுப்பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி இவற்றை, கொடுத்துள்ள அளவில் போட்டு நன்றாக வதக்கவும். இந்த கலவை நன்கு வதங்கிய பின், 4 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்தபின் தேவையான அளவு உப்பு போடவும்.

நறுக்கி
வைத்த காய்களைப் போட்டு நன்கு கிளறி, கடாயை மூடிவிட்டு அடுப்பை இளந்தீயில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து காய்கள் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை சேர்க்கவும். இதன் மேல் சூடான நெய் ஒரு ஸ்பூன் கலக்கவும். கடாய் வெஜிடபிள் தயார். இதனை சப்பாத்தி, பூரி, ஃப்ரைட் ரைஸ், ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.


நாம்
எப்போதுமே சாம்பார் செய்தாலும் சரி, பொரியல், கூட்டு செய்யும்போதும் சரி, அவற்றை ஒரு காய் கொண்டு செய்யாமல், பல காய்களைக் கொண்டு இவற்றை செய்யும்போது, அதன் ருசியும் கூடும், பல காய்களின் சத்துக்களும் ஒரே நேரத்தில் நம் உடலில் சேரும். காலங்களை வெல்ல காய்கறிகளை நிறைய சேர்த்துக்கொள்வோம். நலமுடன் வாழ்வோம்.

14 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராம்ஜி.

Madhavan Srinivasagopalan said...

I told my wife to read this.. she's expert in cooking.. Hope I get another nice dish... thanks to you

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மாதவன். செய்துபார்த்து சொல்லுங்க.

Asiya Omar said...

super and simple.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஆசியா அவர்களே.

GEETHA ACHAL said...

அருமையாக இருக்கின்றது...வாழ்த்துகள்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கீதா.

மனோ சாமிநாதன் said...

கடாய் வெஜிடபிள் கறி அருமை! புகைப்படமும்கூட!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மனோ மேடம்.

vanathy said...

நல்லா இருக்கு உங்கள் ரெசிப்பி + புகைப்படம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி வானதி.

Menaga Sathia said...

super recipe !! thxs for sharing..

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

Post a Comment

Related Posts with Thumbnails