Sunday, August 22, 2010


மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா

நம் வாழ்வில் சில தருணங்கள்..............
திருக்கோயில் சென்று இறைவன் சன்னதியில் கற்பூர தீப ஒளியில் கடவுளைக் காணும்போதும்,
விடியற் காலை மஞ்சள் நிற கதிரவனைக் காணும்போதும்,
பெற்றோரின் பாதம் தொட்டு வணங்கும் போதும்,
இளையராஜா பாடல் கேட்கும்போதும்,
அந்திமாலையில் சாலையில் தனியே நடக்கும்போதும்,
அழுதுகொண்டே சிரிக்கும் குழந்தையைக் காணும்போதும்,
பிறருக்கு உதவி செய்யும்போதும்,
நம் மனதில் ஓர் ஆழ்ந்த அமைதியும், ஓர் இனம் புரியாத சந்தோஷமும் உண்டாகும்.

இதே போன்றதொரு அமைதியும், ஆனந்தமும் அவரவர் பிறந்த மண்ணைப் பற்றி நினைக்கும் போதும் நமக்கு
ஏற்படும். உலகின் எந்த மூலையில் நாம் இருந்தாலும் நம் மண்ணின் மணம் நம்மை ஈர்க்கத்தான் செய்யும். நாம் பல வேலைகளில் இருந்தாலும், நம் ஊரை நினைத்துப் பார்க்க, பெருமைப்பட்டுக் கொள்ள சில தருணங்கள் கிடைக்கும். எங்கள் ஊரை நினைத்து பெருமைப் பட்டுக் கொள்ள எங்களுக்கு, மண்ணின் மைந்தர்களுக்கு, ஒரு விஷயம் கிடைத்துள்ளது.

பெயருக்கு
ஏற்றாற்போல் எங்கள் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்குத் திருவிழா இன்று 22 - 08 - 2010 (ஞாயிறு) நடைபெறுகிறது.


வடக்கே
உள்ள துவாரகைக்கு சமமான புனிதத் தலம் மன்னார்குடி. துவாரகையில் கண்ணன் செய்த லீலைகளை இங்கு செய்தமையால் தட்சிண துவாரகை என்று அழைக்கப்படுகிறது. நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது.

மன்னார்குடி மதிலழகு, மண்ணில் மிக்கது மன்னார்குடி, மறையோர் மிகுந்தது மன்னார்குடி, கோயில் பாதி குளம் பாதி, என்னும் பழமொழிகளாலும் மன்னை பெருமையுருகிறது.

அர்ச்சாவதார
ரூபமாக மன்னார்குடி என்னும் திவ்ய தேசத்தில் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி எழுந்தருளி நமக்கெல்லாம் அருள்புரிந்து வருகிறார்.

தல மூர்த்தி : ஸ்ரீ ராஜகோபாலசுவாமி
தல இறைவி : செங்கமலத்தாயார் (செண்பக லெட்சுமி, ஹேமாம்புஜ நாயகி, ரக்தாப்ஜ நாயகி, படிதாண்டாப் பத்தினி)
தல தீர்த்தம் : ஹரித்ராநதி, துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம்.

காவிரியின்
கிளை நதியான பாமணி ஆறு, பத்தாவது புண்ணிய நீர் நிலையாகத் திகழ்கிறது. முதன்முதலில் இக்கோயில் சோழமன்னன் ராஜாதி ராஜ சோழன் (கி.பி. 1018 - 1054) காலத்தில் கட்டப்பட்டது. பின்னர், முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1074 - 1125) காலத்தில் இக்கோயிலைப் புதுப்பித்தார். தஞ்சையை ஆண்ட மன்னன் ரகுநாத நாயக்கரும் (கி.பி. 1600 - 1634), அவர் மகன் விஜய ராகவ நாயக்கரும் (கி.பி. 1634 - 1675) இக்கோயிலில் திருப்பணிகள் செய்தனர்.

சமீப
காலத்தில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நாட்கள்:
09 - 09 - 1959
08 - 12 - 1966
08 - 06 - 1995

தற்போது
, ஸ்ரீ ருக்மணி சத்யபாமா, ஸ்ரீ ஹேமாப்ஜ நாயிகா சமேத ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோயில் ராஜகோபுரம் உள்ளிட்ட 16 கோபுரங்கள், 24 சன்னதிகள், 7 பிரகாரங்கள், 11 மண்டபங்கள் ஆகிய அனைத்தும் சீரமைக்கப்பட்டு, இன்று ஆவணி 6-ம் தேதி 22 - 08 - 2010 ஞாயிற்றுக்கிழமை காலை 8 : 00 மணிக்கு மேல் 9 : 55 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

இந்த
பெருமை மிகு விழாவில் கலந்து கொண்டு அனைவரும் பெருமாளின்அருளைப் பெற வாழ்த்துக்கள்.

25 comments:

தமிழ் அமுதன் said...

///திருக்கோயில் சென்று இறைவன் சன்னதியில் கற்பூர தீப ஒளியில் கடவுளைக் காணும்போதும்,
விடியற் காலை மஞ்சள் நிற கதிரவனைக் காணும்போதும்,
பெற்றோரின் பாதம் தொட்டு வணங்கும் போதும்,
இளையராஜா பாடல் கேட்கும்போதும்,
அந்திமாலையில் சாலையில் தனியே நடக்கும்போதும்,
அழுதுகொண்டே சிரிக்கும் குழந்தையைக் காணும்போதும்,
பிறருக்கு உதவி செய்யும்போதும்,
நம் மனதில் ஓர் ஆழ்ந்த அமைதியும், ஓர் இனம் புரியாத சந்தோஷமும் உண்டாகும்.///


மிகவும் அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்...!

மன்னார்குடி எனக்கு பிடித்த ஊர்..! கோயில்,தெப்பகுளம்,விசாலமான அகன்ற சாலைகள் என எளிமையுடன் ஒரு கம்பீரத்தை வெளிப்படுத்தும்.!

மன்னார்குடி பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி..!

தமிழ் அமுதன் said...

மன்னார்குடி யில் இருந்து 22 கிலோமீட்ட்டர் தூரத்தில் இருக்கும் மதுக்கூர் தான் என் ஊர்...!

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்

Unknown said...

அவசியம் கலந்து கொள்ளவேண்டும்... முன்பு அடிக்கடி போவேன் .. இப்ப சென்னை வந்தபின் நாத்திகனாக மாறியதால் போக முடியவில்லை...
ஆனாலும் என் பால்யத்தை சந்தோசமாக வைத்திருந்த நிகழ்வுகளில் இத்திருவிழாவும் ஒன்று ...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி தமிழ் அமுதன். நீங்கள் மதுக்கூர் தான் என்பது முன்பே தெரியும்.

நன்றி ராம்ஜி.

நன்றி செந்தில்.

அபி அப்பா said...

மிகவும் அருமையான விபரங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

R. Gopi said...

தெரியாமல் போய் விட்டதே. கும்பகோணத்தில் இருந்த வரை மன்னார்குடி அடிக்கடி செல்வேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி அபி அப்பா.

மீண்டும் கும்பகோணம் வரும்பொழுது அவசியம் சென்று வாருங்கள். நன்றி கோபி.

Ravichandran Somu said...

மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவில் பெருமைகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

சிறுவனாக இருந்தபோது மன்னார்குடி கோவில் பங்குனி திருவிழாவிற்காக காசு சேர்த்து சென்று பார்த்து மகிழ்ந்த நாட்கள்... தேசிய மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது தேர் இழுத்த நாட்களின் நினைவலைகள்....

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களின் நினைவலைகளை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி ரவிச்சந்திரன்.

nis said...

தகவல்களுக்கு நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி nis.

vanathy said...

நல்ல பயனுள்ள தகவல்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி வானதி.

R.Gopi said...

மன்னார்குடி ராஜகோபால சுவாமியை ஒரே ஒரு முறை தரிசித்து இருக்கிறேன்...

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, ராஜகோபால சுவாமிகள் கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது... அதன் பின், ஒரு முறை ராஜகோபால சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு / பாக்கியம் கிட்டியது...

நல்ல பகிர்வுக்கு நன்றி புவனா...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கோபி.

RVS said...

மூலவர் பரவாசுதேவப் பெருமாள். அப்படியே வேங்கடாஜலபதியை பார்க்கிற மாதிரி இருக்கும். இப்போது தங்கக் கவசம் சார்த்தி தக தகவென்று மின்னுகிறார். கூடவே சந்தான கோபால கிருஷ்ணன் , கையில் ஏந்தி சேவிக்கலாம். ஹும்... போக முடியலை...... ஏழு வருஷம் NHSS ல படிச்சபோது தாயார் மற்றும் சுவாமி தேர் இழுத்து வளர்ந்தவன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.
http://mannairvs.blogspot.com

புவனேஸ்வரி ராமநாதன் said...

இது மாதிரி விசேஷங்களின் பொழுது பழைய நினைவுகள் நம் மனதில் தோன்றுவது இயற்க்கை தான். நன்றி ஆர்.வி.எஸ்.

க.கமலகண்ணன் said...

நான் கும்பாபிஷேகத்திற்கு வர இரயிலில் 1 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து குடும்பத்துடன் செல்ல குதுகலமாய் காத்திருக்க, ணமுஅலுவலகத்தில் புதிய கிளை துவக்க நாளாக முடிவு செய்ய வருத்தமாய் குடும்பத்தினரை மட்டும் அனுப்பி விட்டு விழாவை காணமுடியாமல் போனது

உங்களின் பதிவை பார்த்ததும் மகிழ்ச்சி நன்றிகள் பல உங்களுக்கு...

புவனேஸ்வரி ராமநாதன் said...

பிறகு சென்று பார்த்தீர்களா? நன்றி கமலகண்ணன்.

க.கமலகண்ணன் said...

இன்னும் இல்லை போகனும். விடுமுறை கிடைக்கவில்லை. காத்திருக்கிறேன் ஆவலுடன்...

நகைச்சுவை-அரசர் said...

மன்னார்க்குடியையும், கோபாலனையும்பற்றி எத்தனைமுறை படித்தாலும் ஏனோ எனக்கு அலுப்பதேயில்லை..

அத்தகைய ஒரு இனிய அனுபவத்தை மீண்டும் அளித்தமைக்கு நன்றி புவனா..

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி நகைச்சுவை அரசரே.

VijiParthiban said...

மிகவும் அருமையாக இருக்கிறது புவனா அக்கா அவர்களே. என்னுடைய வலைப்பூவை திறந்து பாருங்கள் அக்கா .தொடரட்டும் நம் நட்பு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@VijiParthiban...

நிச்சயமாகத் தொடரும் நம் நட்பு.
நன்றிகள் பல சகோதரி விஜிக்கு.

Post a Comment

Related Posts with Thumbnails