கேழ்வரகு மாவு : 1 கப்
நிலக்கடலை : 1/4 கப்
அச்சு வெல்லம் : 5
வெள்ளை எள் : 2 ஸ்பூன்
நெய் : 1/4 கப்
கடலை எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை:
கேழ்வரகு மாவை தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், அடுப்பை இளந்தீயில் வைத்து, மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி தட்டி, பூரி போல மொறுமொறுவென்று பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் கடாயில் எள், கடலை இவற்றை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பொரித்து வைத்த கேழ்வரகு பூரி, வறுத்து வைத்த எள், கடலை இவற்றை தனித் தனியே, பொடித்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தையும் பொடித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு சூடான ,நெய் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவை நல்ல பதமாக வந்ததும், ஒரு தட்டில் நெய் தடவி இந்த கலவையை தட்டின் மேல் பரப்பி, ஒரு கத்தியில் நெய் தடவி அழகிய வடிவங்களில் துண்டுகளாக வெட்டினால் ருசியான, ஆரோக்கியமான கேழ்வரகு பர்ஃபி தயார்.
இதே கலவையை வைத்து பர்ஃபி போல் செய்யாமல் கையில் நெய் தடவிக் கொண்டு உருண்டைகளாக உருட்டி கேழ்வரகு உருண்டை போல செய்தும் உண்ணலாம்.
*******
கேழ்வரகின் நன்மைகள்:
நமது ஆரோக்ய உணவுகளின் பட்டியலில் முதல் இடத்தை வகிப்பது கேழ்வரகு. நம் உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து, புரதம், இரும்புச் சத்து கேழ்வரகில் அதிகம் உள்ளது. நார்ச்சத்து இதில் மிகுந்து காணப் படுவதால் எளிதில் ஜீரணிக்கக் கூடியது. நீரிழுவு நோய் உள்ளவர்கள், உணவுக் கட்டுப்பாடு கடை பிடிப்பவர்கள் கேழ்வரகை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. கேழ்வரகு உடல் சூட்டை அதிகரிக்கக் கூடியது. அதனால் கேழ்வரகை எப்போதும் தனியாக உண்ணாமல், வேறு ஒரு பொருளுடன் சேர்த்து செய்து சாப்பிடுவதே நல்லது. கூழ் செய்தால் வெங்காயம், மோர் சேர்த்து, அடை செய்தால் வெல்லம், தேங்காய் சேர்த்து, என்று செய்வதால் கேழ்வரகிலிருந்து கிடைக்கும் நல்ல பலனை நம்மால் பெற முடியும்.
எள்ளின் நன்மைகள்:
எள் நம் உடம்பில் தேங்கியிருக்கும் தேவையில்லாத நச்சுத் தன்மையினை நீக்கும் சக்தி உடையது. எள் இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன், இரத்த விருத்திக்கும் உதவுகிறது. 90% பெண்களின் பிரச்சினையான இரத்த சோகையை போக்கக் கூடியது. எள்ளை பொடித்து வெள்ளத்துடன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு குணமாகும். எள்ளு பொடியுடன், எழுமிச்சம் சாறு சேர்த்து உடம்பில் தடவி வர தோல் நோய்கள் குணமாகும்.
வெல்லத்தின் நன்மைகள்:
சர்க்கரையை அதிகம் பழக்கப் படுத்தாமல், வெல்லம் சேர்த்துக் கொள்வதை, சிறு வயதில் இருந்தே குழந்தைகளை பழக்குவது நல்லது. சர்க்கரையினால் ஏற்ப்படும் தீமைகள் அதிகம். வெல்லத்தினை உணவில் சேர்த்துக் கொள்வதினால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அதிகம் தேவைப்படும் இரும்புச் சத்து கிடைக்கிறது. எந்தெந்த உணவில் சர்க்கரை சேர்த்து செய்கிறோமோ, அவற்றில் முடிந்த வரை வெல்லம் சேர்த்து செய்ய ருசியுடன் ஆரோக்கியமும் சேர்த்து கிடைக்கிறது.
நிலக்கடலையின் நன்மைகள்:
நிலக் கடலையில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். தற்காலத்தில் உடல்பருமன் நோய் அநேகம் பேரை பாதித்து உள்ளது. கொழுப்புசத்து அதிகம் நிறைந்த உணவுகளை உண்பதன் பலனே இது. ஆனால் நிலக்கடலையை உணவில் சேர்த்துக் கொள்வதால் கெட்ட கொழுப்பு நீங்கி, நம் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு கிடைப்பதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்கள். எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது நிலக் கடலை.
தனித்தனியாகவே இவற்றிற்கு இத்தனை நலன்கள் இருக்கும்போது, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரே உணவாக செய்யும் போது அதிலிருந்து கிடைக்கும் சத்திற்கு அளவே இல்லை.
28 comments:
அறிந்திராத செய்முறை. சத்தான குறிப்புக்கும் தந்திருக்கும் தகவல்களுக்கும் நன்றி.
useful n new recipe.
healthy recipe,luks very nice...
நன்றி குறிஞ்சி.
நன்றி பிரேமலதா.
பர்பி புதுசா நல்லாயிருக்கு..டிப்ஸ்களுக்கு நன்றி!!
புது ரெசிப்பியா இருக்குதுங்க! ஹெல்த்தியான ரெசிபி!!!
எனக்கு கேழ்வரகு ரொம்ப பிடிக்கும். அதன் பயன்களையும் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.
கேழ்வரகின் நன்மைகளும், செய்முறையும் விவரமாய் எழுதி ஓஹோன்னு... அசத்திட்டீங்க சகோ. பார்க்கவே அருமையா இருக்கு வாழ்த்துகள்!!
நன்றி மேனகா.
நன்றி தெய்வசுகந்தி.
நன்றி சித்ரா.
நன்றி சகோ.
Looks healthy and delicious....
நன்றி புஷ்பா.
A very new recipe to me and looks yumm..
நன்றி காயத்ரி.
மிக பயனுள்ள பதிவு புவனா..:))
மிக்க நன்றி மேடம்.
மரகதம் ஜொலிக்கிறது.
பயனுள்ள பதிவு .அருமையா இருக்கு.
பார்க்கும்போதே சாப்பிடத் தூண்டுகிறது.
கேழ்வரகு பூரி செய்து பின் அதைப்பொடித்து இனிப்பு செய்வது மிகவும் புதுமை! கேழ்வரகு உருண்டை பார்க்கவே ஆவலைத் தூண்டுகிறது! ஆனால் பூரி செய்து பொடிப்பதால் எண்ணெயாக இருக்காதா?
@ஜெரி ஈசானந்தன்,
மிக்க நன்றி.
@Kanchana Radhakrishnan,
மிக்க நன்றி.
@வித்யா,
மிக்க நன்றி.
@மனோ சாமிநாதன்,
மிக்க நன்றி மனோம்மா. எண்ணெய் நன்றாக வடிந்த பின்னர் பூரியை பொடித்தேன். அவ்வளவாக எண்ணெய் இல்லை.
very healthy recipe. super!
நன்றி வானதி.
சத்தான குறிப்பு.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க ... பகிர்வுக்கு நன்றி
கேழ்வரகு பர்ப்பி சூப்பர். மீண்டும் புதுமையான ரெசிபி.
நன்றி விக்கி.
சத்து இல்லாத உணவை உட்கொள்ளும் இந்த காலத்தில் சத்து உள்ள ஒரு உணவை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி...
வாழ்த்துக்கள்.
சத்தான உணவை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கௌதம்.
Post a Comment