அவல் : 1 கப்
துருவிய தேங்காய் : 1 கப்
பால் : 1 கப்
சர்க்கரை : 2 கப்
முந்திரிப்பருப்பு : 10
ஏலக்காய் : 4
கேசரி பவுடர் : தேவையான அளவு
நெய் : 100 கிராம்
செய்முறை:
ஒரு அடி கனமான பாத்திரத்தில் அடுப்பை இளந்தீயில் வைத்து அவலை லேசாக வறுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வறுத்த அவலை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவேண்டும். ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே பாத்திரத்தில் துருவிய தேங்காய், பொடித்த அவல், சர்க்கரை இவற்றைக் கலந்து, நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலந்து கிளறவும். இந்தக் கலவை நன்கு வெந்ததும் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். ஊற்றிய நெய் வெளியே வரும். அப்போது ஒரு ஸ்பூன் பாலில் தேவையான அளவு கேசரி பொடியைக் கலந்து ஊற்றவும். இவ்வாறு பாலில் கலந்து ஊற்றும்போது கேசரிப்பொடி எல்லா இடத்திலும் ஒரே விதத்தில் இனிப்பு முழுவதும் கலந்து விடும்.
இதன் மேல் ஏலக்காய் பொடி தூவி, வறுத்த முந்திரிப் பருப்பைக் கலந்தால் அவல் அல்வா தயார்.
அவல் எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் கிடைக்கக் கூடிய பொருள். விலை மலிவாகவும் கிடைக்கும். அவல் விரைவில் செரிக்கக் கூடிய உணவு. தற்காலத்தில் உடல் இளைக்க வேண்டும் என்று பலரும் சாப்பிடாமல் இருந்து உடலைக் கெடுத்துக் கொள்வதுண்டு. அவ்வாறு செய்யாமல் அவலில் செய்த உணவினை உண்ணும் போது வயிறு நிரம்பவும் உண்ணலாம், உடலுக்குத் தேவையான சத்தும் இதன் மூலம் கிடைக்கிறது. அதே நேரத்தில் உடல் எடையும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனேயே குறையும். இந்த அவலினால் செய்த உணவை சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை உண்ணலாம். இட்லியைப் போல உடலுக்கு எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத உணவு அவல்.
*******
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் அவர்கள்தம் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
42 comments:
ஒரு ப்ளேட் பார்சல் டு லண்டன்
அப்படியே காப்பி பண்ணி டெஸ்க்டாப்ல போட்டுக்குங்க :)
அவல் கேசரி சாப்ட்ருக்கேன்;-)
எனக்கு சாப்பிடத்தான் தெரியும். சர்வ் பண்ணக் கூட தெரியாது. படத்துல பார்த்தாலே நாக்கு ஊருது ...;-)
super taste.. let me try it today.
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழத்துக்கள்..
அப்படியே சாபிடலாம் போல இருக்குது . உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
கேசரி மாதிரி தான் இருக்கும். நன்றி ஆர்.வி.எஸ்.
ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. நன்றி மாதவன்.
நன்றி செந்தில்.
நன்றி குறிஞ்சி.
looks super & colourful..wish u a happy deepavali!!
நன்றி மேனகா.
Aval Halwa romba nalla irukku. Ungalukkum Deepavali Nalvazhthukkal..
நன்றி காயத்ரி.
இந்த தீபாவளிக்கு உங்களின் செய்முறை விளக்கத்தை அரங்கேற்றி அல்வா தயாருச்சுருவோம்ல . தீபாவளி வாழ்த்துக்கள்
செய்து பார்த்துட்டு சொல்லுங்க. நன்றி சங்கர்.
தீபாவளி வாழ்த்துக்கள்.
மாடம்பாக்கம் கோவில் பற்றி பதிவு நீங்கள் எழுதி உள்ளீர்களா அலது கீதா சாம்பசிவம் மாமி எழுதி இருக்கிறாரா.
எங்க அம்மா போக விரும்புகிறார்.
நன்றி ராம்ஜி. மாடம்பாக்கம் கோயில் பதிவு எழுதவில்லை.
அவல் அல்வா புதுசா இருக்குதுங்க! இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
நன்றி தெய்வசுகந்தி.
அவல் அல்வா புதுசு எனக்கு! செய்முறை குறிப்புக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
நன்றி ராமலக்ஷ்மி மேடம்.
Super!!!
HAPPY DEEPAVALI!
Looks yummy.Happy Deepavali.
தீபாவளி பலகாரம் சூப்பர் மேடம்... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
நன்றி சித்ரா.
நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.
நன்றி பிரபாகரன்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
நன்றி யோகேஷ்.
சகோ. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்
மிக்க நன்றி சகோ.
புவனா மேடம்....
அவல் அல்வா அசத்தலோ அசத்தல்....
காலையில் தான் அல்வா பற்றி நினைத்து கொண்டிருந்தேன்... இங்கே வந்து பார்த்தால், அட்டகாசமான அல்வா ரெடியா இருக்கு...
சரி... இத வச்சே, தீபாவளிய முடிச்சுட வேண்டியது தான்...
உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் மற்றும் தோழமைகள் அனைவருக்குமான என் தீபாவளி வாழ்த்து இதோ இங்கே....
நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post.html
மிக்க நன்றி கோபி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
looks yummy.thanks for sharing recipe.
wish you a happy diwali.
@Kurinji,
தங்களின் அன்புக்கு மிக்க நன்றி குறிஞ்சி.
@angelin,
மிக்க நன்றி ஏஞ்சலின்.
Aval halwa looks delicious.Ungallukku Diwali valzthukkal
ரொம்ப அருமையாக இருக்கு
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
@Pushpa,
மிக்க நன்றி. தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
@சிநேகிதி,
மிக்க நன்றி. தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
looking delicious.
நன்றி வானதி.
நாவில் எச்சில் சுழற்சி கொண்டுள்ளது..
இப்படி செய்வதோடு நீங்களே அனைவருக்கும் செய்து கொடுத்துவிட்டால் என்ன.???
மிக்க நன்றி இராமநாதன். அனைவருக்கும் செய்து கொடுத்துவிட்டால் போச்சு.
nalla suvai
polurdhayanithi
நன்றி போளூர் தயாநிதி.
Post a Comment