Wednesday, October 13, 2010


என்றும் இனியவை - B.S.சசிரேகா

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். ஆம்!! வந்தவர்கள் மட்டுமே வாழும் பூமி இது!! இந்த விஷயம் எந்தத் துறையில் சாத்தியப்படுகிறதோ இல்லையோ தமிழ் திரைத் துறையில் அதிகம் சாத்தியப்பட்ட விஷயம். தமிழ் மண்ணில் தமிழுக்கும், தமிழனுக்கும் கொஞ்சம் மதிப்பு குறைவு தான். தமிழை ஒரு பாட மொழியாக எடுத்து பயிற்றுவிக்கவே பெற்றோர் தயங்கும் காலமிது. தமிழகத்தில் மட்டும்தான் இந்த அநியாயம் நடக்கும். அப்படியிருக்க, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆகட்டும், திரைப்பட நடிகை ஆகட்டும், தமிழ் தெரிந்தவர்களாக இருந்தால் வாய்ப்பு சற்று குறைவுதான். வாய்ப்பு கிடைப்பதே கடினம் தான். இங்கு தமிழை கொச்சையாகப் பேசுபவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம்.


ஒரு காலத்தில் இசைத்துறையில் உச்சரிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிற்காலத்தில் அந்த வழக்கம் தேய்ந்து, திருக்கோயிலை, தெருக்கோயில் என்றும், பரவாயில்லை என்பதை பருவாயில்லை என்றும், பாடுபவர்களுக்கே வாய்ப்புக்கள் வந்து குவிந்தது. இசையுலகிலும் அந்தக் காலத்திலிருந்தே தமிழ் தெரிந்த, தமிழை நன்றாக உச்சரிக்கத் தெரிந்த பாடகர், பாடகியர் பெரிதாக சோபிக்கவில்லை. அப்படி, தமிழை நன்றாக தெளிவாக, நல்ல உச்சரிப்புடன் பாடக்கூடிய தமிழ் பாடகிகளில் ஒருவர்தான் B.S.சசிரேகா. அதனால்தான் குறைந்த காலமே, குறைந்த அளவிலான பாடல்களை மட்டுமே அவரால் பாட முடிந்துள்ளது. தற்போது திரை இசைப் பாடல்கள் எதுவும் பாடுவதாகத் தெரியவில்லை. இவரது குரலில் ஒரு கம்பீரமும், ஒரு வித சோகமும் இழையோடும். இவரது குரல் ஒரு அபூர்வமான குரல். இவரது இனிய குரலில் ஒலித்த சில பாடல்களை இங்கே தொகுத்துள்ளேன்.

இதோ இதோ என் நெஞ்சிலே (வட்டத்துக்குள் சதுரம்)


கேள்வியின் நாயகனே
(அபூர்வ ராகங்கள்)


கண்மணி நில்லு
(ஊமை விழிகள்)


மாமரத்து பூவெடுத்து
(ஊமை விழிகள்)


தென்றல் என்னை முத்தமிட்டது
(ஒரு ஓடை நதியாகிறது)


எம்புருஷந்தான்
(கோபுரங்கள் சாய்வதில்லை)


இளமனதினில்
(மஞ்சள் நிலா)


எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
(உறவைக் காத்த கிளி)


28 comments:

தமிழ் உதயம் said...

காயத்ரியில் இடம் பெற்ற "வாழ்வே மாயமா... பெரும் மழையா, கடும் புயலா" பாடலை விட்டு விட்டிர்கள்.

ராமலக்ஷ்மி said...

ஆம். என்றும் இனியவை இவை. தொகுப்புக்கு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ் உதயம்,
எவ்வளவு தேடியும் அந்த பாடலின் லிங்க் கிடைக்கவில்லை.

@ராமலக்ஷ்மி,
நன்றி மேடம்.

Asiya Omar said...

அருமையான பாடல்கள்,பகிர்வுக்கு நன்றி.

தமிழ் அமுதன் said...

தொகுப்பு அருமை..! நன்றி..!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஆசியா மேடம்.

நன்றி தமிழ் அமுதன்.

RVS said...

ஒரு சொல்லவொணா துயரம் இருக்கும் அவரது குரலில். நமக்கு என்னமோ ஒத்து வரதில்லை. ;-( ;-(

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆம், ஒரு விதமான சோகம் இழையோடும் குரல்.

அப்பாதுரை said...

தலைமுறைக்குத் தலைமுறை இது போல் நினைத்தாலும் (சொப்பன வாழ்வில் மகிழ்ந்து பாட்டை எத்தனை கிண்டல் செய்திருக்கிறேன்!) நீங்கள் சொல்வதில் ஒரு உண்மை இருப்பது போல் தோன்றுகிறது. தமிழில் பேசத் தெரிந்தவர்களுக்குப் போதுமான வாய்ப்புக் கிடைக்காதது வியப்பாக இருக்கிறது. வருத்தமாகவும் இருக்கிறது. ஒரு கூடையை வ்வருகோடே என்று பாடுவதைக் கேட்கும் போதெல்லாம் கறும்பலகையில் ஆணி இழுப்பதைக் கேட்பது போல்.. எங்கே எப்போது தொடங்கியது இந்தக் குதறல்?

அப்பாதுரை said...

இவரின் குரல் வளம் ரசிக்கக் கூடியது என்றாலும் ஐடெண்டிடி க்ரைசிஸில் சிக்கிக் கொண்ட குரலோ என்று தோன்றுகிறது. எல்.ஆர்.ஈஸ்வரிக்கு சரியான சக்சஸர் தோன்றவில்லையே என்று எண்பதுகளில் நினைத்த போதெல்லாம் சசிரேகா நினைவுக்கு வருவார். கிளாமர் பாடல்களை பாட முயற்சிக்காததால் இவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நீங்கள் கூறுவது போல் உச்சரிப்புக் குதறல் சில காலமாகவே உள்ளது தான். இரண்டொரு கிளாமர் பாடல்களையும் கூட இவர் பாடியுள்ளார். ஓரளவு தனித்துவமான குரலாக இருந்தாலும் அதிக வாய்புகள் அமையாதது ஆச்சரியமளிக்கிறது.

Anonymous said...

Songs in Senthoora poove, very nice.
-Ansar

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆமாம், அருமையான பாடல்கள். நினைவூட்டியமைக்கு நன்றி அன்சார்.

Vijiskitchencreations said...

எல்லா பாடலகளும் அருமை புவனா அவர்கள்.
ஆஸியா தளம் வழி வந்தேன்.

www.vijisvegkitchen.blogspot.com

Menaga Sathia said...

மிகவும் அருமையான தொகுப்பு..திறமையிருப்பவர்களுக்கு என்றுமை வாய்ப்பு குறைவுதான்..

//மாமரத்து பூவெடுத்து (ஊமை விழிகள்)// இவ்வளவு நாள் இப்பாடலை ஜானகி அவர்கள் பாடியது என்று நினைத்திருந்தேன்..இப்பாடல் ரொம்ப பிடிக்கும்...

Kanchana Radhakrishnan said...

தொகுப்பு அருமை.பகிர்வுக்கு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி விஜி அவர்களே.

எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அது. நன்றி மேனகா.

நன்றி காஞ்சனா.

goma said...

அருமையான தேர்வு.
பாடல்கள் அனைத்துமே மரகதமாய் ஜொலிப்பவை

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி goma.

vanathy said...

super singer & songs.

Chitra said...

சில பாடல்களை முதல் முறையாக கேட்கிறேன்.... அருமையான குரல். நல்லா செலக்ட் பண்ணி, பாடல்களை தொகுத்து தந்ததற்கு நன்றிங்க.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி வானதி.

நன்றி சித்ரா.

மனோ சாமிநாதன் said...

பி.எஸ்.சசிரேகா குரல் எழுபதுகளில் இளையராஜா இசையில் எத்தனையோ பேரை மயக்கியுள்ளது. அவர் புகழேணியில் ஏறக்காரனமாயிருந்த பாடலை விட்டு விட்டீர்களே!
‘லட்சுமி’ என்ற படத்தில் வரும் ‘மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே!’ என்ற பாடல்தான் அது!

புவனேஸ்வரி ராமநாதன் said...

அந்த பாடலின் லிங்க் கிடைக்கவில்லை மேடம். தகவலுக்கு மிக்க நன்றி.

ஜெய்லானி said...

இதில இருக்கும் எல்லா பாட்டுமே எனக்கு பிடிச்ச பாட்டுக்கள்தான் :-))

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெய்லானி.

Devanathan said...

Bagavathipuram Railway Gate: THENRAL KATRUM....
Nice Song
Devanathan

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Devanathan....

இந்தப் பாடலை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.
தங்களது வருகைக்கும் நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails