****************
பூசணி அல்வா
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் : ஒரு கீற்று
நெய் : ஒரு குழி கரண்டி
சர்க்கரை : 100 கிராம்
கேசரி பொடி : ஒரு சிட்டிகை
ரோஸ் மில்க் எசன்ஸ் : 5 சொட்டு
முந்திரி : 5
செய்முறை:
பூசணிக்காயை தோல் சீவி, காய்கறி சீவும் கட்டையில் நன்றாகத் துருவி வைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் துருவிய பூசணிக்காயைப் போட்டு, நன்கு வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
பூசணி நெய்யுடன் சேர்ந்து நன்றாக வெந்ததும், தேவையான அளவு சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். சேர்த்த நெய் வெளியேறும்வரை கிளறவும். இதன் மேல் கேசரி பொடி கலந்து, விருப்பமுள்ளவர்கள், ரோஸ் மில்க் எசன்ஸை கலக்கவும். (ரோஸ் மில்க் எசன்ஸ் கலப்பதால் அல்வாவின் வண்ணமும் பார்க்க அழகாக இருக்கும். அல்வாவும் நல்ல வாசனையாக இருக்கும்).
இதன் மேல் நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பைத் தூவ மணமான பூசணி அல்வா தயார்.
பூசணிக்காய் நீர்ச்சத்து நிறைந்த காய். இதனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வதால் வெயிலினால் நம் உடம்பில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைவானது சீராகும். குழந்தைகளுக்கு இவ்வாறு இனிப்பாக செய்து தர, அவர்கள் சத்தான உணவை விரும்பி உண்ணுவர்.
21 comments:
super halwa.is it yellow pumpkin halwa?
நன்றி ஆசியா மேடம். இது வெள்ளை பூசணி அல்வா.
sweetta இருக்கு
என்னோட கதையைப்போல படிச்சிட்டு கமெண்டு போடுங்க.. இன்ட்லில ஒட்டு போடுங்க..
நன்றி
Yummy halwa!
colourful halwa looks super!!
ஓட்டு போட்டாச்சு மாதவன். நன்றி.
நன்றி வானதி.
நன்றி மேனகா.
//ஓட்டு போட்டாச்சு மாதவன்.//
நன்றி மேடம்.. நா கூட உங்களோட எல்லா போஸ்டையும் பாத்துட்டு, இன்ட்லில ஒட்டு போட்டுட்டேன்..
மிக்க நன்றி மாதவன்.
பார்க்கவே அருமையா இருக்கிறது. குறிப்புக்கு நன்றி.
//சாமானியனும் சரித்திரம் படைக்கலாம் என்பதை. தன் வாழ்க்கையை சாதனைகளால் நிரப்பி, நிரூபித்துக் கொண்டிருக்கும் மரியாதைக்குரிய திரு. A.P.J. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று.//
என் வாழ்த்துக்களும்.
தடியங்காய் அல்வா என்பார்களே..... அது மாதிரியா? பார்க்கவே நாவில் நீர் ஊறுதே....
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
நன்றி ராமலக்ஷ்மி மேடம்.
அதே தான் சித்ரா. நன்றி.
நன்றி ராம்ஜி.
WOW LOVELY
நன்றி மோகன்.
பூசனிக்காய் ஹல்வா யம்மியாக இருக்கு.
அப்துல் கலாம் பிறந்த நாளை நினைவூற்றி இருக்கீங்க. நன்றி
நன்றி ஜலீலா மேடம்.
பூசனிக்காய் ஹல்வா பார்க்கவே அருமையா இருக்கிறது அத்தோடு
திரு.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை
நினைவூற்றியத்தும் அருமை..
http://niroodai.blogspot.com/
மிக்க நன்றி மலிக்கா.
உங்கள் குறிப்பின் உதவிகொண்டு அல்வா செய்தேன் இன்று.. நன்றாக இருந்தது... நன்றி...
பதிவை ரசித்தமைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
Post a Comment