உருளைக்கிழங்கு : 100 கிராம்
ரோஸ் பீன்ஸ் பருப்பு : 100 கிராம்
தக்காளி : 100 கிராம்
கேரட் : 100 கிராம்
பெரிய வெங்காயம் : 1
இஞ்சி : சிறிய துண்டு
பூண்டு : 3 பல்
பச்சை மிளகாய் : 2
சிவப்பு மிளகாய் : 1
சீரகம் : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் : 1/2 தேக்கரண்டி
மிளகு,சீரகப் போடி : 1 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் : 1 கரண்டி
நெய் : 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் : 1 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
செய்முறை:
ரோஸ் பீன்ஸ் பருப்பினை நன்றாக அலசி தனியே வைக்கவும். உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம், கேரட் இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய், நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய தக்காளி, கேரட், உருளைக் கிழங்கு, ரோஸ் பீன்ஸ் பருப்பு இவற்றை போட்டு நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பைப் போட்டு வதக்கினால், காய்கறிகள் சீக்கிரமே வெந்துவிடும். இதன் மேல் அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள், மிளகு சீரகத்தூள், மிளகாய்த்தூள் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும். இந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் அடுப்பை இளந்தீயில் வைத்து கடாயை மூடி வைக்கவும்.
பத்து நிமிடங்கள் கழித்து காய்கள் நன்றாக வெந்து மசாலா கலந்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி கலந்து அடுப்பை நிறுத்தி விடவும். ரோஸ் பீன்ஸ் மசாலா தயார். இந்த மசாலாவை வெஜிடபிள் ரைஸ், பூரி, சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
23 comments:
ரோஸ் பீன்ஸ்ஸா?
அப்படின்னா என்னங்க?
அது பீன்ஸ்ல ஒரு ரகமுங்க.
நல்லாயிருக்கு புவனா.
நன்றி ஆசியா மேடம்.
அருமையாக இருக்கு..
நன்றி மேனகா.
அருமையாக இருக்கு...ரோஸ் பீன்ஸுக்கு english என்ன சொல்லுவாங்க..இதனை பார்த்தா மாதிரி தான் இருக்கு...
நன்றி கீதா. Rose Beans தான் அப்படி சொல்லியிருக்கேன்.
இது kidney beans ன்னு நினைக்கிறேன்.ராஜ்மா ன்னும் சொல்லுவாங்க.
http://www.peanutcn.com/red%20kidney%20beans.jpg
ஆமாம் சுந்தரா. நன்றி.
அருமையாக இருக்கிறது ரோஸ் பீன்ஸ் கறி!!
நன்றி மனோ மேடம்.
super recipe!
நன்றி வானதி.
நல்லா இருக்கு் புவனா..:))
நன்றி மேடம்.
நல்லாயிருக்கு.
நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.
ரொம்ப நலல் இருக்கு ரோஸ் பீன்ஸ் பருப்புன்ன ராஜ்மாவா>
ஆமாம் ஜலீலா மேடம். நன்றி.
fantastic!
Rose beans looks superb. My favorite too. Sometimes they call it as butter beans in my native place:).
நன்றி விக்கி.
Post a Comment