Saturday, August 28, 2010


முருதேஷ்வர் கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் தெய்வ தரிசனம் முருதேஷ்வர் திருக்கோயில், கர்நாடகம்.


திருக்கோயில் இருப்பிடம்:
நமது
அண்டை மாநிலமான கர்நாடகாவில் நிறைய புகழ்பெற்ற திருத்தலங்கள் உள்ளன. கொல்லூர், உடுப்பி, தர்மஸ்தாலா போன்ற நூற்றுக் கணக்கான தெய்வீகத் திருத்தலங்கள் உள்ளன. அவ்வாறான திருத்தலங்களுள் ஒன்றான கர்நாடக மாநிலத்தில், பட்கல் மாவட்டத்தில் உள்ள முருதேஷ்வர் ஆலயத்தைப் பற்றிப் பார்ப்போம்.


இந்தக் கோயிலுக்கு நாங்கள் பெங்களுருவில் இருந்து சென்று வந்தோம். பெங்களுருவில் இருந்து ஷரவனபெலஹோலா, ஹசன், மங்களூர், உடுப்பி, கொல்லூர், ஆகிய திருத்தலங்கள் கொண்ட ஊர்கள் வழியாகச் சென்றோம். முருதேஷ்வர் ஆலயம் பெங்களூருவில் இருந்து 455 km தொலைவிலும், மங்களூரில் இருந்து 165 km தொலைவிலும் உள்ளது.

தல வரலாறு:
முருதேஷ்வர் ஆலயம் மூன்று புறமும் அரபிக் கடலால் சூழப் பட்டும், கண்டுககிரி என்ற மலையின் மீதும் அமைந்துள்ளது. முருதேஷ்வர் என்பது சிவபெருமானைக் குறிக்கும் பெயராகும். த்ரேதா யுகத்தில், இராமாயண காலத்தில், இராவணன், ஆத்ம லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச்செல்ல கடும் தவம் புரிந்தான். அந்த ஆத்ம லிங்கம் தனக்குக் கிடைக்காத காரணத்தினால் கோபம் கொண்ட இராவணன் அதனை அழிக்க முயன்றான். அப்போது ஆத்ம லிங்கம் பல பாகங்களாக உடைந்தது.


அவ்வாறு
உடைந்த பாகங்களில் ஒரு பகுதிதான் இங்குள்ள முருதேஷ்வர் என்று அழைக்கப்படும் இக்கோயில் கற்ப கிரஹ லிங்கம். இந்த இராவண வரலாறு, பூலோக கைலாசம் என்ற பெயரில் இந்த கோயிலின் அருகிலேயே, இந்தப் புராணத்தை அப்படியே சிலை வடிவில், நம் கண் முன்னே நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூலோக கைலாச குகை பற்றி நாம் மற்றொரு பதிவில் காண்போம்.


இங்குள்ள
சிவபெருமான் சிலை உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலையாக கருதப்படுகிறது. உலகிலேயே முதலாவது மிகப் பெரிய சிவன் சிலை நேபாளத்தில் உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த சிவன் சிலையை கட்டி முடிக்க 2 வருடங்கள் ஆகி உள்ளது. இச்சிலையின் உயரம் 123 அடி (37 மீ). இச்சிவன் சிலை சூரிய ஒளி நேரடியாகப் படும் படி கட்டப்பட்டுள்ளதால் நாம் காணும்போது ஜொலிக்கிறது.


சிவன்
சிலைக்கு முன்னால் இராவணன்,
சிறுவன் வடிவில் இருக்கும் பிள்ளையாரிடமிருந்து ஆத்மலிங்கத்தைப் பெற்றுக் கொள்வது போல ஒரு சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலின் வாயிலில் நிஜ யானை நிற்கிறதோ என்று நினைக்கும் வண்ணம், அளவிலும், அமைப்பிலும், நிஜ யானையின் வடிவத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.


முருதேஷ்வர் ராஜ கோபுரம்:
இக்கோயில்
ராஜ கோபுரம் கண்டுககிரி மலையின் மேல் அரபிக்கடல் சூழ அமைந்துள்ளது. இக்கோயில் கோபுரம் 20 அடுக்குகள் கொண்டு அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் உயரம் 249 அடி. இக்கோபுரம் தான் உலகிலேயே உயரமான கோயில் கோபுரமாகக் கருதப்படுகிறது. கோயில் கற்ப கிரஹத்தில் உள்ள ஆத்மலிங்கம், தரை மட்டத்தில் இருந்து 2 அடி கீழே உள்ளது.


கலைக்கு என்றுமே ஊர், பேர், ஜாதி, இன, மொழி, மத பேதமில்லை என்பார்கள். அதுபோல இக்கோயில் கோபுரத்தை நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த, காரைக்குடி ஸ்ரீ எஸ்.கே.ஆச்சாரி என்பவரின் தலைமையிலேயே கட்டியுள்ளார்கள்.


ஸ்ரீ
எஸ்.கே.ஆச்சாரி, (தலைமைப் பொறியாளர், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், கன்னியாகுமரி
) மற்றும் அவரது மைந்தர்கள் திரு கே.சுவாமிநாத ஸ்தபதி, திரு கே.தட்சிணாமூர்த்தி ஸ்தபதி, செக்காலை, காரைக்குடி என்று அங்குள்ள கோயில் கல்வெட்டில் இவர்களது பெயர் பொறிக்கப் பட்டு, அவற்றை காணும்போது, நம் தமிழகத்திலிருந்து சென்று, உலகிலேயே உயர்ந்த கோயில் கோபுரத்தைக் கட்டி உள்ளார்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. இக்கோயில் கோபுரத்தை 12-04-2008 அன்று திறந்து வைத்துள்ளனர்.

சுற்றுலா:
முருதேஷ்வர் மிக அழகிய சுற்றுலாத் தலமாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரை அதற்கு ஒரு உதாரணம். இங்கிருந்து 16 km தொலைவில் பட்கல் என்ற பழமையான துறைமுக நகரம் உள்ளது. விஜயநகர பேரரசு காலத்தில் இந்த ஊர் முக்கியமான துறைமுக நகரமாக விளங்கியது. இங்கே 42 மசூதிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.


இது
போன்று கோயில்களுக்கு செல்லும்போது நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றியும், அங்கே வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது பண்பாடு, கலாச்சாரம் போன்ற விஷயங்களைப் பற்றியும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

9 comments:

R. Gopi said...

2007 , செப்டம்பர் மாதம் நான் சென்றிருந்தேன். படங்களைத் திரும்பப் பார்த்ததில் மகிழ்ச்சி.

Menaga Sathia said...

thxs for sharing!!

a said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க........

ராம்ஜி_யாஹூ said...

மிகவும் அருமை.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்

அப்பாதுரை said...

கேள்விப்பட்டதே இல்லை; ரொம்ப அழகா இருக்குங்க இடம். எழுதியதற்கு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கோபி.

நன்றி மேனகா.

நன்றி யோகேஷ்.

நன்றி ராம்ஜி.

நன்றி அப்பாதுரை.

Kovai,Shiva said...

Wow,it's a nice place.On my way to goa from Coimbatore ,I stayed there in the hotel from the room I stayed,just lying in the bed,i could view the arabian sea and the boats.and the giagantis shiva statue on the other isde of the balcony.Amazing.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சிவா.

R.Gopi said...

புவனா மேடம்...

நான் எப்போதும் சொல்வது போல், உங்கள் ஆன்மீக சம்பந்தப்பட்ட பதிவுகள் மிக மிக நன்றாக உள்ளன...

உங்களின் இந்த பதிவை படித்ததும், நான் மருந்தீஸ்வரரை நேரில் தரிசித்த உணர்வு ஏற்பட்டது... அந்த உணர்வை ஏற்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி....

மிக விரிவான, அழகான, எளிய விளக்கமும், அட்டகாசமான புகைப்படங்களும் இந்த பதிவை மேலும் மெருகூட்டியது என்றால் அது மிகையல்ல..

முடிவில் முத்தாய்ப்பாக சொல்லிய இந்த விஷயமும் என்னை மிகவும் கவர்ந்தது....

//இது போன்று கோயில்களுக்கு செல்லும்போது நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றியும், அங்கே வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது பண்பாடு, கலாச்சாரம் போன்ற விஷயங்களைப் பற்றியும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.//

Post a Comment

Related Posts with Thumbnails