பரங்கிப்பழம் : 1/4 கிலோ
புளி : சிறிய எலும்பிச்சை அளவு
பச்சை மிளகாய் : 3
பெருங்காயப்பொடி : 2 சிட்டிகை
சாம்பார்பொடி : 1/2 ஸ்பூன்
தேங்காய் : 1/4 மூடி
சீரகம் : 1 ஸ்பூன்
அரிசி : 1 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
கொத்தமல்லித்தழை : சிறிதளவு
தாளிக்க:
கடுகு : 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு : 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை : சிறிதளவு
செய்முறை :
முதலில் பரங்கிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியினை தண்ணீரில் ஊற வைத்து, புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும், பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளி கரைசலில் பெருங்காயப்பொடி, சாம்பார்பொடி, பச்சை மிளகாய், உப்புபோட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதில் நறுக்கிய பரங்கிப் பழத்தைப் போட்டு வேக வைக்கவும்.
தேங்காய் , சீரகம், அரிசியினை மிக்ஸியில் விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பரங்கிப் பழம் நன்கு வெந்ததும் இந்த மசாலா விழுதினைப் போட்டு கலந்து நன்றாகக் கொதிக்கவிடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை தாளித்து, பச்சடியில் கலக்கவும். இந்த பரங்கிப் பழப் பச்சடியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
நாட்டுக் காய்கள் எப்போதுமே நமக்குக் கிடைக்கக் கூடியவை. நம் உடல் நலத்திற்கு நன்மை பயக்கக் கூடியவை. பரங்கிப் பழம் நீர் சத்து நிறைந்த காய் என்பதால் நாம் அடிக்கடி நம் சாப்பாட்டில் இதனை சேர்த்துக் கொள்ளலாம்.
15 comments:
அருமையாக இருக்கு.
பார்ப்பதற்கு அழகா இருக்கிறது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது
nice pachadi!!
சூப்பராக இருக்கின்றது...அருமை..
நன்றி ஆசியா மேடம்.
நன்றி சௌந்தர்.
நன்றி மேனகா.
நன்றி கீதா.
போட்டோல இருக்குறது நீங்க செய்ததா????
ஆமாம் யோகேஷ். என்ன விஷயம்?
Thanks for sharing
மாயவரம் வரும்போது ஒரு சின்ன குன்டான்ல குடுங்கன்னு கேக்களாமுன்னு தான் :))..........
நன்றி ராம்ஜி.
@வழிப்போக்கன் - யோகேஷ்,
அவசியம் செய்துகுடுத்துட்டா போச்சு.
ஓகே.. அப்ப ஊருக்கு வரும்போது சொல்றேன் :))
(வீட்ட பூட்டிட்டு கிளம்பி போயிடாதீங்க... )
பார்க்கவே சூப்பரா இருக்குதுங்க....
நன்றி சித்ரா.
பரங்கிப்பழ பச்சடி...
ரொம்ப தித்திக்காதோ??
எதனுடன் சேர்த்து சாப்பிடலாம்?
பரங்கியில் நான் சாப்பிட்ட வகைகள் :
பரங்கி வத்தக்குழம்பு
பரங்கி கூட்டு.... மட்டுமே...
இது புது வகையாக இருக்கிறது...
தித்திப்பாக இருக்காது. சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம், கூட்டு போலவும் சாப்பிடலாம்.
Post a Comment