Saturday, August 14, 2010


மந்திரங்களின் மகிமைகள் - பகுதி 5

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி ஓம்!
ஓம் ஓம் ஓம்!

இது ஆடி மாதம். ஆடி மாதத்திற்கு என்று நிறைய சிறப்புக்கள் உள்ளன. ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதம். ஆடி விரதம் அம்மனுக்கு உகந்த விரதம். திருமணமாகாத இளம் பெண்கள் ஆடி விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் விரைவில் சிறந்த திருமண வாழ்க்கை அமையும். ஆடி மாதம் நடைபெறும் விழா நாட்களுக்கும் பஞ்சமில்லை. அவற்றில் சில, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு போன்றவை.

ஆடி மாதம் வெய்யில் அதிகமாக இருக்கும். அம்மன் கோயில்களில் வழங்கப்படும் ஆடிக் கூழ் நமது உடலில் உள்ள சூட்டைத் தணித்து குளிர்ச்சியை
த் தரும். மழை தெய்வங்களான மாரியம்மன், தேவி கருமாரியம்மனை, நாட்டில் நல்ல மழை வேண்டும் தாயே என வேண்டி பெண்கள் வழிபடுவர். தங்களது தீராத பிரச்சினைகள் தீர அம்மனை வேண்டிக் கொண்டு இந்த ஆடி மாதத்தில் தீ மிதி திருவிழாவில் கலந்து கொண்டு நேர்த்திக் கடனையும் நிறைவேற்றுவர். இப்படி பல சிறப்புகள் கொண்ட ஆடி மாதம் மட்டுமின்றி, எல்லா மாதங்களிலும் அம்மனைக் கும்பிட்டு அவளது ஆசிகளைப் பெறுவோம்.


ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஸ்தோத்திரம்:
கற்பூர நாயகியே கனக வல்லீ
காளி மகமாயி கருமாரி அம்மா
பொற்கோயில் கொண்ட சிவகாமி அம்மா
பூவிருந்தவல்லி தெய்வயானை அம்மா
விற்கோல வேத வல்லி விசாலாட்சி
விழிக்கோல் மாமதுரை மீனாட்சி
சொற்கோவில் நான் அமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!!

(கற்பூர)


புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேச்வரீ
பரம் எரித்தோன் புறம் இருக்கும் பரமேச்வரீ
நவ நவமாய் வடிவாகும் மாகேச்வரீ
நம்பினவர் கைவிளக்கே ஸர்வேச்வரி
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீச்வரீ
கார் இருளின் தீச்சுடரே ஜோதீச்வரி
உவமானப் பரம்பொருளே ஜெகதீச்வரி
உன்னடிமை சிறியேனை நீ ஆதரி!!

(கற்பூர)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன் தாயே எந்தன்
அன்னையவள் நீ இருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா
கண்ணீரைத் துடைத்துவிட ஓடிவா அம்மா
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா
சின்னவளின் குரல் கேட்டு உன் முகம் திருப்பு
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு!!

(கற்பூர)


கண் இரண்டும்
உன் உருவே காணவேண்டும்
கால் இரண்டும் உன் அடியே நாடவேண்டும்
பண் அமைக்கும் நா உனையே பாடவேண்டும்
பக்தியோடு கைஉனையே கூடவேண்டும்
எண்ணம் எல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையது ஆகவேண்டும்
மண்அளக்கும் சமயபுரி மாரியம்மா
மகனுடைய குறைகளையும் தீரும் அம்மா!!

(கற்பூர)


நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்
கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும்
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்
சுற்றம் எல்லாம் நீடூடி வாழ வேண்டும்
ஜோதியிலே நீ இருந்து ஆள வேண்டும்
மற்றதெல்லாம் நான் உனக்குச் சொல்லலாமா
மடி மீது பிள்ளை என்னைத் தள்ளலாமா?

(கற்பூர)

அன்னைக்கு உபகாரம் செய்வதுண்டோ?
அருள்செய்ய இந்நேரம் ஆவதுண்டோ?
கண்ணுக்கு இமை அன்றிக் காவல் உண்டோ?
கன்றுக்குப் பசுவன்றிச் சொந்தம் உண்டோ?
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ?
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ?
எண்ணைக்கும் விளக்குக்கும் பேதமுண்டோ?
என்றைக்கும்நான் உன்றன் பிள்ளையன்றோ?

(கற்பூர)

அன்புக்கே நான் அடிமை ஆக வேண்டும்
அறிவுக்கே என்காது கேட்கவேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்
பண்புக்கே உயிர்வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நான் என்றும் பணிய வேண்டும்
என்பக்கம் இவை எல்லாம் இருக்க வேண்டும்
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்!!

(கற்பூர)

கும்பிடவோ கை இரண்டும் போதவில்லை
கூப்பிடவோ நா ஒன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்யதனில் சக்தி இல்லை
நடத்திடவோ கால் இரண்டில் ஆகவில்லை
செம்பவள வாய் அழகி உன் எழிலோ
சின்னஇரு கண்களுள் அடங்கவில்லை
அம்பளவு விழியாலே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவும் இல்லை!!

(கற்பூர)

காற்றாகிக் கனலாகிக் கடலாகினாய்
கருவாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகிப் பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னைப்
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை!!

(கற்பூர)


தாயே கருமாரி அம்மா! நீயே துணை!

5 comments:

Unknown said...

ஓம் ஓம் ஓம்!

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

see this if you can- http://www.youtube.com/watch?v=1RHY7a5yGiU

Vikis Kitchen said...

Very nice article dear.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி விக்கி.

R.Gopi said...

புவனா....

ரொம்ப நாள் கழிச்சு அம்மன் பத்தின ஒரு பதிவு படித்தேன்.... உங்களுக்கு நன்றி...

கற்பூர நாயகியே கனகவல்லி.... இந்த ஸ்தோத்திரத்தை என் சகோதரிகள் படிக்க நான் கவனித்தது நினைவுக்கு வந்தது...

பகிர்வுக்கு மிக்க நன்றி புவனா....

Post a Comment

Related Posts with Thumbnails