கணபதி என்னும் சொல்லில் 'க' என்னும் எழுத்து ஞானத்தை குறிக்கிறது. 'ண' என்னும் எழுத்து ஜீவன்களின் மோட்சத்தை குறிக்கிறது. 'பதி' என்பது தலைவன் எனப் பொருள் படுகிறது. எனவே ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் தலைவனாய் பரம்பிரம்ம சொரூபமாய் இருப்பது கணபதிக்கடவுள்.
தோப்புக்கரணம்:
கரணம் என்றால் மனம், புத்தி, சித்தம், அஹங்காரம். இவைகளைத் தோற்பது தோற்புக்கரணம் எனலாம். விநாயகர் முன் இவைகளையெல்லாம் இழந்து தூய்மை அடைய வேண்டும் என்றும், நாம் நமது தவறை உணர்ந்து வந்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என வேண்டுவதே தோப்புக்கரணம்.
(1) ஸ்ரீ விநாயகர் துதி:
ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்ப்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்நோப சாந்தயே
மேற்கண்ட சுலோகம் சொல்லும் பொழுது ஐந்து முறை மிக மெதுவாக தலையில் காதுக்கு முன்னால் குட்டிக் கொள்ளவேண்டும். இதனால் தலையின் உச்சியில் இருக்கும் அமிர்தம் ஞானசக்தி ஒன்றுசேர விழித்துக்கொண்டு நமது உடலில் உள்ள எல்லா நாடி நரம்புகளையும் வந்து அடைவதாக சொல்கிறார்கள்.
(2) மஹாகணபதி மூலமந்திரம்:
ஓம் ஸ்ரீம் - ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே
வரவரத ஸர்வ ஜனம் மே
வச மானய ஸ்வாஹா
(3) சுப காரிய சுலோகம்:
எந்த ஒரு காரியம் அல்லது செயல் துவங்கும் முன் இந்த சுலோகம் சொன்னால் முற்றிலும் சுலபமாக முடியும்.
ஸமுகச் சைக தந்தச்ச கபிலோ கஜகர்ணக
லம்போதரச்ச விகட விக்ந ராஜோ விநாயக
தூமகேது
கணாத்யக்ஷ பாலச்சந்ரோ கஜாநந
வக்ர துண்ட
சூர்ப்பகர்ண ஹேரம்ப
ஸ்கந்த பூர்வஜ
(4)
வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் நமக்கு
(5)
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு
சங்கத்தமிழ் மூன்று தா
--ஔவையார்
(6)
விநாயகனே வெவ்வினையை பேரருக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனும் ஆம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து
--கபிலதேவர்
(7) பிள்ளையார் போற்றி:
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
பூமனும் பொருள் தொறும் பொலிவாய் போற்றி
அகரம் முதலென ஆனாய் போற்றி
அகர உகர ஆதி போற்றி
(8)
மூஷிக வாஹன மோதக ஹஸ்த
ஸாமர கர்ண விலம்பித ஸூத்ர
வாமந ரூப மகேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே
(9)
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை
(10)
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
--திருமந்திரம்
(11)
அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் -- நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்கும்
கணபதியைக் கைதொழுக் கால்
--விவேக சிந்தாமணி
(12)
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
(13) ஸ்ரீ விக்னேஷ்வர காயத்ரீ:
ஒம்தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி பிரசோதயாத்
5 comments:
thxs a lot!!
நன்றி மேனகா.
பதிவுகளை சேமித்து வையுங்கள், பின்னாளில் புத்தகமாக வெளியிடலாம்.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
வாமன ரூப மகேஷ்வர புத்திர
விக்ன விநாயக பாத நமஸ்தே
நன்றி ராம்ஜி.
//தோப்புக்கரணம்:
கரணம் என்றால் மனம், புத்தி, சித்தம், அஹங்காரம். இவைகளைத் தோற்பது தோற்புக்கரணம் எனலாம்//
ஆரம்பமே அசத்தல் புவனா.... நெஜமாவே இந்த விளக்கம் இப்போ தான் எனக்கு தெரியும்....
//ஸமுகச் சைக தந்தச்ச கபிலோ கஜகர்ணக
லம்போதரச்ச விகட விக்ந ராஜோ விநாயக
தூமகேது
கணாத்யக்ஷ பாலச்சந்ரோ கஜாநந
வக்ர துண்ட
சூர்ப்பகர்ண ஹேரம்ப
ஸ்கந்த பூர்வஜ//
இந்த மந்திரம் நான் தினமும் குளித்து முடித்தவுடன் முதலில் சொல்லும் மந்திரம்...
இதை தொடர்ந்து முருகர், சிவன் என்று போகும்...
Post a Comment