Wednesday, October 27, 2010


குணுக்கு

தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு : 50 கிராம்
உளுத்தம் பருப்பு : 50 கிராம்
துவரம் பருப்பு : 50 கிராம்
பயத்தம் பருப்பு : 50 கிராம்
தேங்காய் துருவல் : 1 பிடி
பச்சை மிளகாய் : 4
பெரிய வெங்காயம் : 2
பெருங்காயப் பொடி : 1 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
நல்லெண்ணெய் : 1 தேக்கரண்டி
பொரிக்க எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பருப்புக்களையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயை பூப்போல துருவி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை அரியாமல் மிக்ஸியில் போட்டு ஒரு நொடி, ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஊறிய பருப்புகளில், ஒரு பிடி அளவு தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதியுள்ள பருப்பினை மிக்ஸியில் கொரகொரவென்று அரைத்து, இதனுடன் எடுத்து வைத்துள்ள முழு பருப்புகள், அரைத்த பச்சை மிளகாய், துருவிய தேங்காய், நறுக்கிய வெங்காயம், பெருங்காயப்பொடி, தேவையான அளவு உப்பு, இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலக்கவும். இந்த கலவையில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிப் பிசறவும். இவ்வாறு செய்வதால் செய்யும் பலகாரம் எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் வைத்து இந்த கலவையை உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்தால் நிரம்ப சுவையான குணுக்கு தயார்.


தமிழர்களின் அன்றாட உணவில் அரிசியைப் போல், பருப்பும் சேர்த்து சமைப்பது வழக்கம். தினமும் சாப்பாட்டில் பருப்பு சேர்த்து சமைப்பதும் நல்லதல்ல என ஒரு மருத்துவர் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. பருப்பை சாம்பாரில் மட்டும் சேர்த்து சமைக்காமல், இதுபோல செய்து சாப்பிடும்போது ஒரு பருப்பினுடைய நலன் மட்டுமல்லாது எல்லா பருப்புகளுடைய நலன்களும் ஒன்றாகக் கிடைக்கிறது. பருப்புகளில் ப்ரோட்டின் சத்து மட்டுமல்லாது, நார் சத்துக்களும் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் எலும்புகள் மிகவும் வலுவிழந்து விடுகின்றன. இத்தகைய சமயங்களில் சுண்டல் போன்ற உணவுகளை மட்டுமின்றி இது போல எல்லா பருப்புகைளை சேர்த்து செய்யக் கூடிய உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைகின்றன. வளரும் குழந்தைகளுக்கும் நல்ல, சீரான எலும்பு வளர்ச்சி ஏற்படுகிறது. நாம் எல்லோரும் பயப்படும் கொழுப்புச் சத்தும் நமக்குத் தேவைப்படுகிறது. நல்ல கொழுப்பு இத்தகைய உணவு வகைகளை உண்ணும் போது சரியான அளவில் நமக்குக் கிடைக்கிறது.

47 comments:

Asiya Omar said...

ஆகா குணுக்கு பேரு புதுசாக இருக்கு.நல்ல ரெசிப்பி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஆசியா அக்கா.

Menaga Sathia said...

ரெசிபி+டிப்ஸ் சூப்பர்ர்ர்!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

Chitra said...

புதிய பதார்த்தம் பற்றி தெரிந்து கொண்டேன். செய்முறைக்கும் நன்றி.

vanathy said...

super recipe!

பொன் மாலை பொழுது said...

இது அனேகமாக நம்ம ஊர் "ஒரப்படை " மாதிரி இருக்கும் அல்லவா?
ஆனாலும் சற்று வேறுபாடும் இருக்கலாம். சுவையான பதிவு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சித்ரா.

நன்றி வானதி.

@கக்கு - மாணிக்கம்,
ரெண்டுத்துக்கும் நிறைய வேறுபடும். ஒரப்படைல அரிசி சேர்ப்போம். நன்றி மாணிக்கம்.

கோமதி அரசு said...

நல்லெண்ணை ஊற்றி பிசிறினால் எண்ணெய் குடிக்காது என்பது புது செய்தியாய் இருக்கு. இனி நானும் அப்படி செய்கிறேன்,நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி கோமதிம்மா. செய்து பாத்துட்டு சொல்லுங்க.

தேவன் மாயம் said...

ப லே ! ப லே ! ந ல் லா வெ ட் டு ங் க !!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி டாக்டர்.

நிலாமதி said...

உங்கள் பதிவுக்கு நன்றி செய்து பார்க்கிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி நிலாமதி. செய்து பாத்துட்டு சொல்லுங்க.

Kurinji said...

சூப்பர் ரெசிபி!

Madhavan Srinivasagopalan said...

எங்க அம்மா போடுற (கார அடை மாவுன்னு நெனைக்கிறேன்) 'குணுக்கு' ரொம்பா நல்லா இருக்கும்..
பத்திரிகையில் 'துணுக்கு', 'துணுக்கு மூட்டை (வாரமலர்)' என்று படிக்கும் பொது, ஏனோ என் அன்னை செய்த 'குணுக்கு'த் தான் ஞாபகம் வரும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரெசிப்பியோட அதன் நலனையும் சொல்றது செய்யத்தூண்டுது..

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

அரசூரான் said...

ஹும்... குணுக்கு நல்லாயிருக்கு, அதுக்குள்ள ஒரு துணுக்கு (நல்லெண்ணெய் கலக்குற டிப்ஸ்) வேறா? செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டு வந்து மேலும் கமெண்டுரேன்... :)

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Kurinji,
நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Madhavan,
டேஸ்ட் ஒரே மாதிரி இருக்கலாம், ஆனா அதுல அரிசி சேர்ப்பாங்க மாதவன். அவரவர்க்கு அன்னை சமையலைப் போலாகுமா. நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@முத்துலெட்சுமி/muthuletchumi,
செய்து பாத்துட்டு சொல்லுங்க. நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மதுரை சரவணன்,
நன்றி சரவணன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அரசூரான்,
செய்து சாப்பிட்டுபார்த்து நிச்சயம் சொல்லுங்க. நன்றி.

ராமலக்ஷ்மி said...

//இந்த கலவையில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிப் பிசறவும். இவ்வாறு செய்வதால் செய்யும் பலகாரம் எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.//

இப்போதுதான் அறிகிறேன். நல்ல குறிப்பு.

பருப்பின் நற்பயன்களும் அறியப் பெற்றோம். எல்லா பருப்பும் சேர்த்து செய்யும் ‘அடை’ தோசையும் நினைவுக்கு வருகிறது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

குறிப்புகள் எல்லாம் அம்மா சொல்லிக்குடுத்தது தான். மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்.

Sriakila said...

இப்போதுதான் கேள்விப்படிகிறேன் குணுக்கு என்ற பெயரை...

புவனேஸ்வரி ராமநாதன் said...

அப்படியா? செய்துபாத்துட்டு சொல்லுங்க. நன்றி ஸ்ரீஅகிலா.

விஜி said...

எனக்கு பிடிச்ச ஐட்டம், செய்வதும் ஈஸி

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆமாம், மிக எளிது. நன்றி விஜி.

Nithu Bala said...

எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்..படம் அருமை..பார்க்கும் போதே சாப்பிடனும்னு தோணுது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி நிது பாலா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி கீதா.

Gayathri Kumar said...

Super recipe! Unga blog romba nalla irukku!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி காயத்ரி. உங்கள் வலைப்பூவும் தான். இரண்டே மாதத்தில் எவ்வளவு ரெசிப்பி போட்டு இருக்கீங்க.

Vikis Kitchen said...

Happy Deepavali! குணுக்கு பற்றி கேள்வி பட்டிருக்கேன். சாப்பிட்டதில்லை. நீங்க தந்த விளக்கம் என்னையும் செய்ய தூண்டுது. பார்த்தாலே சாப்பிட தோணுது:)

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி விக்கி. செய்து சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க. தீபாவளி வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

குணுக்கு! பேரைக் கேட்டு எத்தனை வருசமாச்சு!
வளரும் போது ஏமாந்தா குணுக்கு தான் வீட்ல! அப்ப கிண்டல் பண்ணிட்டிருந்தோம்; இப்ப உங்க பதிவை படிச்சதும் சாப்பிடணும்னு ஏக்கம் வந்திடுச்சு போங்க! எப்பவாவது கோவிந்தபுரம் போனா அம்மாவைப் பண்ணச்சொல்லலாம். இல்லின்னா நானே ஒரு வாரம் செஞ்சு பாத்துர வேண்டியது தான். செய்முறைக்கு நன்றி.

அப்பாதுரை said...

ஓரப்படையா?
அதையும் கொஞ்சம் வெவரமாகச் வெளக்கிப் போடுங்க!

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப மகிழ்ச்சிங்க. நீங்களே ஒரு நாள் ட்ரை பண்ணிபாத்துட்டு சொல்லுங்க. ஒரப்படையும் செஞ்சிடலாம். நன்றி அப்பாதுரை சார்.

மனோ சாமிநாதன் said...

நான் அடிக்கடி செய்வது! மறுபடியும் உங்கள் பதிவில் பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது! நான் இதே சாமான்களுடன் சிறிது பச்சரிசியும் மிளகாய் வற்றலும் சேர்த்து செய்வேன்! அந்த ‘நல்லெண்ணெய்’ ஐடியா அருமை!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க மகிழ்ச்சி மனோம்மா. நானும் பச்சரிசி மிளகாய் சேர்த்து செய்து பார்க்கிறேன். நன்றி.

Padhu Sankar said...

My mother prepares this and I love it very much

முகுந்த்; Amma said...

ஆகா, நல்லா இருக்கே ரெசிபி, செய்து பார்க்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

செய்து பாத்துட்டு சொல்லுங்க. நன்றி முகுந்த் அம்மா.

அப்பாதுரை said...

ரொம்ப ருசியா வந்துதுங்க.. மோர் சாதத்துக்கு தொட்டுக்க பிரமாதமாக இருந்தது.
ரெசிபிகு ரொம்போ டேங்க்ஸ். (அதுக்குள்ள அல்வா ரெசிபியா? அதையும் செஞ்சு பாத்துருவோம்).

தீபாவளி வாழ்த்துக்கள்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

சொன்னது மாதிரியே செய்து பாத்துட்டு சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம் சார். அல்வாவையும் செய்து பாத்துட்டு சொல்லுங்க. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails