கொள்ளு : 1 பிடி
தேங்காய் : 1/2 மூடி
சிவப்பு மிளகாய் : 7
பூண்டு : 7 பல்
உப்பு : தேவையான அளவு
செய்முறை:
தேங்காயினை துருவி வைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொள்ளினைப் போட்டு அடுப்பினை இளந்தீயில் வைத்து, நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
பூண்டினை உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டால் மிக்ஸியில் நன்றாக அரைபடும். இப்போது தேங்காய், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கொள்ளு துவையல் தயார்.
கொள்ளு தானியத்தை நம் உணவில் அடுக்கடி சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஏற்படும் தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் தீரும் என சொல்லப்படுகிறது. சாப்பாட்டில் கொள்ளு சேர்ப்பதால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்றும், ஜுரம் அதிகமாக இருக்கும்போது கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் ஜுரம் சரியாகும் என்றும் கூறப்படுகிறது. வாதப் பிரச்சினைகளும், வயிற்று வலியும் குணமாகும். கொள்ளினை உணவில் சேர்ப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.
36 comments:
மருத்துவ பலன்களுடன் அசத்தல் பதிவு ..
நன்றி புதிய மனிதா.
A good and healthy recipe.
நன்றி மாணிக்கம்.
கொள்ளுத் துவயலை நான் சாதத்தில் அப்படியே போட்டுப் பிசைந்து சாப்பிடுவேன். நல்லா இருக்கும். இதே பக்குவத்தில் பீர்க்கங்காய் துவையல் செய்து பாருங்கள் (நீங்கள் ஏற்கனவே செய்து பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்). அதுவும் நன்றாக இருக்கும்.
பீர்க்கங்காய் துவையலும் செய்திருக்கிறேன் கோபி. நன்றி.
குறிப்பிற்கு நன்றி.கொள்ளு வாங்கி தான் செய்து பார்க்கணும்.
செய்து பாத்துட்டு சொல்லுங்க. நன்றி ஆசியா மேடம்.
செய்முறையுடன் கொள்ளின் பயனையும் தந்திருப்பது அருமை. செய்து பார்க்கிறேன்.
மேடம்! கொள்ளு துவையல் பதிவைக் காட்டி,
' செய்து பாரேன்' என்று என் பாகம்பிரியாளிடம் கேட்டேன்.
"கொள்ளு துவையல் சாப்பிட்டு விட்டு நீங்க எங்கயாவது குதிரை மாதிரி ஓடிட்டா என்ன செய்வது?"என்கிறாள்.(அவள் கையிலேயே லகான் இருப்பதை மறந்து விட்டு)
நல்ல குறிப்பு மேடம்!
@ராமலக்ஷ்மி,
நன்றி மேடம். செய்து பாத்துட்டு சொல்லுங்க.
@மோகன்ஜி,
என்ன பண்றது, வீட்டுக்கு வீடு வாசப்படி :) நன்றி மோகன்ஜி.
அருமைங்க,இதனுடன் சிறிது புளி சேர்த்து அரைப்பேன்..ரசம் சாதத்துடன் சாப்பிட தேவாமிர்தமா இருக்கும்.
எங்கள் வீட்டிலும் கொள்ளு துவையல் செய்வோம்.
சூடான சாதத்தில் நெய்ப் போட்டு துவையலும் போட்டு சாப்பிட்டால் நல்லாஇருக்கும். குண்டு உடம்பை மெலிய செய்யும்.
நிறைய செய்திகள் கொள்ளைப் பற்றி.
நன்றி.
delicious chutney,never tried chutney using kollu...too gud idea...Thanks for sharing the recipe.
@Mrs.Menagasathia,
நீங்க சொல்றத கேக்கவே சூப்பர் இருக்குங்க. நன்றி மேனகா.
@கோமதி அரசு,
குறிப்புக்கும் தகவலுக்கும் நன்றி மேடம்.
@Premalatha Aravindhan,
செய்து பாத்துட்டு சொல்லுங்க. நன்றி பிரேமலதா.
// சாப்பாட்டில் கொள்ளு சேர்ப்பதால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்றும், ஜுரம் அதிகமாக இருக்கும்போது கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் ஜுரம் சரியாகும் என்றும் கூறப்படுகிறது// nalla thakaval 'vallththukkal
நானும் சிறிது புளி சேர்த்து செய்வேன். சாதம் + அப்பளத்தோட சாப்ப்பிட நல்லா இருக்கும்.
நன்றி தெய்வசுகந்தி.
super thuvajal.
நல்ல குறிப்பு.
நன்றி வானதி.
நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.
அம்மா செய்து சாப்பிட்டதுண்டு........... நினைவலைகளை எழுப்பிவிட்டீர்கள்...
நன்றி யோகேஷ்.
இதுவரை சாப்பிட்டதில்லை.
செய்து பார்த்துட்டு சொல்லுங்க. நன்றி.
கொள்ளு ரசம் அம்மா வச்சு கொடுப்பாங்க சாப்பிட்டிருக்கேன் பொதினா துவையல், கருவேப்பில்லை துவையல், பிரண்டை துவையல் , திருவாட்சி இலை துவையல் இதெல்லாம் சாப்பிட்டிருக்கேன் ஆனா கொள்ள மிஸ் பண்ணிட்டேன்
இத்தனை வகையான துவையல் சாப்பிட்டு இருக்கீங்களா? இதையும் செய்து சாப்பிட்டு சொல்லுங்க. நன்றி தினேஷ்குமார்.
இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு முதல் முறையாக வருகை தருகிறேன்.... சிறப்பாக இருக்கிறது.... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
மிக்க நன்றி பிரபாகரன்.
கொள்ளு துவையல் சாப்டதில்ல - செய்யச் சொல்லுவோம் - நட்புடன் சீனா
சிறந்த பதிவுகளை வரவேற்கிறோம்.
http://cpedelive.blogspot.com
சாப்பிட்டுப் பாருங்க சீனா. ரொம்ப நல்லா இருக்கும்.
மிக்க நன்றி.
Post a Comment