Tuesday, October 19, 2010


பாகற்காய் மதுரம்

தேவையான பொருட்கள்:
பாகற்காய் : 1/4 கிலோ
மிளகாய்த்தூள் : 1 தேக்கரண்டி
பெருங்காயம் : 1 சிட்டிகை
மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
எலும்பிச்சம் பழம் : சிறியது 1
நாட்டு சர்க்கரை : 3 தேக்கரண்டி
கருவேப்பிலைப் பொடி : 1 தேக்கரண்டி
அரிசி மாவு : 1/2 கப்
கடலை மாவு : 2 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு


செய்முறை:
பாகற்காயை நன்றாக அலசி விட்டு வட்ட வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். நறுக்கிய பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன்மேல் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலும்பிச்சம் பழச் சாறு, பெருங்காயம், நாட்டு சர்க்கரை, கருவேப்பிலைப் பொடி, உப்பு போன்றவற்றைக் கலந்து, இந்தக் கலவையை ஒரு அரைமணி அப்படியே ஊற விடவும்.

ஊறிய இந்தக் கலவையில் அரிசிமாவு, கடலைமாவு கலந்து நன்கு பிசறவும். ஒரு கடாயில் எண்ணெய் வைத்து, பாகற்காய் கலவையை உதிரி உதிரியாக போட்டு வறுவல் பதத்தில் வறுத்து எடுக்கவும். பாகற்காய் மதுரம் தயார்.

32 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. நன்றி.

புதிய மனிதா. said...

nice tipz..........

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராமலக்ஷ்மி மேடம்.

நன்றி புதிய மனிதா..

Prema said...

wow healthy recipe,luks really delicious...Thanks for sharing.Adding of Chakarai gives nice taste to the dish.Will try it.

புவனேஸ்வரி ராமநாதன் said...

செய்துபாத்துட்டு சொல்லுங்க. நன்றி பிரேமலதா அரவிந்தன்.

Madhavan Srinivasagopalan said...

கேக்கவே ரொம்ப டேஸ்டியா இருக்குதே.. வீட்டுல பண்ணச் சொல்லி சாப்புட்டிட்டு சொல்லுறேன்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுங்க. நன்றி மாதவன்.

Asiya Omar said...

சூப்பர் புவனா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஆசிய மேடம்.

பொன் மாலை பொழுது said...

வித்தியாசமான ரெசிபி , நல்லா இருக்கு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மாணிக்கம்.

Menaga Sathia said...

சூப்பர்ர் ரெசிபி...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்லாருக்கும் போலயே மரகதம்.. செய்யறேன் ஒரு நாள்...

Chitra said...

new recipe. thank you.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@முத்துலெட்சுமி,
நிச்சயமா மேடம். செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

@Chitra,
நன்றி.

Padhu Sankar said...

Love this very much .Adding sugar sounds interesting .Next time I will try your recipe.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி பது. செய்துபாத்துட்டு சொல்லுங்க.

Asiya Omar said...

இன்று செய்து பார்த்தேன் ,அருமையாக இருந்தது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

செய்து பார்த்துவிட்டு உடன் கருத்து கூறியதற்கு மிக்க நன்றி ஆசியா மேடம்.

Thenammai Lakshmanan said...

அட பார்க்கவே ஜொள்ளு ஊறுதே..:))

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி தேனம்மை மேடம்.

thiyaa said...

நல்ல குறிப்பு

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி.

Kanchana Radhakrishnan said...

வித்தியாசமான ரெசிபி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.

தெய்வசுகந்தி said...

வித்தியாசமா இருக்குதுங்க!!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி தெய்வசுகந்தி.

கோமதி அரசு said...

பாகற்காய் மதுரம் ,கேட்கும் போதே செய்ய தூண்டுகிறது.

செய்து விடுகிறேன்.

நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி கோமதி மேடம். செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

பால கணேஷ் said...

பாத்தா நல்லா இருக்கும் போலத்தான் தெரியுது. செய்யச் சொல்லி சாப்பிட்டுப் பாத்துடறேன். நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றாகத்தான் இருக்கும். சாப்பிட்டுப் பாருங்கள்.
மிக்க நன்றி கணேஷ்.

Post a Comment

Related Posts with Thumbnails