Monday, July 19, 2010


பாகற்காய் 65

தேவையான பொருட்கள்:
பாகற்காய் : 1/4 கிலோ
கடலை மாவு : 1 கப்
அரிசி மாவு : 2 ஸ்பூன்
சோள மாவு : 1 ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
பெருங்காயப்பொடி : 2 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு

செய்முறை:

பாகற்காயை நன்கு கழுவிவிட்டு
அதனை வட்ட வட்டமாக அரிந்து கொள்ள வேண்டும். அரிந்த பாகற்காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கொடுக்கப்பட்ட அளவில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய் தூள், பெருங்காத்தூள், உப்பு ஆகியவற்றை போட்டு ஒன்றாக கலந்து, 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மசாலாவில் ஊறிய பாகற்காய்களை கடாயில் நன்கு சூடான எண்ணையில் பொரித்து எடுத்தால் பாகற்காய் 65 தயார். இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், எலும்பிச்சம்பழம் சாதம் ஆகியவற்றுடன் உண்ண நன்றாக இருக்கும். இது போல செய்து சாப்பிடும்போது பாகற்காயின் கசப்புத் தன்மை குறையும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


பாகற்காயின் நலன்கள்:
பொதுவாக பாகற்காயின் தன்மை கசப்பு. அதனாலேயே இதனை பலர் விரும்பி
சாப்பிடமாட்டார்கள். இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை நீரிழிவு நோயால் அவதிப்படுகின்றனர். பாகற்காயை நாம் உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராகிறது. மலச்சிக்கல் குணமாகிறது. ரத்த அழுத்தம் சீராகிறது. பாகற்காயை புற்றுநோய்க்கு மருந்தாக பயன் படுத்தலாம் என சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்கள். இத்தனை நல்ல பயன்களை உடைய பாகற்காயை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வோம். நலமுடன் வாழ்வோம்.

10 comments:

Menaga Sathia said...

சூப்பர்ர்ர்....எனக்கு மிகவும் பிடித்தது...

அபி அப்பா said...

பொதுவாவே பாகற்காய்ல எது செஞ்சாலும் எனக்கு பிடிக்கும். அதிலும் இது என்ன்வோ புதுசா இருக்கு. பார்க்கவே நல்லா இருக்கு. செஞ்சு அந்த தட்டிலே வைக்கும் போது எனக்கு ஒரு போன் செஞ்சிருந்தா குடும்பத்தோட வந்து கொட்டிகிட்டு போயிருப்பேன்:-))

ஆமா அது என்ன பாகற்காய் 65 என்ன பெயர்? சிக்கன் 65க்கு அந்த பெயர் ஏன் வந்ததுன்னா, அந்த பிராய்லர் கோழி அதிகபடசமா 65 நாள் மட்டுமே உயிர் வாழும். அதிலே செஞ்சதால அந்த பெயர். அது போல இந்த பாகற்காயும் 65 நாள்ல அழுகிடுமோ???

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி அபி அப்பா. சும்மா ஃபேன்சியா இருக்கட்டுமேன்னு வச்ச பெயர் அது.

மனோ சாமிநாதன் said...

பாகற்காய் 65 செய்முறை எளிதாக இருக்கிறது! பார்ப்பதற்கு சுவையாகவும் உடனே சாப்பிடத்தூண்டுவதாயும் இருக்கிறது!!

மயிலாடுதுறை உங்கள் ஊர் என்று பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது. நான் அடிக்கடி வரும் ஊர் அது. மேல வீதியிலும் தெற்கு வீதியிலும் உறவினர்கள் இருக்கிறார்கள்!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மனோ சாமிநாதன். மிகவும் சந்தோஷமாக உள்ளது.

vanathy said...

super recipe. very nice presentation!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி வானதி.

R.Gopi said...

ஹா...ஹா...ஹா....

தலைப்பே படு ஜோரா இருக்கு... செய்முறை விளக்கம் அதைவிட மேலும் ஜோர்....

இருக்கும் அனைத்து காய்கறிகளிலும் பாகற்காய்க்கு தனியிடமுண்டு...

யெட் அனதர் யம்ம்ப் ரெசிப்பி....

நேரம் கிடைக்கறச்சே இங்கேயும் வந்து பாருங்கோ..

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கோபி. அவசியம் பார்க்கிறேன்.

Post a Comment

Related Posts with Thumbnails