*******
பிடித்த நல்ல விஷயங்கள்:
எஸ்.பி.பி., வாணி ஜெயராம் பாடின சினிமா பாடல்கள், நித்யஸ்ரீ மற்றும் அவங்க பாட்டி டீ.கே.பட்டம்மாள் பாடின கர்னாடக சங்கீத பாடல்களும் ரொம்ப பிடிக்கும். மத்தபடி பிடிச்ச நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு. அதுக்கு இந்த பதிவு போதாது. வழக்கமான விஷயந்தான் என்றாலும் நான் கட்டாயம் சொல்லித்தான் ஆகணும். எங்க அம்மா, அப்பாவை நான் உயிரா மதிக்கிறேன். ஏழ்மையிலும் நேர்மையோட இருக்குறவங்களை பாக்கறப்போ ஆச்சர்யத்தோட கூட அவங்க மேல ஒரு அபிமானமும் வந்துடும். நாம இருக்கற இடத்த சுத்தமா வெச்சிக்கிறது ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயத்துல ஒண்ணு. பாரதியாரை ரொம்ப பிடிக்கும். ரஜினி ஆரம்ப காலத்தில நடிச்ச படங்கள் பிடிக்கும். இப்படி பிடிச்ச விஷயங்களைப் பத்தி சொல்லிக்கிட்டே போகலாம்.
மறக்க முடியாத சம்பவம்:
என்னோட வாழ்க்கையில எந்த விஷயம் எனக்கு சந்தோஷத்த குடுத்துச்சோ, அதுவே எனக்கு கஷ்டத்தையும் கொடுத்துருக்கு. படிச்சு முடிச்ச உடனேயே வேலை கிடைச்சுது. அந்த தருணம் மகிழ்ச்சிய குடுத்துச்சு. ஆனா குடும்ப சூழ்நிலையால அதை விட வேண்டி வந்தப்ப அதுவே எனக்கு ரொம்ப வருத்தமான விஷயமா மாறிடுச்சு. இது போல நிறைய சம்பவங்கள். இந்த சம்பவங்கள் என்னை பக்குவப்பட வைத்தது. "இதுவும் கடந்து போகும்", "நடப்பவை எல்லாம் நன்மைக்கே", என இது போன்ற வாழ்க்கைத் தத்துவங்களை அனுபவ பாடமாக ஆக்கியது இது போன்ற சம்பவங்கள். வாழ்க்கைய அதன் போக்குல வாழக் கத்துக்க வச்சுது.
மகிழ்ச்சி தந்த பிடித்த பொழுதுபோக்கு:
உண்மைய சொல்லனும்னா கோயிலுக்கு போறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச பொழுதுபோக்கு. நடு ராத்திரி எழுப்பிவிட்டு கோயிலுக்கு கிளம்ப சொன்னாகூட எழுந்து கிளம்பி விடுவேன். இளையராஜா பாட்டு கேட்டுகிட்டே வீட்டு வேலை செய்யிறது ரொம்ப பிடிச்ச பொழுதுபோக்கு.
அன்பு அல்லது பரிசுகள்:
எனக்குக் கிடைச்ச அனுபவங்கள் மூலமா, நமக்குக் கிடைச்ச இந்த வாழ்க்கையே அன்பான பரிசுதான்.
குழந்தைகளின் மகிழ்ச்சியான விஷயம்:
என்னோட மூத்த பையன், இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தின் 50-வது வருட பொன் விழா ஆண்டில் ஆகஸ்ட் 15-ல் பிறந்தது என்னைப் பொறுத்த வரை நான் ரொம்ப பெருமையா நினைக்கிற விஷயம். என்னோட ரெண்டு பிள்ளைகளையும் படிப்பு போன்ற விஷயங்களைத் தாண்டி, நல்ல மனிதர்களா வளர்ந்து நிக்கணும் அப்படிங்கறதுதான் என்னோட ஆசை. குழந்தைகள் அப்படின்னு சொல்லும்போது என்னோட தம்பி பையன், எங்க அப்பா பிறந்த அதே தினத்தில் பிறந்தது (தாத்தாவும் பேரனும்) நான் நினைச்சு நினைச்சு சந்தோஷப் படர விஷயம்.
பிடித்த நல்ல மனிதர்கள்:
சாதாரண குடும்பத்துல பிறந்து கஷ்டப்பட்டு படிச்சு தன்னோட உழைப்பால இன்னைக்கு ஒரு மேன்மையான இடத்துக்கு வந்திருக்குற என்னோட கணவர் எனக்குப் பிடித்த மனிதர். அதே நேரத்துல யாரிடமும் பயம் என்பது துளியும் இல்லாமல், தன்னுடைய நேர்மையான கருத்துக்களை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் தெளிவாக எடுத்து வைக்கும் திரு.சோ.இராமசாமி அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். சாதாரணமா எல்லா பெண்களையும் போல அன்றாட வேலைகளை செய்து கொண்டு அப்படியே போய்க்கொண்டிருந்த என்னை, பதிவுலகம் அப்படின்னு தனியா ஒரு உலகம் இருக்கு, அப்படின்னு எனக்கு அறிமுகப் படுத்திய என் சகோதரன், எனக்குப் பிடித்த மனிதர்களுள் ஒருவன். நான் தனி ஆள் இல்லை, எனக்குப் பின்னாடி என் தம்பி இருக்கான் என என்னை தைரியம் கொள்ளச் செய்தவன்.
பிடித்த உணவுகள் புதியதாய் செய்து பார்த்தது:
உண்மைய சொல்லனும்னா கோயில்ல கொடுக்கற புளியோதரைதான் எனக்குப் பிடிச்ச உணவு. எங்க அம்மா செய்து கொடுக்குற எல்லா உணவுமே எனக்குப் பிடித்த உணவுதான். நிறைய புதிய உணவுகளை செய்து பார்த்திருக்கிறேன். அதற்கு என் கணவரைதான் முதல் பலி கடா ஆக்கியிருக்கிறேன்.
பிடித்த அல்லது மறக்க முடியாத இடங்கள்:
வழக்கமா சொல்லுவதுதான். பிறந்த ஊரான மன்னார்குடி பிடிக்கும். கல்யாணமாகி வந்த மாயவரம் அதைவிட அதிகமா பிடிக்கும். என்னதான் பிறந்த வீடு பிடிக்கும்னாலும் புகுந்த வீட்டை விட்டுக் கொடுக்க முடியுமா. பெண்கள் அதிக காலம் வாழ்வது புகுந்த வீட்டு மக்களோடதான. அதனால அந்த சொந்தமும் இயல்பாகவே நமக்குப் பிடித்துவிடும். இதையெல்லாம் தாண்டி எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் திருவண்ணாமலையும், வேலூரும் தான்.
வாழ்க்கையில் இந்த வருடத்தில் நடந்த மனதைத் தொடுகிற சம்பவங்கள்:
மனதைத் தொடுற சம்பவங்கள் அப்படீன்னு சொல்றதைவிட ரொம்ப நாளா மனதை வருத்தப் பட வைக்கிற விஷயங்கள்னு வேணா சொல்லலாம். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நம்ம நாடு, அந்த மக்கள் சக்திய நல்ல விதத்தில் பயன் படுத்தாம, நிறைய பேர் போதையின் பின்னால் சென்று வாழ்க்கையை அழித்திக் கொள்வது, ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப் படுபவர்கள் இருக்கும் நாட்டில்தான், பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் இருப்பவர்களும் வாழும் முரண்பாடான நாடு, இத்தனை கோடி மக்கள் நிறைந்த நம் இந்தியாவை வழி நடத்த ஒரு இந்தியன் இல்லாமல் போன விஷயம், எத்தனை ஊழல் நடந்தாலும் இப்பவும் துளி கூட நேர்மை மாறாமல் வாழும் மனிதர்களும் இருக்கும் பெருமிதம் என பல விஷயங்கள் மனதை அரித்துக் கொண்டுள்ளவை.
*******
2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்:
நம்மால் முடிந்த அளவிற்கு நல்ல விஷயங்களை மட்டுமே பதிவில் எழுதுவது. என்னால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் பிறர்க்கு முடிந்த வரை கெடுதல் செய்யாமல் இருப்பதே, நல்லது செய்வதற்கு சமம் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது.
இந்த ஆண்டு எல்லோருக்குமே நன்மைகளை மட்டுமே தரவேண்டும் என இறைவனை வேண்டி அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.
2010-ம் ஆண்டு டிசம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழிலும், 2011-ம் ஆண்டு ஜனவரி மாத பொங்கல் சிறப்பிதழ் லேடீஸ் ஸ்பெஷல் இதழிலும், எனது இரண்டு கதைகளும் ஒரு கவிதையும் வெளி வந்தது நான் எதிர்பாராமல் நடந்த இனிய நிகழ்வுகள்.
லேடீஸ் ஸ்பெஷல் புத்தகத்தில் என்னுடைய படைப்புக்கள் வர முக்கிய காரணமாக இருந்த அன்பு அக்கா தேனம்மை அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*******
நான் இதனை தொடர அழைப்பது:
கோமதி அரசு
ஆதிரா
காயத்ரி
அப்பாதுரை
தமிழ் உதயம் ரமேஷ்
ஆர்.வி.எஸ்.
கோபி ராமமூர்த்தி
மாதவன் ஸ்ரீநிவாசகோபாலன்
மாணிக்கம்
வழிப்போக்கன் யோகேஷ்
நேரம் கிடைக்கும்பொழுது தொடர வேண்டுகிறேன்.
47 comments:
நல்லா சொல்லி இருக்கீங்க..
ஒரு டவுட் ?
சுதந்திரப் போன் விழா ஆண்டு.. 2010 இல்லையே.. ?
நீங்க பொதுவா வள வருட நினைவுகளை எழுதி இருக்கீங்களோ ?
தொடர அழைத்தமைக்கு நன்றிகள்.. விரைவில் பதிவிடுகிறேன்.
ஆமாம், பொதுவாத்தான் எழுதியிருக்கேன், அதையும் பத்விலே குறிப்பிட்டுள்ளேன். மிக்க நன்றி மாதவன்.
" நீங்க பொதுவா [ca="blue"]வள[/ca] வருட நினைவுகளை "
= "நீங்க பொதுவா [ca="red"]பல[/ca] வருட நினைவுகளை "
முன்னரே புரிந்தது. :)
அதெப்படிங்க பத்து பேர்களை தொடர அழைச்சீங்க ?
நாங்க கூப்பிட ஆளுங்க வேணாமா
உங்களுக்கா அழைக்க ஆளுங்க இல்லை?! :)
உங்கள் டைரி சிறப்பாக இருந்தது. என்னை அழைத்தமைக்கு மகிழ்ச்சி. அவசியம் தொடர்பதிவை தொடர்கிறேன்.
ரொம்பவும் இயல்பாக எழுதியிருக்கீங்க, என் வாழ்க்கையையும் 'கொஞ்சம்' எட்டிப் பார்க்கறா மாதிரி இருந்தது. வாழ்த்துக்கள்
@தமிழ் உதயம்,
மிக்க நன்றி ரமேஷ்.
@middleclassmadhavi,
ஆஹா.. ரொம்ப சந்தோஷம் மாதவி. மிக்க நன்றி.
நல்ல டைரி தொகுப்பு. 2011 உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி இனியவன்.
ஆகா ,விஜி ஆரம்பித்த தொடர் இவ்வளவு அருமையாக போய்கிட்டு இருக்கு.அவங்க எதிர்பார்த்ததை எழுதிருக்கீங்க,பாராட்டுக்கள்.பகிர்வு சூப்பர்.என்னை என் குடும்பத்தாரும் நெருங்கிய தோழிகளும் தான் ஆசியாமான்னு கூப்பிடுவாங்க,நீங்களும் அவ்வாறு கூப்பிடுவது மிக்க மகிழ்வை தருகிறது.
@asiya omar,
//என்னை என் குடும்பத்தாரும் நெருங்கிய தோழிகளும் தான் ஆசியாமான்னு கூப்பிடுவாங்க,நீங்களும் அவ்வாறு கூப்பிடுவது மிக்க மகிழ்வை தருகிறது.//
ரொம்ப சந்தோஷம் ஆசியாம்மா. பதிவை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி கீதா.
மிக அழகாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் புவனேஸ்வரி:)!
டைரி குறிப்புகள் சுவாரஸ்யமா இருக்கு ..
மிகவும் நல்ல பகிர்வு
குறிஞ்சிகுடில்
\\நம்மால் முடிந்த அளவிற்கு நல்ல விஷயங்களை மட்டுமே பதிவில் எழுதுவது. என்னால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் பிறர்க்கு முடிந்த வரை கெடுதல் செய்யாமல் இருப்பதே, நல்லது செய்வதற்கு சமம் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது.//
நல்ல விசயம்..
மிகச்சிறப்பான வருடமாக அமையட்டும் இவ்வாண்டு.. வாழ்த்துகள் புவனேஸ்வரி:)
அருமையான பகிர்வுங்க.... பாசமும் அன்பும் மிளிர எழுதி இருக்கீங்க....
@கே.ஆர்.பி.செந்தில்,
பதிவை ரசித்தமைக்கு நன்றி சகோ.
@Kurinji,
நன்றி குறிஞ்சி.
@முத்துலெட்சுமி/muthuletchumi,
ரொம்ப நன்றி முத்துலெட்சுமி. உங்களுக்கும் இவ்வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
@Chitra,
பாசமான பாராட்டுக்கு நன்றி சித்ரா.
இத்தனை கோடி மக்கள் நிறைந்த நம் இந்தியாவை வழி நடத்த ஒரு இந்தியன் இல்லாமல் போன விஷயம், எத்தனை ஊழல் நடந்தாலும் இப்பவும் துளி கூட நேர்மை மாறாமல் வாழும் மனிதர்களும் இருக்கும் பெருமிதம் என
உங்களை அடையாளப்படுத்திய தேனம்மைக்கு நன்றி சொல்கின்றேன். தெளிவான சிந்தனை.
தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி ஜோதிஜி.
எளிமையாக, நேர்மையாக, தெளிவாக இருந்தது டைரிக்குறிப்பு! வாழ்த்துக்கள் புவனேஸ்வரி!
Awesome post and a nice read..
பதிவை ரசித்து வாசித்தேன்.
@மனோ சாமிநாதன்,
தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மனோம்மா.
@Pushpa,
மிக்க நன்றி புஷ்பா.
@ஸாதிகா,
பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி ஸாதிகாம்மா.
//இந்த ஆண்டு எல்லோருக்குமே நன்மைகளை மட்டுமே தரவேண்டும் //
எல்லோரும் எல்லா நன்மைகளை இந்த புத்தாண்டில் பெற்று வாழ இறைவன் அருள் புரிவார்.
தொடர் பதிவுக்கு அழைத்தற்கு நன்றி புவனேஸ்வரி.
நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டு உள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
”என்னால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் பிறர்க்கு முடிந்த வரை கெடுதல் செய்யாமல் இருப்பதே, நல்லது செய்வதற்கு சமம் ”
இது போதுமே!
நல்ல பதிவு.
@கோமதி அரசு,
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி கோமதியம்மா.
சென்னை பித்தன்,
பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி சார்.
One other lovely post from you with lot of "wow" factor entries. I love tamarind rice as well. One comfort food of mine :)
congrats on making your stories in leading magazines. quite an achievement.
I admire how you look up to your family,kith and kin. Lucky folks :)
I do have my own diary of events of 2010 but in a rather funny note
http://meandmythinkingcap.blogspot.com/2010/12/llrc-lessons-learned-and-review.html
அட்டகாசம் போங்க.. என்னை மாதிரி தத்து பித்துன்னு எதுவும் எழுதாம.. சீரிய சிந்தனையில் சீரியசாக எழுதிய பதிவு. கூப்பிட்டதற்கு வழக்கம் போல் ஒன்று என் சைட்டில் கிறுக்கி வைத்திருக்கிறேன். சரி ஓ.கே. ;-)
மிகவும் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்., உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. உங்கள் பொழுது போக்கு, மிகவும் ரசித்தேன். கோவில் புளியோதரை , பிடித்த மனிதர்கள், குழந்தைகள் நு அருமையா எழுதிருக்கிங்க. இன்னும் நிறைய எழுதுங்க. எனக்கும் சோ. அவர்களின் தைரியம் பிடிக்கும்:)
புத்தாண்டு உங்களுக்கு இன்னும் சிறப்பை அமைய வாழ்த்துக்கள்.
@coolblogger,
பதிவை ரசித்தமைக்கும், தங்களின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுஜாதா. உங்களுடைய பதிவையும் ரசித்தேன்.
@RVS,
//என்னை மாதிரி தத்து பித்துன்னு எதுவும் எழுதாம..//
அநியாத்துக்கு தன்னடக்கமான வார்த்தைகளா இருக்கே.. உங்கள் பதிவையும் பார்த்தேன். பதிவை தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி.
@Viki's Kitchen,
பதிவை ரசித்தமைக்கு ரொம்ப நன்றி விக்கி. உங்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
புவனா மேடம்...
2010 டைரி குறிப்பு படு பிரமாதம்...
உங்களுக்கு 2011ம் ஆண்டும், வரும் அனைத்து ஆண்டுகளும் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
நீங்க சொன்னபடி பதிவு போட்டுட்டேன்..
http://madhavan73.blogspot.com/2011/01/2010.html
@R.Gopi,
மிக்க நன்றி. தங்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
@Madhavan Srinivasagopalan,
பதிவை தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி மாதவன்.
Post a Comment