*******
இயற்கை உணவுகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதுண்டா? இயற்கை உணவுப் பழக்கம் எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தருகிறது?
பொதுவாக சமைக்காமல் காய், கனிகளை அப்படியே அதன் இயல்பு மாறாமல் சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லது என்றுதான் சொல்கிறார்கள். சாலட் என்னும் முறையில், காய் கனிகளுடன், எலுமிச்சம் சாறு, உப்பு, தேன் கலந்து சாப்பிடும்போது, தற்காலத்தில் பயன்படுத்தப் படும் அளவிற்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் இவற்றினால் ஏற்படும் தீங்கில் இருந்து கூட தப்பிக்கலாம். எலுமிச்சம் சாரும், உப்பும் நச்சுத் தன்மையை எடுத்து விடுவதால், பச்சையாக கறிகாய், கனிவகைகளை சாப்பிடுவதில் எந்த அச்சமும் தேவையில்லை. அவல், தேங்காய், சர்க்கரை இவற்றை கூட ஒன்றாகக் கலந்து சமைக்காமல் சாப்பிடலாம். இது போல வாரத்திற்கு இரு முறை அடுப்பில் ஏற்றாமல் இயற்கையான முறையில் உணவு பழக்கம் நமக்கு நன்மையே.
அன்றாடம் சரியான நேரத்தில் சாப்பிடுவீர்களா? அல்லது பசிக்கும் நேரத்தில் உண்பீர்களா?
நேரத்திற்கு சாப்பிடுவதெல்லாம் திருமணத்திற்கு முன்புதான். இப்போதெல்லாம், பசிக்குத்தான் உணவு, ருசிக்கு அல்ல.
வலைப் பதிவில் சமையல் சம்பந்தமாக எழுதுவதற்கு யார் உங்களுக்கு தூண்டுகோலாக இருந்தார்கள்?
பொதுவான விஷயங்களை எடுத்து பதிவெழுத ஆரம்பித்த வேளையில், மேனகா சத்யா அவர்களின் சமையல் பதிவுதான் என்னை, எனது பதிவில் சமையல் பற்றியும் எழுதத் தூண்டியது. அந்த வகையில் மேனகா அவர்களுக்கு என் நன்றிகள்.
புதியதாக ஏதாவது உணவுவகை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? அது சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
நான் ஒரு முறை புது விதமான வடை செய்யப் போய் அரைக்கும்போது சற்று தண்ணீர் அதிகமாகிவிட்டதால், அதிலேயே துளி அரிசி மாவு சேர்த்து, அதையே பகோடாவாக செய்து விட்டேன். இப்படி பல முறை ஆகி உள்ளது. ஆனாலும் பதார்த்தத்தை வீணாக்காமல், வேறு வடிவம் கொடுத்து விட வேண்டியதுதான். (சாப்பிடறவங்க பாடுதான் திண்டாட்டம்).
உங்களது அன்றாட சமையலில் நீங்கள் கட்டாயம் தவிர்க்கும் சமையல் சம்பந்தமான பொருட்கள் ஏதாவது மூன்று?
நான் அன்றாட சமையலில் கரம் மசாலா, சோடா உப்பு, அஜினோமோடோ இவற்றை சேர்ப்பதே இல்லை. சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் கூட சேர்ப்பதில்லை. இவை இல்லாமலேயே ருசியாக சமைக்க முடியும்.
தினப்படி சமையலில் நீங்கள் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் சமையல் பொருட்கள் சில?
சமையலில் பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பூண்டு அதிகம் சேர்த்து செய்வது வழக்கம்.
குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உண்டாகிறது?
சேர்ந்து சாப்பிடுவதால் மற்றவருக்கு என்ன உணவு பிடிக்கும், என்பதை பிறர் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. சேர்ந்து இருக்கும் வாய்ப்பு குறைந்து விட்ட இந்த காலத்தில் குறைந்த பட்சம், சாப்பிடும் நேரத்திலாவது கலந்து பேசி, சிரித்து மகிழ்வது நன்மைதானே.
உங்களுக்குப் பிடித்த உணவகத்தில் நீங்கள் விரும்பாத உணவு பரிமாறப்பட்டால் என்ன செய்வீர்கள்?
பிடித்த உணவகம் என்று எதுவும் இல்லை. முடிந்த வரை வெளியில் சாப்பிடுவது இல்லை. அப்படி சாப்பிட்டாலும் வயிற்றுக்குக் கெடுதி இல்லாத இட்லி வாங்கி சாப்பிட்டு விடுவது வழக்கம்.
*******
நான் இதனை தொடர அழைப்பது:
மேனகா
ஆசியா உமர்
விக்கி
24 comments:
உங்கள் பல பதில்கள் கவர்ந்துள்ளன. முக்கியமாய் கடைசி பதில். எவ்வளகெவ்வளவு உணவகத்தில் சாப்பிடுவதை குறைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு உடம்புக்கு நல்லது.
ungalai pattri therunthu kolla nalla pathivu....
குறிஞ்சி குடில்
@தமிழ் உதயம்,
//எவ்வளகெவ்வளவு உணவகத்தில் சாப்பிடுவதை குறைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு உடம்புக்கு நல்லது.//
கரெக்ட் தான். பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி ரமேஷ்.
@Kurinji,
மிக்க நன்றி குறிஞ்சி.
அருமையான கேள்விகளும் பதில்களும்,தொடர் அழைப்பிற்கு மிக்க நன்றி.
தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி. நிச்சயம் கலந்து கொள்வேன். எல்லா பதில்களும் அருமை. இட்லி பதில் சூப்பர். முதல் கேள்விக்கான பதில் அறிவுபூர்வமாய் உள்ளது. எனக்கு இந்த வகையில் ரசாயனங்களை நீக்கலாம் என்று தெரியாது. சும்மா ஒப்புக்கு சாலட் சாப்பிடுவேன்:) இனி தெரிந்தே தைரியமாய் சாப்பிடலாம்:)
சுவையான பதில்கள்! :-)
//எலுமிச்சம் சாரும், உப்பும் நச்சுத் தன்மையை எடுத்து விடுவதால், பச்சையாக கறிகாய், கனிவகைகளை சாப்பிடுவதில் எந்த அச்சமும் தேவையில்லை. //
உபயோகமான தகவல்!எல்லாமே!
I really loved all your answers and thanks a lot for keep the ball rolling.
பதில்கள் அனைத்துமே அருமை...வாழ்த்துகள்...
@asiya omar,
மிக்க நன்றி ஆசியாம்மா.
@Viki's Kitchen,
முதல் கேள்விக்கு ரொம்ப பெரிய பதிலா இருக்கேன்னு பார்த்தேன், உபயோகமா இருக்குனு சொல்லியிருகீங்க, ரொம்ப சந்தோஷம் விக்கி. மிக்க நன்றி.
@Chitra,
மிக்க நன்றி சித்ரா.
@கே. பி. ஜனா...,
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி ஜனா அவர்களே.
@coolblogger,
மிக்க நன்றி சுஜாதா.
@GEETHA ACHAL,
மிக்க நன்றி கீதா.
//
அப்படி சாப்பிட்டாலும் வயிற்றுக்குக் கெடுதி இல்லாத இட்லி வாங்கி சாப்பிட்டு விடுவது வழக்கம்
//
correcta soneenga...
நன்றி யோகேஷ்.
-- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்
உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
(மிக அழகான விளக்கங்கள்)
அப்படி சாப்பிட்டாலும் வயிற்றுக்குக் கெடுதி இல்லாத இட்லி வாங்கி சாப்பிட்டு விடுவது வழக்கம்
//நல்ல பழக்கம்
நானும் அஜினோ மோட்டோ சேர்க்கமாட்டேன்
தங்களின் அன்பான விருதுக்கு நன்றி அக்கா. பதிவை ரசித்தமைக்கும் நன்றிகள்.
நல்ல தகவல்கள்,நல்ல கொள்கைகள்,நல்ல .........ன்னு சொல்லிகிட்டே போகலாம்.
ரொம்ப சந்தோஷம் இனியவன். தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.
சரியான கேள்விகள்....சுவையான பதில்கள்!!!
பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி நானானி.
Post a Comment