இத்திருக்கோயிலில் சுத்தம் என்னும் சுபிட்ச மொழியும், மௌனம் என்னும் தெய்வீக மொழியும் மட்டுமே பேசப்படுகிறது. இந்தக் கோயிலில் ஐயப்பன் சன்னதியைச் சுற்றி பல கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் எழுதப்பட்டுள்ளன.
"ஆறுதரம் பூமியை வலம் வருதலும், ஆயிரம் முறை காசியில் குளித்தலும், நூறு தடவை சேது ஸ்நானம் செய்தலும், என இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயை பக்தியுடன் ஒருதரம் வணங்கினாலே கிடைக்கும்."
"ஆலய மணி தலை கவிழ்ந்து உள்ளது. ஆனால் அதன் நாதம் தொலைதூரம் வரை கேட்கிறது. அதுபோல அடக்கமாக செய்யும் தொண்டு நெடுங்காலம் பயன் தரும்."
"பள்ளிக்கூடம் ஒரு கோயிலைப் போல இருக்க வேண்டும்,
கோயில் ஒரு பள்ளிக் கூடமாகத் திகழ வேண்டும்."
"நோக்கம் ஓராண்டாயிருந்தால் பூக்களை வளர்ப்போம்,
நோக்கம் பத்தாண்டாயிருந்தால் மரங்களை வளர்ப்போம்,
நோக்கம் முடிவில்லாமலிருந்தால் மனித குலத்தை வளர்ப்போம்."
இது போல நூற்றுக் கணக்கான பொன் மொழிகள் கோயிலைச் சுற்றி. இங்கே நான் குறிப்பிட்டது ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு.
பொதுவாக ஐயப்பன் பாடல்களும், E.M.ஹனிபா அவர்கள் பாடிய இஸ்லாமிய பாடல்கள், K.J.ஜேசுதாஸ் அவர்கள் பாடிய கிருஸ்துவ பாடல்கள் என இவை அனைத்தும் மத வேறுபாடின்றி அனைவருமே விரும்பிக் கேட்கும் பாடல்கள். இந்த மார்கழி மாதத்தில் சபரி மலை யாத்திரை நிகழும் நேரம். இந்நேரத்தில் இருமுடி தாங்கி செல்லும் ஐயப்ப பக்தர்களுடன் நாமும் சேர்ந்து ஐயப்பன் கானங்கள் சிலவற்றை கேட்டு இந்த ஆண்டினை இனிமையுடனும், பக்தியுடனும் தொடங்குவோம்.
ஹரிவராசனம்... (K.J.ஜேசுதாஸ்)
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... (K.வீரமணி)
பொய் இன்றி மெய்யோடு... (K.J.ஜேசுதாஸ்)
பகவான் சரணம் பகவதி சரணம்... (K.வீரமணி)
மாமலை சபரியிலே... (K.வீரமணி)
ஓம்கார ரூபன்...
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... (மது பாலகிருஷ்ணன்)
மணிகண்டன் சர்வேஷ்வரன்... (மது பாலகிருஷ்ணன்)
சுவாமி பொன்னையப்பா... (K.வீரமணி)
வில்லாளி வீரனே வீர மணிகண்டனே... (K.வீரமணி)
நெய் அபிஷேகம்... (உன்னிகிருஷ்ணன்)
32 comments:
நானும் இந்த கோயிலுக்கு சென்று இருக்கிறேன். பாடல் தொகுப்பும் அருமை.
Pongal Feast Event
Kurinji
வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி குறிஞ்சி.
பாட்டுக்களும் தகவல்களும் அருமை
வருகைக்கு மிக்க நன்றி இனியவன்.
அப்பா அருமையான பாடல்கள். சேர்த்த அனைத்துப் பாடல்களும் காதுகளில் ஒலித்துக்கொண்டே. பாட்டுக்கேக்க இனிமேல் இங்கே தான் வரவேண்டும்.
நல்ல பதிவு பு.ரா. அவர்களே.
பொன்மொழி பகிர்வும் பாடல் பகிர்வும் வெகு அருமை.
நல்ல பதிவு. நன்றி புவனேஸ்வரி.
அருமையான பாட்டுகள்.
@ஆதிரா,
ஆஹா.. அவசியம் அடிக்கடி வாங்க ஆதிரா.. மிக்க நன்றி..
//பு.ரா. அவர்களே.// :)
@ராமலக்ஷ்மி,
ரொம்ப சந்தோஷம் மேடம். மிக்க நன்றி.
@Kanchana Radhakrishnan,
ரசித்தமைக்கு மிக்க நன்றி காஞ்சனா.
நல்ல பகிர்வு.......... வீரமணியின் குரலில் ஐய்யப்ப பாடல்கள் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்...
ஆமாம், எவ்வளவு அற்புதமான ஐயப்ப பாடல்களை பாடியிருக்கிறார். பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி யோகேஷ்.
நல்ல பகிர்வு....
SUch a nice post,thanks for sharing,Happy 2011 to you..
வீரமணியும், ஜேசுன்னாவும் பாடிய ஐயப்பன் எப்போதுமே கண்முன் பிரத்யக்ஷமாக காட்சி தருவார். பகிர்வு சூப்பர். நன்றி. ;-)
@பிரஷா,
மிக்க நன்றி பிரஷா.
@Pushpa,
மிக்க நன்றி புஷ்பா. உங்களுக்கும் 2011 இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
@RVS,
சரியாச் சொன்னீங்க. பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.
மிக அருமையான பதிவு. இன்னும் இருக்கின்ற பொன்மொழிகளையும் சிரமம் பாராது தொடர்பதிவுகளாகப் போடுவீர்களேயாயின் என்னைப் போன்ற பலர் பயனடைவோம். தணிகாசலம். மலேசியா
பாடல்களைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கு வழி சொல்லுங்களேன். அன்புடன் தணிகாசலம். மலேசியா
@Iam in Internet,
பின்னொரு பதிவில் அவசியம் கோயிலில் பார்த்த பொன்மொழிகளை பதிவிடுகிறேன்.
http://www.youtube.com/user/rmsundaram1948#g/c/220D5447134BCCC3
மேலே இருக்கும் யூட்யூப் லிங்கிற்கு சென்று வீரமணி அவர்கள் பாடிய ஐயப்பன் பாடல்களை கேட்கவும் பதிவிறக்கவும் செய்யலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
மிகவும் அழகான பதிவு, நன்றி . புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி விக்கி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அருமையான பாடல்கள், அம்மா..... பகிர்வுக்கு நன்றி. இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
//இத்திருக்கோயிலில் சுத்தம் என்னும் சுபிட்ச மொழியும், மௌனம் என்னும் தெய்வீக மொழியும் மட்டுமே பேசப்படுகிறது.//
இந்த மாதிரி கோவில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் இந்த காலக் கட்டத்தில். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
பொன்மொழிகள் பகிர்வுக்கும் நல்ல பாடல்கள் பகிர்வுக்கும் மிகவும் நன்றி புவனேஸ்வரி.
@Chitra,
நன்றி சித்ரா. உங்களுக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@கோமதி அரசு,
கோயிலை அருமையாக பராமரிக்கிறார்கள் கோமதியம்மா. மிக்க நன்றி.
கோவில் பற்றிய தகவலுடன், அருமையான, பொருத்தமான பாடல்களும்!நன்றி
பதிவை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி சென்னை பித்தன் அவர்களே.
பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்
மிக்க நன்றி ராம்ஜி.
@ sivamjothi28...
தகவல்களுக்கு மிக்க நன்றி.
Post a Comment