Thursday, December 23, 2010


அவல் பர்ஃபி

தேவையான பொருட்கள்:
அவல் : 250 கிராம்
சர்க்கரை : 400 கிராம்
முந்திரி பருப்பு : 7
நிலக்கடலை : ஒரு குழிக் கரண்டி
நெய் : 100 கிராம்

செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில் அவலை லேசாக வறுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பையும், தோல் நீக்கிய நிலக்கடலையையும் வறுத்து வைத்துக் கொள்ளவும். இவற்றை தனித் தனியே மிக்ஸியில் கரகரவென்று அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு, சர்க்கரை நன்றாகக் கரையும் வரை காய்ச்சவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள அவலை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறவும்.

அவல் பாதி வேக்காடு வந்ததும் பொடித்து வைத்துள்ள முந்திரிப் பருப்பையும், நிலக் கடலையையும் கலந்து சேர்த்துக் கிளறவும். இவ்வாறு கிளறும்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு பாத்திரத்தில் ஒட்டாத வண்ணம் கிளறிக்கொண்டே இருக்கவும். இந்தக் கலவை முக்கால் பதம் வெந்ததும், ஒரு தட்டில் நெய் தடவி, அவல் கலவையை எடுத்துக் கொட்டவும்.

ஒரு கரண்டியால் மேல் புரத்தை சமன் படுத்தி, கத்தியில் நெய் தடவி அழகிய சிறுசிறு துண்டங்களாக வெட்டினால் அவல் பர்ஃபி தயார்.


அவலின் நலன்கள்:
பொதுவாக அவலை சமைத்துதான் உண்ணவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவலுடன் வெல்லம், பொட்டுக் கடலை சேர்த்து சமைக்காமலேயே உண்ணலாம். அவல் சீக்கிரத்தில் செரிக்கும் தன்மையுடைய உணவு. அரிசியில் இருந்து செய்யப் படும் உணவுப்பொருள் என்பதால் அரிசியின் நன்மைகள் இதிலும் கிடைக்கின்றன. உடல் எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் அவலை அடிக்கடி சேர்த்துக் கொள்வதனால் எந்தவித உடல் பாதிப்பும் இல்லாமல் எடை சீராகக் குறைகிறது. பச்சரிசி அவலை விட புழுங்கல் அரிசி அவல் உடலுக்கு மிகவும் நல்லது.

44 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. அவலில் பர்ஃபி இப்போதுதான் கேள்விப் படுகிறேன். அவலின் நலன்களைத் தந்திருப்பதற்கும் நன்றி புவனேஸ்வரி.

தமிழ் உதயம் said...

பர்ஃபியின் படமே அழகா இருக்கே

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி,
புதுசா தான் ட்ரை பண்ணேன் மேடம். என் அம்மாவின் ஐடியா தான். மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ் உதயம்,
மிக்க நன்றி ரமேஷ்.

கோமதி அரசு said...

அவல் கேசரி செய்து இருக்கேன். அவல் பர்ஃபி செய்தது இல்லை.

புழுங்கல் அரிசி அவல் கிடைக்கிறதா?

புதிய தகவலுக்கு நன்றி புவனேஸ்வரி.

ராமலக்ஷ்மி said...

//புதுசா தான் ட்ரை பண்ணேன்//

பாராட்டுக்கள்:)!

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு,
புழுங்கல் அரிசி அவலும் கிடைக்கிறது. பர்ஃபி பச்சரிசி அவலில் செய்தேன். செய்து பார்த்துட்டு சொல்லுங்க கோமதியம்மா. மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

//ராமலக்ஷ்மி said...
//புதுசா தான் ட்ரை பண்ணேன்//

பாராட்டுக்கள்:)!
//

மிக்க நன்றி மேடம்.

R. Gopi said...

பர்பி ட்ரை பண்ணிட வேண்டியதுதான்:)

புவனேஸ்வரி ராமநாதன் said...

பாதாம் கீருக்கு அப்புறம் அவல் பர்ஃபியா? ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. மிக்க நன்றி கோபி.

Pushpa said...

Yummy aval burfi,looks lovely,happy holidays.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி புஷ்பா. Happy Holidays.

அப்பாதுரை said...

ட்ரை பண்ணிட வேண்டியது தான். புதுசு புதுசா நிறைய சொல்றீங்க.

பளபளனு சரிகை போட்டு ஸ்வீட் ஸ்டால்ல பர்பி விக்கறாங்களே - அந்த சரிகை எங்கே கிடைக்கும் தெரிஞ்சா சொல்லுங்களேன்?

புவனேஸ்வரி ராமநாதன் said...

அவசியம் ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. சரிகை பற்றி தெரியலை அப்பாதுரை சார். தெரிஞ்சா நிச்சயம் சொல்றேன். மிக்க நன்றி.

R.Gopi said...

பர்ஃபி பார்க்கவே ரொம்ப நன்னா இருக்கு...

கொஞ்சம் கிடைச்சா, டேஸ்ட் பண்ணிடலாம்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி கோபி சார். இந்த பர்ஃபி செய்வது ரொம்ப ஈஸி தான்.

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

புவனேஸ்வரி ராமநாதன் said...

விருதுக்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

அருமை.புவனா.ஈசியாக செய்து விடலாம் போல.

ஸாதிகா said...

சகோதரி,இப்பொழுதுதான் உங்கள் வலைப்பூ காணக்கிடைத்தது.அருமையான குறிப்புகளை அள்ளி வழங்குகின்றிர்கள்.இந்த அவல் பர்பி வித்தியாசமாக உள்ளது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@asiya omar,
ஆமாம், ரொம்ப ஈஸியா செஞ்சிடலாம். மிக்க நன்றி ஆசியாம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ஸாதிகா,
ரொம்ப சந்தோஷம் சகோதரி. அவல் பர்ஃபி செய்து பாருங்க. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி ஆசியாம்மா.

Kanchana Radhakrishnan said...

அவலில் பர்ஃபி இப்போதுதான் கேள்விப் படுகிறேன். நன்றி புவனேஸ்வரி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி காஞ்சனா.

Reva said...

migavum arumai...ungal kuripukkalum ezhuthukalum...manathai mayakkuthu.
Reva

Aathira mullai said...

இனிய நட்பை அறிமுகப்படுத்திய 2010 க்கு நன்றி.

இந்த இனிமை தொடர இறையருளை வேண்டி புத்தாண்டில் தங்கள் மனம் போல எல்லா நலமும் குவியவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புவனேஷ்வரி ராமநாதன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Reva,
ரொம்ப சந்தோஷம் ரேவதி. வருகைக்கு மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ஆதிரா,

//இனிய நட்பை அறிமுகப்படுத்திய 2010 க்கு நன்றி.//
நீங்க சொன்னதே தான் எனக்கும்.

மிக்க நன்றி ஆதிரா. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் புவனேஸ்வரி.

அப்பாதுரை said...

சொல்ல மறந்துட்டேன்... அவல் பர்பி செய்தேன்.. சூபர் ஹிட்.. கொஞ்சம் சவுக்குனு வந்துடுச்சு, பட் கேக்னு சொல்லி பத்தே நிமிசத்துல காலி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

சரிகை பத்திக் கேட்டேன்... உடம்புக்கு ரொம்பக் கெடுதல்.. ban பண்ணியிருக்காங்களாமே?

Vikis Kitchen said...

Wishing you and family a Happy and prosperous New year dear.

Aathira mullai said...

வாழ்த்து சொல்லும் போது ஸ்வீட்டெல்லாம் கொடுத்தீங்களா.. சாப்ட சந்தோஷத்தில அவல் பர்பியைப் பற்றி ஒன்றும் கருத்து சொல்லாம போயிட்டேன். செய்து பார்க்கத் தூண்டிட்டீங்க.. இப்ப அவல் வாங்க அனுப்பி இருக்கேன்.... அதுதானே உங்க பதிவோட வெற்றி.

தோழி said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

மாதேவி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி,
நன்றி மேடம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அப்பாதுரை,

கேக் மாதிரி வந்தாலும் சாப்பிடுற மாதிரி வந்ததால தான் பத்து நிமிஷத்துல காலியாச்சு. கலக்குறீங்க. ரொம்ப சந்தோஷம் சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

//சரிகை பத்திக் கேட்டேன்... உடம்புக்கு ரொம்பக் கெடுதல்.. ban பண்ணியிருக்காங்களாமே? //
ஆமாம், சொல்ல மறந்துட்டேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Viki's Kitchen,
நன்றி விக்கி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ஆதிரா,
ஆஹா.. ரொம்ப சந்தோஷம் ஆதிரா. செய்து பார்த்துட்டு அவசியம் சொல்லுங்க. உங்க கருத்துக்கு வெயிட்டிங்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தோழி,
நன்றி தோழி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மாதேவி,
நன்றி மாதேவி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

kathir said...

nandru

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி கதிர்.

Post a Comment

Related Posts with Thumbnails