Monday, December 13, 2010


நாடோடிகள்


புதிய ஊர்
புத்தம் புது மனிதர்கள்..
நாட்கள் சென்றபின்
தயக்கம் விலகி
அண்டை அயலாரிடம்
சகஜமாய் பழகி..
அண்ணன் அக்கா என்று
அனைவரும் மாற..

கறிகாய் வண்டிக்காரர்
வேலை செய்யும் பாட்டி
வீதி நாய் முதல்
காகம் வரை..
அவ்வூர் கோயில்
அங்கு வரும் தாத்தா..

போட்டுக் கொள்ளும் சட்டை
பொருத்தமாய் அமைந்த நேரம்..
அன்னியம் விலகி
அருகாமை வந்து
மகனின் ஆசிரியை
எனக்குத் தோழியாக..
பாதை சொல்லும் அளவிற்கு
ஊர் பிடித்துப் பழகி..

இதுவும் என் ஊர்தான்
என நினைத்த வேளையில்......
மாறிவிடு என்றது
மாற்றல் உத்தரவு...!!

*******

டிசம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழில் இக்கவிதை வெளியாகியுள்ளது. இதற்கு காரணமாயிருந்த தேனம்மை அக்காவிற்கும், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றிகள்.

40 comments:

தமிழ் அமுதன் said...

கவிதை அருமை...!

லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்..!

தமிழ் உதயம் said...

நன்றாக இருந்தது கவிதை.

Chitra said...

இதுவும் என் ஊர்தான்
என நினைத்த வேளையில்......
மாறிவிடு என்றது
மாற்றல் உத்தரவு...!!


....எனக்கும் அந்த நிலை வந்து இருக்கிறது. :-(
லேடீஸ் ஸ்பெஷல் இல் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்!

RVS said...

Nomadic Culture கவிதை அருமை. வாழ்த்துக்கள். ;-)

Asiya Omar said...

arumai.congrats bhuvana.

Philosophy Prabhakaran said...

// இதுவும் என் ஊர்தான்
என நினைத்த வேளையில்......
மாறிவிடு என்றது
மாற்றல் உத்தரவு...!! //

பரவாயில்லை விட்டுத்தள்ளுங்கள்... மற்றொரு புது ஊரில் மீண்டும் சில நாட்களில் சகஜமாகப் போகிறீர்கள்... ஊருக்கு ஊர் புது நண்பர்கள் கிடைத்தால் மகிழ்ச்சிதானே...

R. Gopi said...

சூப்பர் மேடம்.

குழந்தையின் கல்வி பாதிப்பது, சில சமயங்களில் கணவன், மனைவி பிரிந்திருப்பது போன்ற விஷயங்களும் உள்ளன.

நீங்கள் இதையே கருவாகக் கொண்டு ஒரு சிறுகதை எழுதலாம்.

vanathy said...

super kavithai. Congratulations.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ் அமுதன்,
மிக்க நன்றி தமிழ் அமுதன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ் உதயம்,
மிக்க நன்றி ரமேஷ்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Chitra,
மிக்க நன்றி சித்ரா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@RVS,
மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@asiya omar,
மிக்க நன்றி ஆசியாம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@philosophy prabhakaran,
நிச்சயம் மகிழ்ச்சி தான். மிக்க நன்றி பிரபாகரன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gopi Ramamoorthy,
சிறுகதை முயற்சி நல்ல ஐடியா. மிக்க நன்றி கோபி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@vanathy,
மிக்க நன்றி வானதி.

பொன் மாலை பொழுது said...

வாசிக்க அழகாய் இருந்த அனுபவம்.
நன்றி.

Madhavan Srinivasagopalan said...

// இதுவும் என் ஊர்தான்
என நினைத்த வேளையில்......
மாறிவிடு என்றது
மாற்றல் உத்தரவு...!! //

காலாண்டுக்கு கொஞ்சம் படிச்சு..
அரையாண்டுக்கு மேலும் கொஞ்சம் படிச்சு..
முழுவாண்டுக்கு முக்கால் வாசி படிச்சா..
அதுக்கப்புறம் வேற சிலபஸ்ஸாமே ?

ராமலக்ஷ்மி said...

//புதிய ஊர்
புத்தம் புது மனிதர்கள்..//

//பாதை சொல்லும் அளவிற்கு
ஊர் பிடித்துப் பழகி..//

இரண்டுக்கும் நடுவே நடப்பவற்றை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

அருமையான கவிதை.

லேடீஸ் ஸ்பெஷலில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

தேனம்மைக்கும் சொல்லுவோம் நன்றிகள்.





ரொம்ப அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கக்கு - மாணிக்கம்,
ரசித்தமைக்கு மிக்க நன்றி மாணிக்கம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Madhavan Srinivasagopalan,

//காலாண்டுக்கு கொஞ்சம் படிச்சு..
அரையாண்டுக்கு மேலும் கொஞ்சம் படிச்சு..
முழுவாண்டுக்கு முக்கால் வாசி படிச்சா..
அதுக்கப்புறம் வேற சிலபஸ்ஸாமே ?//

உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா.? பிள்ளைகளுக்கு தான் கஷ்டம். புது நட்புகள் நிறைய கிடைத்தாலும், தற்காலிகமாகவே அமையும். மிக்க நன்றி மாதவன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி,
ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி மேடம்.

Geetha6 said...

வாழ்த்துகள்

Mohan said...

கவிதை நல்லா இருக்குங்க....
வாழ்க வளமுடன்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Geetha6,
மிக்க நன்றி கீதா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Mohan,
மிக்க நன்றி மோகன்.

mamtc said...

Good one. and Congrats on getting featured .
I had tagged u in my blog, would like you to take the ball around rolling.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. நிச்சயம் தொடர முயற்சிக்கிறேன்.

Priya said...

ரொம்ப அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.....
வாழ்த்துக்கள்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி ப்ரியா.

மனோ சாமிநாதன் said...

கவிதை அருமை! இந்த நிலைமை எனக்கு இளமையில் பல சமயங்களிலும் திருமணமான புதிதிலும் ஏற்பட்டிருக்கிறது! பிரிவு ஏற்படும்போது மனம் அத்தனை வலிக்கும்!
'லேடீஸ் ஸ்பெஷலில்' வெளிவந்ததற்கு அன்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!‌

புவனேஸ்வரி ராமநாதன் said...

உண்மை தான் மனோம்மா. தங்களின் அன்பான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மாதேவி.

Vikis Kitchen said...

Congrats Madam. Beautiful kavithai....reminds me of IT people life (especially our...hi hi):)
Write more..pls.

புவனேஸ்வரி ராமநாதன் said...

கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி விக்கி.

R. Gopi said...

நான் முன்பு சொன்ன மாதிரி ஒரு சிறுகதை எழுதி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது வாசிக்கவும். நன்றி. http://ramamoorthygopi.blogspot.com/2011/01/blog-post.html

a said...

//
இதுவும் என் ஊர்தான்
என நினைத்த வேளையில்......
மாறிவிடு என்றது
மாற்றல் உத்தரவு...!!
//
ரொம்ம பிடித்த வரிகள்......

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gopi Ramamoorthy,
கதை ரொம்ப சூப்பர் கோபி. நிறைய வீடுகள்ல நடக்குறத இயல்பா சொல்லியிருக்கீங்க. சொன்ன மாதிரி செய்துட்டீங்க.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@வழிப்போக்கன் - யோகேஷ்,
கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி யோகேஷ்.

Post a Comment

Related Posts with Thumbnails