Saturday, December 11, 2010


தேனிமலை முருகன் கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேனிமலை முருகன் கோயில்.


தமிழகத்தின் சிறப்புக்கள் எண்ணிலடங்காதவை. பொக்கிஷங்களாகக் கருதப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவற்றுள் ஒன்று தான் நம்மிடையே வாழ்ந்த, இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகின்ற சித்தர்கள், அவர்களது வாழ்க்கை முறைகள். சித்தர்களை நம்மால் காண முடியாவிட்டாலும் அவர்களது இருப்பிடங்களாக திகழ்கின்ற மலைகள் நம் கண்முன்னேயே இருந்து நமக்கு பல விதங்களில் நன்மைகளை தந்து கொண்டிருக்கின்றன.

பதினெண் சித்தர் வணக்கம்:
நந்தியகத்தியர் மூலம் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர்
கந்திடைக் காடரும் போகர் புலிக்கை யீசர்
கருவூரார் கொங்கணவர் மாகாலாங்கி
சிந்தியழகண்ணரகப்பையர் பாம்பாட்டித்
தேரையரும் குதம்பைச் சட்ட சித்தர்
செந்தமிழ்ச்சீர் சித்தர் பதினெண்மர் பாதம்
சிந்தித்தே அணியாகச் சேர்ந்து வாழ்வோம்!!


திருத்தலம் அமைவிடம்:
திருச்சியில் இருந்து சுமார் 80 km தொலைவில் அமைந்துள்ளது தேனிமலை முருகன் கோயில். திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, அங்கிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் காரையூர் சாலையில் அமைந்துள்ளது தேனிமலை. புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை சென்றும் தேனிமலை செல்லலாம்.

செந்தமிழ் கடவுள் ஆறுமுகன் வேண்டி விரும்பி அருள்பாலிக்கும் மலைத் தலங்களில் வெகு முக்கியமான திருத்தலம் தேனிமலை. பொதுவாக தமிழகத்தில், பாரதத்தில் மலைகளை கடவுளரின் வடிவமாகவே நினைத்து வழிபடுவது நமது மரபு, பழக்கம். திருவண்ணாமலை, திருப்பதி என்று மலையே தெய்வமாக வழிபடுகிறோம். மலைகள் பல்வேறு தெய்வீக சூட்சுமங்களையும், தீர்க்கமுடியாத பல நோய்களை தீர்க்கும் சக்தி படைத்த மூலிகைகளையும் உள்ளடக்கியவைகளாக விளங்குகின்றன. இதன் காரணமாகவே சித்தர்கள் விரும்பி வாழும் இடங்களாக மலைகள் உள்ளன. இப்படி ஒவ்வொரு மலைத் தலத்திற்கும், சிறு பாறைகளுக்கும், சிறு குன்றுகளுக்கும், அவை தோன்றியதற்கான தெய்வீகக் காரணங்கள் பல உண்டு.


தேனிமலையின் முக்கியமான சிறப்பம்சங்களாக கருதப்படுபவை இங்குள்ள பாறைகளே. அக்காலத்தில் வாழ்ந்த யோகிகள் பலர் தம் தவ பலனால் பெரும் பாறைகளாக உருமாறியதாக சொல்லப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக விளங்கும் ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி தேவயானை சமேத ஸ்ரீ முத்துக்குமாரசுவாமியாக வீற்றிருக்கும் தலம் தேனிமலை. சித்தர்கள் நாம் அறியாத வடிவில் தவம் புரியும் அழகிய சிறிய மலைத்தலம். கந்தனின் சக்தி அளவற்று பெருக்கெடுத்து ஓடும் தலம். ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள் ஜீவாலயம் அமைந்த அதி அற்புத திருத்தலம்.


இயற்கை சுனைத் தீர்த்தம் தவழ்கின்ற இனிய தலம். பாறையிலிருந்து நீர் கசிந்து பெருக்கோடும் தலம். கங்கை, காவிரி, துங்கபத்ரா போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியத்தை தேனிமலை தீர்த்தம் நமக்குத் தருகிறது.


இந்த தேனிமலைப் பாறைகள் பவள நிறத்தில் காட்சி தருகின்றன. இந்த தேனிமலையில், பலவிதமான பாறைகள் அமைந்துள்ளன.

கொப்புப் பாறை
குடகுப் பாறை
சிரிகிரிப் பாறை
அருணோதயப் பாறை
தேவச் சந்திரப் பாறை

என்ற பெயர்களை உடைய அற்புத மூலிகை சக்திகள் நிறைந்த பாறைகள் காணப்படுகின்றன.

பச்சிலை சாறு பதியும் பாறை தேவ
எச்சிலில் தீரும் சதிகால் நோய்கள்
உச்சிலைப் பேறு விதியும் மாறும்
அச்சிலைதானே ஆறுமுகத் தேனீ!!

என்ற பாடல் மூலமாக தேனிமலை முருகப் பெருமானின் சிறப்பினையும், இங்குள்ள பாறைகளின் சிறப்பினையும் அறிய முடிகிறது.



இந்த தேனிமலையில் அமைந்துள்ள ஒவ்வொரு பாறைக்கும் ஆறு விதமான குண நலன்கள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் கொப்புப் பாறை குடம் போன்ற அமைப்புடனும், காற்று, வெய்யில், மழை போன்றவற்றிலிருந்து காக்கும் வண்ணம் நிழல் தரும் வகையிலும், உட்கார்ந்து இளைப்பாற நாற்காலி போன்ற அமைப்புடனும், மூலிகைப் நீர் சுரக்கும் பாறையாகவும், எனப் பல சிறப்பம்சங்களுடன் காணப்படுகிறது. இந்தப் பாறையின் உள்ளே நீரோட்டம் உள்ளதாக சொல்கிறார்கள். நமது உடம்பில் காணப்படும் நரம்புகள் போல இந்தப் பாறையில் பல்வேறு கோடுகள் நரம்புகளைப் போல காணப்படுகின்றன. இவ்வாறாக இந்தப் பாறையில் இருந்து வரும் நீருக்கு பிருகு நீர் எனப் பெயர் உண்டு.


இந்தப் பிருகு நீர் பல மருத்துவ குணங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்தப் பாறையில் உள்ள மூலிகை, தண்ணீர், மணல், காற்று, அக்னி, ஒளி என எல்லாவற்றையும் கலந்த தண்ணீராக இது ஓடி வருவதால் பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த பாறையில் வாழும் தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேன் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்தது. ஏனென்றால் பிருகுத் தண்ணீரை குடித்து வாழும் தேனீக்கள் இவை என்பதால். இந்தத் தேனிமலையில் பூசநாங்கண்ணி என்றொரு மூலிகை உள்ளது. இந்த மூலிகைச் செடியில் பட்டுத் தெளிக்கும் ஒரு துளி தண்ணீரில் கூட மருத்துவ குணங்கள் உள்ளன. அத்தனை சக்தி வாய்ந்த மூலிகை இது.

இங்குள்ள சிரிகிரி பாறை சூரியன், சந்திரன் போன்ற கிரகங்களில் இருந்து வரும் ஒளிக் கதிர்களை பூமியில் வாழும் ஜீவராசிகள் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு மாற்றிக் கொடுக்கும் தன்மை உடைய பாறை. முருகனைக் காண அந்த உச்சி வேளையில் வெறும் காலிலேயே, அந்த கருங்கற் பாறைகளில் ஏறிச் செல்ல எங்களால் முடிந்தது எவ்வாறு என்பது இப்போது புரிகிறது. இத்தகைய சிரிகிரிப் பாறைகளே இமய மலை அடிவாரத்தில் கிடைக்கப்பெறும் சாளக்ராமக் கற்களாக கண்டகி நதிப் படுகையில் கிடைப்பதாகச் சொல்லப் படுகிறது. இது போன்ற சிரிகிரிப் பாறை தரிசனங்களை தேனிமலை தவிர, திருவண்ணாமலை, இமயமலை, பர்வதமலை போன்ற மலைகளிலும் காண முடியும். மேலும், திருக்கழுக்குன்றம், பழனி, சங்கர மலை, திருப்போரூர் பிரணவ மலையிலும் காணலாம்.

திருவண்ணாமலையைப் போலவே தேனிமலையினைச் சுற்றிலும் பல்வேறு விதமான மலைகளின் தரிசனங்களைக் காணலாம். இங்குள்ள அருணோதயப் பாறையில் மலரும் ஒரு விதமான மூலிகையைக் கொண்டு கண் நோய்களை குணப்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

திருவண்ணாமலையை கிரிவலம் வருவது போல இந்த மலையையும் பலர் சுற்றிவந்து நல்ல பலன்களைப் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாத கார்த்திகை தினம், விசாகம், பரணி, அஸ்வினி போன்ற தினங்களிலும், பௌர்ணமி, செவ்வாய்க்கிழமை, தினமும் வருகின்ற செவ்வாய் ஹோரை நேரங்கள் என, கிரிவலம் வருவதற்கான நேரங்களில், நாட்களில் சுற்றிவர அளவிடற்கரிய நலன்களைப் பெறமுடியும் என்பது ஐதீகம்.


இந்த மலையை சுற்றிவரும் கிரிவலப் பாதையின் தூரம் ஏறக்குறைய 2 km. இத்திருக்கோயில் முருகனுடைய சக்தி நம்மை கவசம் போல் காத்திடும் என்பதில் ஐயமில்லை. நாம் அனைவரும் வெளியில் சென்று விட்டு எந்த வித இடையூறும் இல்லாமல் வீடு திரும்ப கந்தனின் மந்திரத்தை 18 முறை சொல்ல வேண்டும் என இக்கோயிலில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் சொன்ன மந்திரம் இதோ:
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!!
சுற்றி வந்து எம்மைக் காக்கும்
சுப்பிரமணிய வேல் வேல்!!!


தேனிமலை ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள் இங்கு வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த சித்தர் பெருமான். இந்தத் தேனிமலையில் காலணிகள் இல்லாமல் மேலே ஏறிச் செல்கையில் இங்குள்ள பாறைகளில் உட்புறம் படர்ந்து காணப்படும் தேவ நீரோட்டம் பாதங்களின் ரேகைகள் வழியாக நம் உடலில் சென்று சேர்கின்றன.

பூமியின் உள்ளும் புறமும் நிறைந்துள்ள சூட்சுமங்களை,
தீர்த்தங்கள் (நீர்)
பாறைகள் (நிலம்)
வில்வ மரம், அரச மரம், ஆல மரம் போன்ற வற்றில் உராய்ந்து வரும் (காற்று)
சூரியன் சந்திரன் நட்சத்திரங்களில் இருந்து வரும் வெளிச்சம் (நெருப்பு)
மலைப் பாறைகளின் உச்சிப் பகுதி (ஆகாயம்)

என பஞ்ச பூதங்களின் சக்திகளை ஒருங்கிணைத்து ஜீவ ராசிகளுக்குத் தரும் உன்னதப் பணிகளையே சித்தர்கள் செய்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இது போன்ற திருக்கோயில்களுக்குச் செல்லும் போது இது போன்ற அனுபவம் நமக்குக் கிடைக்கும்.


தேனிமலையை கிரிவலம் வந்து மலையேறி ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட்டு பின்னர், ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகளுடைய ஜீவ சமாதியில் அடிப் பிரதட்சணம் செய்து, அவரது ஆசிகளை மனதாரப் பெற வேண்டும். பின்னர் அன்னதானம் செய்வது சிறப்பு. ஒரே நேரத்தில் தெய்வ தரிசனப் புண்ணியம், அன்னதானம் செய்த புண்ணியம் என நம் மனம் நிறையும். அன்னத்தால் பலரது வயிறும் நிறையும்.

*******

முருகனை நினை மனமே... (இளையராஜா)


39 comments:

RVS said...

பொன்னமராவதி போயிருக்கேன். இந்த முருகன் கோயிலுக்கு போனதில்லை. நல்ல தகவல். நன்றி ;-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.

தமிழ் அமுதன் said...

//தேனிமலை முருகன் கோயில்//

இப்போதுதான் கேள்வி படுகிறேன்..!பதிவிற்கு நன்றி..! படங்கள் அழகு..! அருமை..!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி தமிழ் அமுதன்.

Chitra said...

படங்களும் தகவல்களும் பாடலும் - அருமை. பகிர்ந்தமைக்கு நன்றிங்க, மேடம்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி சித்ரா.

Pushpa said...

Looks so beautiful and divine,thanks for sharing.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆமாம், மிகவும் அழகான திருத்தலம். மிக்க நன்றி புஷ்பா.

ராமலக்ஷ்மி said...

அழகான சூழலில் அமைந்த கோவில். அரிய தகவல்கள், அருமையான படங்கள். ‘முருகனை நினை மனமே’ எனப் பாடலையும் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி புவனேஸ்வரி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ராஜா குரலில் மனதை மயக்கும் பாடல். மிக்க நன்றி மேடம்.

Menaga Sathia said...

thxs for sharing!!

Aathira mullai said...

என்ன அருமையான பதிவு.. படங்களும் எழுத்தும் ஒவ்வொன்றும் அங்கே சென்று பார்த்தது போல இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் என் தந்தையின் ஊர்.. சிறுவயதில் இந்த மலையைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.ஆனால் பார்த்தது இல்லை. இப்போது பார்த்தது போல இருக்கிறது.. பகிர்வுக்கு நன்றி புவனேஷ்வரி ராமநாதன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@S.Menaga,
மிக்க நன்றி மேனகா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ஆதிரா,
புதுகோட்டையைச் சுற்றித்தான் எத்தனை அழகான மலைக்கோயில்களும் சிற்பக்கோயில்களும் உள்ளன. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆதிரா.

Anonymous said...

Please save this rock mountain from granite robbers..

Ms.Chitchat said...

Superb narration and thanks for sharing,would certainly plan to visit during my next visit to India.

கோமதி அரசு said...

புதிய கோவிலாக உள்ளது.விராலி மலை பக்கம் என்கிறீர்கள் பார்த்து முருகன் அருள் பெற்று விட வேண்டியது தான்.
சஷ்டியில் முருகன் கோவில் பற்றிய புதிய செய்தி தெரிந்துக் கொண்டேன் நன்றி புவனேஸ்வரி.

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக என்ற வரி வருகிறதே!
சிரகிரி மலைப் பற்றிய விளக்கம் அருமை.
இளைய ராஜா பாடல் அருமை.

மாதேவி said...

"தேனிமலை முருகன் கோயில்"
சித்தர் பாறைகள்,மூலிகை தீர்த்தம்,கிரிவலம் என மிகவும் விரிவாக படங்களுடன் தர்சித்தோம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Ms.Chitchat,
அவசியம் சென்று பாருங்கள். மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு,
சரியாக சஷ்டியன்று அமைந்துவிட்டது. அதையும் சரியாக கவனித்து சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி கோமதியம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மாதேவி,
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி மாதேவி.

தமிழ்க்காதலன் said...

வணக்கம் புவனேஸ்வரி. உங்களின் அரிய புகைப்படங்கள் அருமை. நேர்த்தியாக கட்டுரை எழுதி உள்ளீர்கள் . சித்தர்கள் பாடல் முத்தாய்ப்பு. பாராட்டுக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி தமிழ்க் காதலன்.

விஜய் said...

தகவல்களும் புகைப்படங்களும் எப்பொழுதும்போல் அருமை

இளையராஜாவின் இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

Kanchana Radhakrishnan said...

அருமையான பதிவு.புதிய கோவிலாக உள்ளது.
பகிர்வுக்கு நன்றி புவனேஷ்வரி ராமநாதன்.

Unknown said...

good post!

thanks for sharing.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Kanchana Radhakrishnan,
மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@valarmathi,
மிக்க நன்றி வளர்மதி.

R. Gopi said...

எங்கள் குலதெய்வம் குமரமலையில் இருக்கும் பாலமுருகன். புதுக்கோட்டையில் இருந்து ரொம்பப் பக்கம்.

இந்தக் கோவில் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. நானும் உங்களை மாதிரி ஒரு பயணக் கட்டுரையாவது எழுத வேண்டும் என்று பார்க்கிறேன். முடிவதில்லை:(

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப பெரிய வார்த்தை சொல்லியிருக்கீங்க. உங்கள மாதிரி சரளமா சிறுகதை எழுதனும்னு எனக்கு ஆசை. குமரமலை நிச்சயம் சென்று பார்க்கணும். மிக்க நன்றி கோபி.

பால கணேஷ் said...

திருச்சிப் பக்கம் அடிக்கடி போவேன். இந்தத் தலம் பற்றித் தெரியாது. விரைவில் சென்று தரிசிக்கிறேன். குமரக் கடவுள் அருள்மழை பொழியும் திருத்தலத்தை எனக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு எல்லா நலன்களையும் வேலவன் அருளட்டும். நன்றி!

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ். விரைவில் தேனிமலை சென்று முருகன் அருள் பெற வாழ்த்துக்கள்.

Unknown said...

தேனிமலையிலிருந்து 5km தொலைவில் எங்கள் ஊர் உள்ளது. நானும் எனது நண்பரும் விடுமுறை நாட்களில் தேனிமலையையும் அதனை சுற்றியுள்ள மலைகளையும் ஆராய்வது எங்களின் பொழுதுபோக்கு.
ஆனால் நாங்கள் அறிந்ததைவிட அதிகமான செய்திகள் இங்கு உள்ளன! பதிவுக்கு நன்றி...

புவனேஸ்வரி ராமநாதன் said...

தேனிமலையிலும் அதனைச் சுற்றியும் உள்ள பகுதிகளில் நிச்சயம் ஏதோ ஒரு
தெய்வீக சக்தி உள்ளது என்பதை நாங்கள் அங்கு வந்து முருகப் பெருமானை தரிசித்தபோது
அனுபவபூர்வமாக உணர்ந்தோம். தங்களது வருகைக்கு மிக்க நன்றி அழகு சுப்ரமணி.

பிரியா said...

ரொம்ப நல்லாருக்கு

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி பிரியா.

Unknown said...

arasamalaikku arukil ullathu thenimalai.

tryalphaa said...

அந்த கருணை கடவுளின் உறை விடங்களை அனைவரும் அறியும் பொருட்டு தங்கள் செய்யும் இந்த அருட் தொண்டுக்கு அந்த குமரக் கடவுள் நிச்ச்யம் மனம் குளிர்வான் ! வாழ்த்துக்கள் !

Post a Comment

Related Posts with Thumbnails