Thursday, December 9, 2010


நீயாய் இரு (சிறுகதை)

மதியம் 1 மணி. ரம்யா அவசரம் அவசரமாக சமைத்துக் கொண்டிருந்தாள். எதைப் பார்த்தாலும் எரிச்சலாக வந்தது அவளுக்கு. அடிக்கடி வரும் கழுத்து வலி, அதற்குப் போட்டுக் கொள்ளும் மாத்திரை, மிகவும் சோர்வாக இருந்தது ரம்யாவிற்கு. தனியாக புலம்பிக் கொண்டே ஒவ்வொரு வேலையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதியமானால் பக்கத்து வீட்டுக் குழந்தை, அத்தை என்று கொஞ்சிக்கொண்டு இவள் வீட்டிற்கு வந்து விடுவது வாடிக்கை. ரம்யா ஊட்டிவிட்டால் தான் ஒழுங்காய் சாப்பிடும். பாப்பாவிற்கு சோறு ஊட்டிக் கொண்டே தன் சமையல் வேலையை முடித்தாள் ரம்யா. குட்டிப்பாப்பாவும் அவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

ஃபோன் அடிக்கும் சத்தம் கேட்டு வேகமாக சென்று ஃபோனை எடுத்தாள். மறுமுனையில் அவளது கணவன் ரவி.ஒரு பெரிய கம்பெனியில் நல்ல பொறுப்பில் இருப்பவர்.

"என்ன சாப்பாடு ரெடியா வரலாமா?"
"ரெடியா இருக்குங்க."
"அப்புறம் இன்னக்கி சாயங்காலம் நம்ம வீட்டுக்கு, என் கூட வேலை செய்யற லேடி ஒருத்தவங்களை அழைச்சுட்டு வர்றேன், டெல்லிலேர்ந்து ட்ரெயினிங்காக எங்க ஆபீசுக்கு வந்துருக்காங்க. அவங்க வெரி நைஸ் லேடி. நல்ல கிராண்டா என்ன டிபன் பண்றதுன்னு இப்பவே யோசனை பண்ணி ரெடி பண்ணி வச்சுக்க.'' வார்த்தைகளில் நெய் தடவிய ஆர்டர் போட்டான் ரவி.
"ஆமாங்க, இந்த ஒலகத்துல என்னைத் தவிர மத்த லேடீஸ் எல்லாருமே ஒங்களுக்கு நைஸ் தான்" என்றாள் ரம்யா சற்று கோபமாக. மறு முனையில் ஃபோன் கட்டாகி பல நொடிகள் ஆகியிருந்தது.


ரவி மிகவும் பரோபகாரி. விருந்தோம்பலில் மன்னன். ரம்யாவும் வீட்டிற்கு வருபவர்களிடம் அன்பாக, ஆசையாக நடந்து கொள்பவள் தான். வாராவாரம் வெளியூர்களில் இருந்து தன் கம்பெனி வேலையாக வரும் நண்பர்களை ஒரு வேளை தன் வீட்டிற்கு சாப்பிட அழைத்து வந்து விட வேண்டும் ரவிக்கு. ரம்யாவும் தன் கணவன் விருப்பம் போல் வந்தவர்களுக்கு வித விதமாக சாப்பாடு செய்து போடுவாள். வரும் நண்பர்களில் பலருக்கு ரம்யாவின் சமையலும் விருந்தோம்பலும் மிகவும் பிடித்துப்போய் விடும். ஒரு சிலர் மட்டும் சாப்பிட்டு விட்டு பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, காபியில் உப்பு பத்தவில்லை என்பது போல் வேண்டுமென்றே தனது மேதாவித் தனத்தை காட்டுவார்கள். அந்த ஒரு சிலர் மட்டுமே ரம்யாவின் நினைவுகளில் இப்பொழுது வந்தனர். ஏன்தான் இவர்களெல்லாம் வீட்டிற்கு வருகிறார்கள் என்றிருந்தது ரம்யாவிற்கு. வீட்டு வேலைப் பளுவும், உடல் சோர்வும் சேர்ந்து கொண்டு அவளது இயல்புக்கு நேர்மாறாக சிந்திக்க வைத்தது.

*******

ரவி மதியம் வந்து சாப்பிட்டுவிட்டு திரும்ப ஆபீஸ் சென்றதும் பரபரவென்று எல்லாவற்றையும் ஒண்ட ஒதுங்க வைத்து வீட்டை பளிச்சென்று மாற்றினாள். அதற்குள் ஸ்கூலுக்கு சென்ற செல்ல மகன் கோகுல் வீடு வந்தான்.

"தம்பி, யாரோ கெஸ்ட் சாயங்காலம் நம்ம வீட்டுக்கு வராங்களாம். ஒழுங்கா இப்பவே ஹோம் ஒர்க்லாம் முடிச்சுடு. அவங்க வந்துருக்கப்ப ஒண்ணுல ரெண்டு போகுமா, நாலுல பத்தொம்போது போகுமான்னு கேட்டுகிட்டு இருந்தேன்னா கோவம் தலைக்கேரிடும் எனக்கு."

"ஏம்மா கோவத்த தலைக்கு ஏத்த விடற, கால்ல போட்டு மிதிச்சுடு", புத்தி சொன்னான் ஏழாவது அறிவுடன் பிறந்த சீமந்த புத்திரன்.

மறுபடியும் ஃபோன், அதே கலிகாலக் கர்ணன்தான் ஃபோனில்.
"டிபன் சீக்கிரம் ரெடி பண்ணு."
"சரிங்க."
"ஒன்னு தெரியுமா, அந்த அம்மா டெல்லி, அவங்க வீட்டுக்காரரு தமிழ்."
"இதச் சொல்லத்தான் ஃபோன் பண்ணிங்களா?"
"அதில்ல, அவங்க நார்த்லையே இருக்கறதுனால இங்க கெடைக்கிற மசாலாவெல்லாம் அந்த அம்மாவோட வீட்டுக்காரர் வாங்கிட்டு வரச்சொன்னாராம். நான் அவங்களை கூட்டிகிட்டு கடைக்குபோய் எல்லாம் வாங்கிட்டு வர்றதுக்குள்ள, நீ சாப்பாடெல்லாம் ரெடி பண்ணி வைக்கணும்", பதில் எதிர்பாராமல் ஃபோன் கட்டானது.

"இந்த மாதர் சங்கத்துல பொதுவா பெண்களைத்தான் தலைவியா செலக்ட் பண்ணுவாங்க. பேசாம இவர எல்லா மாதர்களுக்கும் தலைவரா தேர்ந்தெடுத்துட்டா உலக பெண்கள் எல்லாம் சுபிட்சமா இருப்பாங்க" என்று மனதில் நினைத்துக் கொண்டே ஃபோனை வைத்தாள் ரம்யா.

மணி 4 ஆனது. அரைத்து வைத்திருந்த இட்லி மாவும் சரியாகிவிட்டது. என்ன டிபன் செய்வதென்று யோசித்தாள் ரம்யா. வட நாட்டிலிருந்து வந்திருக்கும் பெண்ணிற்கு காரசாரமாக அடை செஞ்சு கொடுப்போம் என்று முடிவு செய்து அரிசி பருப்பையெல்லாம் ஊற வைத்தாள்.

மகன் கோகுலுக்கு பாடம் சொல்லிக் கொண்டே ஊறிய அரிசி பருப்பை அரைத்து தேங்காய், வெங்காயம் கலந்து ஃபிரிட்ஜில் தூக்கி வைத்தாள். கோகுலுக்கு புது டிரஸ் மாற்றிவிட்டு, தானும் உடை மாற்றி, விருந்தினர் வருகைக்காக இருவரும் காத்திருந்தார்கள்.

*******

சரியாக 7 மணிக்கு கணவன் ரவியும், பெண் தோழியும் வீட்டிற்கு வந்தார்கள். "இவங்கதான் மிஸ்ஸஸ் மேதா ஸ்ரீவத்சன்." அறிமுகம் செய்து வைத்தான் ரவி. கை கூப்பி வணக்கம் சொல்லி வரவேற்றாள் ரம்யா.
"நமஸ்தே அண்ணி" என்றாள் மேதா. அண்ணி என்று மேதா தன்னை அழைத்தது ரம்யாவை நெகிழச் செய்தது. கோகுலையும் கொஞ்சினாள். ரம்யாவும், மேதாவும் ஹிந்தியில் உரையாடிக் கொண்டார்கள். இருவரும் ரொம்ப நாள் பழகிய தோழிகள் போல பேசிக் கொண்டது ரவிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

"உக்காருங்க, தண்ணி குடிக்கிறீங்களா மேதா?"
"நானே எடுத்துக்கறேன் அண்ணி, நீங்க இங்க என்கூட வந்து உக்காருங்க நாம பேசிட்டு இருக்கலாம்."
"இரும்மா உங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வந்து உங்களுடன் பேசிட்டு இருக்கேன்."
"நானும் வரேண்ணி கிச்சனுக்கு."
கூடவே வந்தாள். தன்னுடன் இத்தனை சகஜமாக மேதா பழகுவாள் என்று
ரம்யா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தன் கையால் செய்திருந்த பலகாரம் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அவளுக்கு சாப்பிடக் கொடுத்தாள்.
"ரொம்ப நல்லாயிருக்கு அண்ணி. எனக்கு சமைக்கத் தெரியாது. என் வீட்டில் எங்க வீட்டுக்காரர் தான் சமைப்பார். நான் டெல்லி பொண்ணு. என் கணவர் தமிழ்நாடு. படிக்கிற காலத்துல ரெண்டு பேருக்கும் புடிச்சு போயி வீட்டுல பெரியவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிகிட்டோம். என் கணவருக்கு நல்ல காரசாரமா சாப்பிட ரொம்ப புடிக்கும் அண்ணி. அதனாலதான் சாரோட, கடைக்குப் போய் சவுத் இந்தியன் டேஸ்ட் மிளகாய் தூள், சீரகப் பொடி, இன்னும் நெறையா வாங்கிட்டு வந்தோம். இந்த பொடி எல்லாத்தையும் நானே செய்யனும்னு ஆச தான். என்ன பண்றது, செய்யத் தெரியாதே" என்று வாங்கிய அனைத்தையும் காண்பித்தாள்.

"இப்ப உனக்கு பொடி எப்படி செய்யனும்னு தான தெரியனும்? நானே கத்துத்தர்றேன். அப்படியே சில பொடிகளையும் செஞ்சு தர்றேன்".
"ஐயோ வேண்டாம் அண்ணி, உங்களுக்கு ஏன் சிரமம்?"
"இதுல எனக்கு ஒன்னும் சிரமம் இல்லம்மா. இது எனக்கு கொஞ்ச நேரத்து வேலை" என்று சொல்லிவிட்டு மேதாவிற்கு கற்றுக் கொடுத்துகொண்டே எல்லா பொடிகளையும் வறுத்து அரைத்து டப்பாவில் போட்டுக் கொடுத்தாள்.

தன் அம்மாவுடன் கிச்சனில் அரட்டை அடித்த நாட்களின் நினைவுகள் மேதாவிற்கு வர, கண்களில் நீர் கோர்த்து நின்றது.

"உங்க ஊருக்கு எடுத்துட்டு போய் நல்லா சாப்பிடுங்க." என்றாள் ரம்யா மன நிறைவுடன்.

"அண்ணி, என் கணவர் இப்படி நீங்க செய்து கொடுத்ததையெல்லாம் பார்த்தா ரொம்ப சந்தோஷப் படுவார்."
அவர் கூட நீங்க ரெண்டு வார்த்தை ஃபோன்ல பேசணும் என்றதும் சற்று தயங்கினாள் ரம்யா. பரவாயில்லை அண்ணி என்று தன் கணவருடன் ரம்யாவைப் பேச வைத்தாள்.

மணியாகிவிட்டது, அப்புறம் விமானம் கிளம்பும் நேரம் வந்துவிடும். மேதாவிற்கு சாப்பாடு செய்து கொடு என்று ரவி சொல்ல, தோசைக் கல்லைப் போட்டு நன்றாக மொறு மொறுவென்று நிறைய நெய் ஊற்றி மூவருக்கும் அடை சுட்டுப்போட்டாள் ரம்யா. ரொம்ப நல்லாருக்கு அண்ணி என்று தண்ணீர் குடித்துக் கொண்டே காரமான அடையை ஒரு வெட்டு வெட்டினாள் மேதா.அவள் ஆசையாக சாப்பிடுவதைப் பார்த்ததுமே ரம்யாவிற்கு வயிறு நிரம்பியது. மேதா கேட்ட இன்னொரு காபியைக் கொடுத்துவிட்டு, ஒரு கட்டைப்பையில் அவள் ஊருக்கு எடுத்துப் போக வேண்டிய எல்லா சாமான்களையும் கட்டி வைத்தார்கள் கணவனும் மனைவியும். கோகுலும் உதவி செய்தான்.

"சரி அண்ணி நான் கிளம்பறேன். எங்க அம்மா வீட்டுக்கு வந்துட்டு போறது போல இருக்கு எனக்கு. கெளம்பவே மனசில்ல. நீங்களும் டெல்லி வந்தால் எங்க வீட்டுல வந்து தங்குங்க அண்ணி" என்றாள் கையைப் பிடித்துக் கொண்டே.
"கட்டாயம் நாங்க வர்றோம். நீ உன் கணவரோட இங்க வந்து ஒரு வாரம் தங்கிட்டு போ" என்றாள் ரம்யா.

"அண்ணி நீங்களும் கோகுலும் கூட ஏர்போர்ட் வரைக்கும் என்கூட வாங்களேன்" என்றாள் மேதா. சரியென்று எல்லோரும் கிளம்பினார்கள். ஃபிரிட்ஜில் இருந்து பூ எடுத்து ஒரு கவரில் போட்டுக் கொண்டாள் ரம்யா. காரின் பின் சீட்டில் மேதாவும், ரம்யாவும் அமர்ந்து கொண்டனர். ஏர்போர்ட் செல்லும் வரை ரம்யாவின் கையை விடவேயில்லை மேதா. ஏர்போர்ட்டும் வந்தது. காரைவிட்டு இறங்கி எல்லா பைகளையும் எடுத்து ட்ராலியில் வைத்து ரம்யாவே தள்ளிக் கொண்டு சென்றாள்.

இரு பெண்களின் மனமும் ஒரே மன நிலையில் இருந்தது. சந்தித்த கொஞ்ச நேரத்திலேயே ஏதோ பல காலம் பழகியது போல, நீண்டநாள் பிரிந்த நண்பர்கள் பிரிவதுபோல இருந்தது இருவருக்கும். வாழ்க்கையில் நண்பர்கள் பிரிவதே மிகவும் கஷ்டமான விஷயம். வெகுநாள் கழித்து பார்த்துவிட்டு மீண்டும் பிரிவது அதைவிட கஷ்டமான விஷயம். இந்த உணர்வுகளெல்லாம் சந்தித்து சிறிது நேரமே ஆகிய இருவருக்கும் ஏற்பட்டது மிகவும் விநோதமாக இருந்தது. உலகில் விநோதங்களுக்கு என்றுமே குறைவில்லை.

டிக்கட் செக் செய்யும் இடம் வரை சென்றதும், "சரி அண்ணி நான் போய்ட்டு வரேன்" என்றாள் மேதா. இருவர் கண்ணிலும் கண்ணீர் வெளியே வர காத்திருந்தது. அண்ணா போய்வர்றேன். கோகுல் குட்டி பாய் என்றாள். உடன் கூட எடுத்து வந்த பூவை மேதா தலையில் ஆசையுடன் வைத்து விட்டாள் ரம்யா. மேதா என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அனைவரின் முன்னிலையிலும் ரம்யாவை கட்டி அணைத்துக் கொண்டாள். இருவரது அன்பின் ஆழம் அவர்களுக்குள் மௌன பாஷையிலேயே பேசிக் கொண்டது. ட்ராலியை தள்ளிக் கொண்டே இவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரை கை அசைத்துக் கொண்டே சென்றாள் மேதா. ஊருக்கு போய் ஃபோன் பண்ணு என்று ஜாடையிலேயே காண்பித்தாள் ரம்யா.

திரும்ப வந்து காரில் ஏறி உட்கார்ந்தவளின் மனம் முழுக்க பாரமாக இருந்தது. "சாயங்காலம் எத்தனை அலுத்துக் கொண்டே வேலைகள் செய்தோம். நம்மோட இயல்பிலிருந்து மாறி கொஞ்ச நேரம் சலித்துக் கொண்டோமே. என்னோட கஷ்டத்த மறைச்சிக்கிட்டு அந்தப் பொண்ணுகிட்ட ஆசையா நடந்துகிட்டதுனால எப்படி ஒரு உன்னதமான ஒரு சொந்தம் நமக்குக் கிடைச்சுது" என்று எண்ணிக் கொண்டே வந்த ரம்யா, உடல் சோர்வை, மனசோட தெம்பு குறைச்சிடுச்சு. இத்தனைக்கும் காரணமான கணவனை நெகிழ்ச்சியுடன் பார்த்தாள் ரம்யா.

இனி நாம நம்ம இயல்புலேர்ந்து மாறாம எப்போதும் போல இருக்கணும் என்று எண்ணிக்கொண்ட ரம்யா, புது தெம்புடன் காரைவிட்டு இறங்கி வீட்டிற்குள் சென்றாள்.

*******

இச்சிறுகதை இம்மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாத இதழைப் படிக்க இங்கே செல்லவும்.


ஒவ்வொரு மாதமும் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வலைப்பதிவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்கள். இம்மாத இதழில் எனது சிறுகதையையும் கவிதையையும் வெளியிட்டு எனது வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். என்னை ஊக்குவித்து, எழுதத் தூண்டி, எனது படைப்புகள் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளிவர காரணமாயிருந்த தேனம்மை அக்காவிற்கு மிக்க நன்றி. லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றிகள்.

*******

43 comments:

சாந்தி மாரியப்பன் said...

கதை நல்லாருக்குங்க..

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி.

கோமதி அரசு said...

நேற்றுத் தான் படித்தேன் லேடீஸ் ஸ்பெஷ்ல் பத்திரிக்கையில்.

மிகவும் நன்றாயிருக்கு கதை.

வீட்டுக்கு வந்த விருந்தினர் நாம் சமைத்த உணவை ருசித்து உண்டாலே நாம் வேலை செய்த களைப்பு தெரியாது.

செல் விருந்து ஓம்பி வரும் விருந்து எதிர்ப் பார்த்து இருப்போம்.

அதை உணர்த்தும் கதை அருமை.

கவிதை எங்கே புவனேஸ்வரி?

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களின் அழகான கருத்துக்கு மிக்க நன்றி கோமதியம்மா. நாடோடிகள் என்ற தலைப்பிலான கவிதை 17-ம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

ராமலக்ஷ்மி said...

அழகான நடையில் அருமையான கதை. உங்களைப் பற்றிய விவரங்களை அறிய முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி:)! பயணக்கட்டுரை, சமையல், பாடல் பகிர்வு என எதைப் பதிந்தாலும் நேர்த்தியுடன் செய்யும் உங்களுக்கு லேடீஸ் ஸ்பெஷல் தந்திருக்கிறது சிறப்பான அங்கீகாரம். கவிதையையும் சீக்கிரம் பதியுங்கள்:)!

Gayathri Kumar said...

Nice story.Congrats!

Ms.Chitchat said...

Very nicely narrated story. If the guests enjoy our hospitality and recognise our efforts and love, all our fatigue diminishes and we feel rejuvenated. Congrats on being chosen by Ladies special, a beautifully written episode. Please give the 'Kavidhai' link too,will be too happy to read that.

கோமதி அரசு said...

கவிதை அருமை புவனேஸ்வரி.

எங்கள் அப்பாவுக்கும் ஊர் மாற்றல் ஆகும் வேலைதான்.

என் அம்மாவின் அம்மா(பாட்டி)இது என்ன பிழைப்பு நாடோடி பிழைப்பு என்பார்களாம்.

உங்கள் அப்பா,இப்போது உங்கள் கணவர் எல்லோருக்கும் மாற்றல் வேலை அதை குறிக்கும் கவிதை அருமை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி,
ஆகா.. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நீங்க சொல்லும்போது. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம். கவிதையையும் விரைவில் பதிகிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gayathri's Cook Spot,
மிக்க நன்றி காயத்ரி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Ms.Chitchat,
விருந்தோம்பல் பற்றி அழகா சொன்னீங்க. மிக்க நன்றி. கவிதையை விரைவில் பதிகிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு,
//கவிதை அருமை புவனேஸ்வரி.

எங்கள் அப்பாவுக்கும் ஊர் மாற்றல் ஆகும் வேலைதான்.

என் அம்மாவின் அம்மா(பாட்டி)இது என்ன பிழைப்பு நாடோடி பிழைப்பு என்பார்களாம்.

உங்கள் அப்பா,இப்போது உங்கள் கணவர் எல்லோருக்கும் மாற்றல் வேலை அதை குறிக்கும் கவிதை அருமை.//

உடனே படித்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி கோமதியம்மா. நாடோடி பிழைப்பு என்று இங்கேயும் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கேன்.

R. Gopi said...

கலக்கிட்டீங்க மேடம். ட்ரீட் வேணும்.

மாதேவி said...

அழகிய நடையில் அருமையான கதை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gopi Ramamoorthy,
மிக்க நன்றி கோபி. ட்ரீட் தான.. குடுத்துருவோம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மாதேவி,
மிக்க நன்றி.

RVS said...

நீயாய் இரு.. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு... சரியா?... நன்றாக இருந்தது..

புவனேஸ்வரி ராமநாதன் said...

அற்புதமான குறளோட சொல்லி கலக்கிட்டீங்க ஆர்.வி.எஸ். மிக்க நன்றி.

தெய்வசுகந்தி said...

நல்ல கதைங்க!!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி தெய்வசுகந்தி.

Chitra said...

அருமையான கதை பிரசுரமானதற்கு , வாழ்த்துக்கள் மேடம்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி சித்ரா.

அப்பாதுரை said...

நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Angel said...

congrats and well done .a well narratted story.

Kanchana Radhakrishnan said...

அருமை புவனேஸ்வரி.

எல் கே said...

புத்தகம் வந்தவுடன் படித்துவிட்டேன். கதை நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்

a said...

இயல்பான நடையில் அழகிய சிறுகதை........... ரசித்தேன்......

//
அவங்க வந்துருக்கப்ப ஒண்ணுல ரெண்டு போகுமா, நாலுல பத்தொம்போது போகுமான்னு கேட்டுகிட்டு இருந்தேன்னா கோவம் தலைக்கேரிடும் எனக்கு
//
எனக்கு பிடித்த வரிகள்........

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அப்பாதுரை,
மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@angelin,
மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Kanchana Radhakrishnan,
மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@LK,
மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@வழிப்போக்கன் - யோகேஷ்,
கதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி யோகேஷ்.

Unknown said...

கதை அருமை.
பிரசுரமானது நல்ல அங்கீகாரத்தை உங்களுக்கும், கதைக்கும் அளித்திருக்கிறது.

ok. Treat எங்கே...

புவனேஸ்வரி ராமநாதன் said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாரத் பாரதி. ட்ரீட் குடுத்துட்டா போச்சு.

மனோ சாமிநாதன் said...

கதை அழகு. அதைவிட அழகு அர்த்தம் பொதிந்த தலைப்பு! மிகவும் இயல்பான நடை!
இந்த சிறுகதை 'லேடீஸ் ஸ்பெஷ‌லில்' வெளி வந்ததற்கு என் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களின் அன்பான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மனோம்மா.

ALHABSHIEST said...

உறவுகளை வாசித்தலில் தான் தொட்டுக் கொள்ள முடிகிறது.தொட வைத்த தருணத்தினை வழங்கிய்மைக்கு நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி சிவா.

Asiya Omar said...

நல்ல கருத்துள்ள கதை,வாழ்த்துக்கள்.சில நேரம் எனக்கும் சலிப்பு வரும்.இந்த கதையை படித்தவுடன் நான் நானாக எப்பவும் இருக்க ஆசை,விருந்தினர்களை உபசரிப்பது எனக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களின் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி ஆசியாம்மா.

Vikis Kitchen said...

Congrats dear! Its a great achievement and I feel proud of you! என் போன்ற சாதாரண பெண்களின் மனநிலையை காட்டும் கதை. விருந்தோம்பலின் சிறப்பை அழகாக சொல்லி இருக்கீங்க. We all love to cook for those who encourages us. 99% people say that they like the food and appreciate the effort but that 1% 's comment will jeopardize the day and memory:) Very nice story line and a must to read, so that we can understand how to entertain our guests in a better way. Thanks.
உங்கள் போட்டோ பார்த்ததில் மகிழ்ச்சி. You look sweet! Write more and you are more talented dear.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு விக்கி. வேற என்ன சொல்றதுன்னு தெரியல. ரொம்ப நன்றி டியர்.

arul said...

good moral

Post a Comment

Related Posts with Thumbnails