Sunday, December 5, 2010


கதம்ப முறுக்கு

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு : 1 கப்
கோதுமை மாவு : 1 கப்
மைதா மாவு : 1 கப்
சோள மாவு : 1 கப்
பொட்டுக் கடலை மாவு : 1/2 கப்
மிளகாய் தூள் : 2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி : 1 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
நெய் : 1/2 குழி கரண்டி
நல்லெண்ணெய் : 2 ஸ்பூன்
எண்ணெய் : பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு, கோதுமை மாவு, சோள மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயப் பொடி, உப்பு, நெய், நல்லெண்ணெய் என இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக கலக்கவும். அதன்பின் தண்ணீர் கலந்து பிசையவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

எண்ணெய் சூடாவதற்கு முன்னதாகவே, தயாராக உள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக எடுத்துக் கொண்டு பின்னர், உருட்டிய மாவை உள்ளங்கையில் வைத்து நீள வாக்கில் உருட்டி இரண்டு முனைகளையும் ஒட்டி ஒரு வளையம் போல செய்து தயாராக வைத்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் போட்டு பொறியும் சத்தம் அடங்கும் வரை அடுப்பில் வைத்து எடுத்து விட்டால், மொறு மொறு கதம்ப முறுக்கு தயார்.


இது எண்ணெய் பலகாரமாக இருந்தால் கூட, எல்லா மாவும் கலந்து செய்வதால் உடம்பிற்கு மிகவும் நல்லது. இந்த மழை காலத்திற்கு அந்தி மாலை நேரத்தில் செய்து கொடுக்க பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு கை பார்ப்பார்கள் மொறு மொறு முறுக்கை.

36 comments:

Asiya Omar said...

எங்க ஊர் பக்கம் ஆந்திரா முறுக்குன்னு ஸ்வீட் ஸ்டாலில் கிடைக்கும்,பார்க்க அது போல் அசத்தலாக இருக்கு.அதில் அரிசி மாவு அதிகம் சேர்த்தது போல் இருக்கும்.

mamtc said...

pretty neat. Never knew the recipe thought love the dish

Menaga Sathia said...

nice n different murukku...

புவனேஸ்வரி ராமநாதன் said...

@asiya omar,
அதே டைப் தான். இதில் ஐந்து மாவுகள் கலந்திருக்கிறேன். மிக்க நன்றி ஆசியாம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@coolblogger,
மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@S.Menaga,
மிக்க நன்றி மேனகா.

மோகன்ஜி said...

இந்த முறை சபரிமலை யாத்திரைக்கு செல்லும் போது அன்பர்களுக்கு தின்பண்டமாய் இதைதான் செய்ய சொல்லி இருக்கேன் மேடம்! ஆந்திரா பக்கம் இதற்கு சக்கோடி என்று பெயர்.

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமான குறிப்பு! குறிப்பைப் பார்த்தால் செய்து பார்த்து விடணும் போலிருக்கிறது!
குழிக்கரண்டி என்றால் ஒரு டீஸ்பூன் என்று எடுத்துக் கொள்ள‌லாமா?

GEETHA ACHAL said...

ஆஹா...வித்தியசமாக இருக்கின்றது...அழகாக ஒரே அளவில் செய்து அசத்திட்டிங்க...

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மோகன்ஜி,
ஆஹா.. அருமை. தகவலுக்கு மிக்க நன்றி மோகன்ஜி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மனோ சாமிநாதன்,
ஒரு குழிக்கரண்டி இரண்டு டேபிள் டீஸ்பூனுக்கு சமமா இருக்கும். மிக்க நன்றி மனோம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@GEETHA ACHAL,
மிக்க நன்றி கீதா.

அப்பாதுரை said...

கேள்விப்பட்டதில்லை.. செஞ்சு பாத்துடுவோம்.

சனிக்கிழமை உங்க ரெசிபி பாத்து பால்போளி செஞ்சேன்.. நல்லா வந்ததுங்க.

புவனேஸ்வரி ராமநாதன் said...

பால் போளி நன்றாக வந்ததில் ரொம்ப சந்தோஷம். இதையும் செய்து பார்த்துட்டு சொல்லுங்க. மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பர் முறுக்குவகைகளில் எல்லா வகையான முறுக்கும் எனக்கு பிடிக்கும்

கோமதி அரசு said...

நீங்கள், மழை நேரத்தில் அந்தி மாலை பொழுதில் மொறு மொறு முறுக்கு என்று சொல்லும் போதே செய்ய ஆவலை தூண்டுகிறது.

செய்து பார்த்து விடுகிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Jaleela Kamal,
மிக்க நன்றி ஜலீலாம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு,
செய்து பார்த்துட்டு சொல்லுங்க. மிக்க நன்றி கோமதியம்மா.

a said...

அசத்துரீங்க....... உங்க பசங்க குடுத்துவச்சவங்க..........

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி யோகேஷ்.

Gayathri Kumar said...

Murukku Super!

Chitra said...

அருமையான முறுக்கு. நன்றிங்க.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gayathri's Cook Spot,
மிக்க நன்றி காயத்ரி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Chitra,
மிக்க நன்றி சித்ரா.

R. Gopi said...

super murukku

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி கோபி.

Vikis Kitchen said...

கதம்ப முறுக்கு ....ஆஹா! பெயரே அழகாக உள்ளதே ! நிறைய தானியம் சேர்த்து மொறு மொறுனு தெரியுது. சூடா காபி கூட சாப்பிட்டா ரொம்ப நல்ல இருக்கும்.

Pushpa said...

Mouthwatering and delicious murukku,thanks for sharing.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Viki's Kitchen,
ஆமாம் விக்கி, மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Pushpa,
மிக்க நன்றி புஷ்பா.

மோகன்ஜி said...

உங்கள் படைப்புகள் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளிவந்ததுக்கு பாராட்டுகள் சகோதரி!

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி சகோ.

மாதேவி said...

அசத்தலான முறுக்கு. ஆமா நீங்கள் கூறியதுபோல மழைக்கு சாப்பிட அருமை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மாதேவி.

Malar Gandhi said...

Perfect murukku - just like the way they do in the stores...superb:)

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மலர் காந்தி.

Post a Comment

Related Posts with Thumbnails