Tuesday, July 27, 2010


மன்னார்குடி கொஸ்து

பொதுவாக இட்லின்னா சாம்பார்தான். மன்னார்குடியில் யார் வீட்டிற்கு சென்றாலும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள கொஸ்துதான் செய்வார்கள். செய்வதும் சுலபம். ருசியும் அபாரமாக இருக்கும். அந்த கொஸ்து செய்வது எப்படின்னு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு : 2
வெங்காயம் : 2
தக்காளி : 5
பச்சை மிளகாய் : 3
நல்லெண்ணெய் : 2 ஸ்பூன்
கடுகு : 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு : 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு : 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் : 2 சிட்டிகை
மஞ்சள்தூள் : 2 சிட்டிகை
சாம்பார்பொடி : 2 ஸ்பூன்
இட்லி மாவு : 1 கரண்டி
உப்பு : தேவையான அளவு
கொத்தமல்லி : 2 கொத்து
கருவேப்
பிலை : 2 கொத்து

செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். அதன் மேல் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போட்டு நன்றாக வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கிய பின், 4 டம்ப்ளர் தண்ணீர் கலந்து கொதிக்கவிடவும். இவற்றுடன் பெருங்காயப்பொடி, மஞ்சள்தூள், சாம்பார்பொடி, உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பை இளந்தீயில் வைத்து வாணலியை மூடி விடவும்.

காய்கறிகள் நன்கு வெந்ததும், ஒரு கரண்டி இட்லி மாவு எடுத்து கலந்து ஒருகொதி வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். இதன் மேல் கொத்தமல்லி, கருவேப்பிலையை பொடியாக நறுக்கி கலந்து விட்டால் மன்னார்குடி கொஸ்து தயார்.


மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அழகிற்கும் ஈடில்லை, மன்னார்குடி இட்லி கொஸ்துவின் சுவைக்கும் ஈடில்லை. சுடச் சுட இட்லியுடன் மன்னார்குடிகொஸ்து தொட்டு சாப்பிட்டு அதன் ருசியில் திளையுங்கள்.

பின் குறிப்பு:
விருப்பமுள்ளவர்
கள் இவற்றுடன் கத்தரிக்காயும் சேர்த்து செய்யலாம்.

43 comments:

Unknown said...

நல்லாயிருக்குங்க. எங்கூர்ல இதயும் பொதுவா குருமான்னு சொல்லுவாங்க. பட்டை, கிராம்பும் சேத்துடுவாங்க.

சௌந்தர் said...

பெயர் வித்யாசமா இருக்கிறது

புவனேஸ்வரி ராமநாதன் said...

தகவலுக்கு நன்றி தஞ்சாவூரான்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மன்னார்குடியில் அதிகம் செய்வார்கள் என்பதால் இந்த பெயர் சௌந்தர்.

Unknown said...

நானும் தஞ்சாவூரானும் எதிரெதிர் வீடுதான்... ஊரு பரவாக்கோட்டை...

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க சந்தோஷம். நான் பிறந்தது மன்னையில் தான் செந்தில்.

Menaga Sathia said...

வித்தியாசமாகவும்,நன்றாகவும் இருக்கு..அவசரத்தில் உடனே செய்துடலாம் போல..

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆமாம் மேனகா. மிக்க நன்றி.

R.Gopi said...

புவனா அவர்களே...

நான் பொங்கலுக்கு தான் கொஸ்து காம்பினேஷன் என்று நினைத்திருந்தேன்.... இது ஒரு அதிரடி காம்பினேஷனா இருக்கும்...

இட்லிக்கு கொஸ்து நல்ல காம்பினேஷனா?? இட்லிக்கு கடப்பா என்றொரு டிஷ் கூட செய்வார்களே!!

அந்த ரெசிப்பி இருந்தா கூட போடுங்க...

புவனேஸ்வரி ராமநாதன் said...

இட்லிக்கு கொஸ்து அருமையா இருக்கும் கோபி. கடப்பா பற்றியும் அவசியம் சொல்கிறேன்.

vanathy said...

super recipe!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி வானதி.

Anonymous said...

சூப்பர்.கூடிய விரைவில் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி விஷ்ணு பிரகாஷ்.

Admin said...

சுவையாக இருக்கும் போல் தெரிகிறது. வலைப்பதிவிற்கு வருபவர்களுக்கு செய்து கொடுக்கமாட்டீர்களா?

இது எனது முதல் வருகை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

செய்து கொடுத்தால் போகிறது. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி சந்ரு.

அபி அப்பா said...

பொதுவா சிதம்பரம் கொத்சு தான் பேமஸ்ன்னு சொல்லுவாங்க. அது கத்தரிக்காய் சுட்டு செய்வது. இது புதுசா இருக்கே!

புவனேஸ்வரி ராமநாதன் said...

இதிலும் கத்திரிக்காய் சேர்க்கலாம். மன்னை சுற்றுவட்டாரத்தில் இது ஃபேமஸ்.

Mrs.Mano Saminathan said...

நன்றாகத் தெரிந்த கொத்சுதான் என்றாலும் இங்கே அதை சுவைபட பார்க்கும்போது சந்தோஷமக இருக்கிறது. ஏனென்றால் என் ஊரும் மன்னார்குடிதான்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மனோ அவர்களே. நான் பிறந்ததும் மன்னையில் தான்.

priya said...

மிகவும் அருமை புவனா !!!!!!!!!!!!!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி ப்ரியா.

Chitra said...

கொத்சு செய்து இருக்கிறேன்.... ஆனால், இட்லி மாவு கலந்து செய்வது, மன்னார்குடி ஸ்பெஷல் என்று நினைக்கிறேன்... பகிர்வுக்கு நன்றி.

RVS said...

மன்னார்குடி பேர் போட்டாலே ருசியாத்தான் இருக்கும். நம்ம ஊரு ஸ்டைலே தனி. எனக்கு சாப்பிடத்தான் தெரியும்!!!.

அன்புடன் ஆர்.வி.எஸ்.
http://mannairvs.blogspot.com

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சித்ரா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

கரெக்ட் தான் ஆர்.வி.எஸ். நன்றி.

Thangavel Manickadevar said...

புவனா, இன்றைக்கு இரவு இட்லிக்கு கொஸ்துதான். நன்றி. மன்னார்குடி எப்படி இருக்கிறது ????? நன்றாக எழுதுகின்றீர்கள். வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தங்கவேல் மாணிக்கம்,

மிக்க சந்தோஷம். மன்னார்குடி எப்போதும் போல அழகாவும் அமைதியாவும் இருக்கு. நன்றி.

Madhavan Srinivasagopalan said...

//மன்னார்குடி பேர் போட்டாலே ருசியாத்தான் இருக்கும். நம்ம ஊரு ஸ்டைலே தனி. எனக்கு சாப்பிடத்தான் தெரியும்!!!.//

Me too, hail from Mannargudi..

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க மகிழ்ச்சி. நன்றி மாதவன்.

க.கமலகண்ணன் said...

நானும் மன்னார்குடிதான் நம் நம் மண்ணின் மணம் ஆஹா அருமை உங்களின் தயாரிப்பு ஆலோசனைக்கு மிக்க நன்றி

இப்பவே நாக்கு ஊறுகிறது... நன்றிகள் பல உங்களுக்கு...

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி கமலகண்ணன்.

Anonymous said...

easy இருக்கு புவனா..
கடப்பா recipe போடுங்க.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நிச்சயம் செய்றேன் மஹா. மிக்க நன்றி.

Menaga Sathia said...

எப்படி இருக்கீங்க?? என்ன ஆச்சு...உங்களின் இந்த கொத்சுவை செய்தேன்,மிக அருமையாக இருந்தது..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

வாங்க மேனகா,
கொஸ்து செய்து பார்த்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மேனகா.
சில நாட்களாய் கணினி பழுதினால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை.
இனி தொடர்வேன் பயணத்தை. மீண்டும் தங்களுக்கு நன்றி.

Anonymous said...

akka super . easy too.

seshan/dubai

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி சேஷன் தம்பி.

geethasmbsvm6 said...

ம்ஹும், இது ஒரிஜினல் கொத்சு இல்லையே! கிட்டத்தட்ட/ கிட்டத்தட்ட என்ன, கிட்டத்தட்ட சாம்பாரே தான். கொத்சு பக்குவமே வேறு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@geethasmbsvm6....

பருப்பு இல்லாமல் சாம்பார் செய்வதில்லை. சாம்பாருக்கென்று சில பொருட்களை வறுத்து பொடி செய்து கலக்க வேண்டும். இந்த வேலை
எதுவும் கொஸ்து செய்வதற்குத் தேவையில்லை. மிகவும் சுலபமான செய்முறை. மேலும் எங்கள் ஊரில் செய்யும் கொஸ்துவிற்கு இதுதான்
பக்குவம். தங்களது வருகைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வந்து தங்களது கருத்துக்களை பரிமாறிச் செல்லுங்கள்.

geethasmbsvm6 said...

இதிலும் சாம்பார் பொடி போட்டிருக்கீங்க தானே. முழுக்க வறுத்து அரைக்கிற சாம்பார் வேறே இம்மாதிரிப் பொடி போட்ட சாம்பார் வேறே இல்லையா? தேசம் தோறும் பாஷை வேறு என்பது போல் ஊருக்கு ஊர் சமையல் முறையும் மாறும். என் மாமியார் வீடு கும்பகோணம் என்பதால் தஞ்சை ஜில்லா கொத்சு/கொஸ்து செய்முறை இதுவல்ல என்பதை அறிவேன். கொஸ்து/கொத்சு பருப்புப் போட்டும், பருப்புப் போடாமலும் செய்வார்கள். சுவை மாறுபடும். பருப்புப் போட்டால் பயத்தம்பருப்புத் தான். மற்றபடி உங்கள் விளக்கத்துக்கு நன்றி. :))))))))

புவனேஸ்வரி ராமநாதன் said...

@geethasmbsvm6....

சாம்பாருக்கும் கொஸ்துவிற்கும் வித்தியாசம் என்ன என்பதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள், ஊருக்கு ஊர் சமையல் செய்முறை மாறுபடும் என்பதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். எங்கள் பகுதியில் நாங்கள் செய்யும் கொஸ்து செய்முறை இதுதான்.
அதனால்தான் அதற்கு மன்னார்குடி கொஸ்து என்றே பெயரிட்டேன். தங்களது மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

மிக்க நன்றி. தமிழில் சமையல் குறிப்புகளை தேடினேன்... உங்கள் செய்முறை நன்றாக உள்ளது. மிக்க நன்றி... சுவாதி அ௫ண்குமார்

Post a Comment

Related Posts with Thumbnails