தேங்காய் : 1/2 மூடி
பச்சரிசி : 3 கைப்பிடி
அச்சுவெல்லம் : 10 அச்சு
ஏலக்காய் : 5
முந்திரிபருப்பு : 7
காய்ந்த திராட்சை : 10
நெய் : 3 ஸ்பூன்
செய்முறை:
முதலில் தேங்காய், பச்சரிசி, ஏலக்காய் இவற்றை மேலே கொடுத்துள்ள அளவில் எடுத்துக்கொண்டு மிக்ஸியில் உப்புமா பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு, அரைத்த கலவையை 4 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து, ஒரு அடி கனமான பத்திரத்தில் ஊற்றி, நன்கு கொதித்ததும், அடுப்பை இளந்தீயில் வைத்து, அரிசியும் தேங்காயும் நன்கு வேகும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
அதற்குள் இன்னொரு அடுப்பில் 10 அச்சு வெல்லத்தை தண்ணீரில் கரைத்து பாகாக்கி கொள்ளவும். பின்பு, அந்த பாகினை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். அரிசி, தேங்காய் கலவை நன்றாக வெந்ததும், வடிகட்டிய வெல்லப் பாகை அதில் ஊற்றி கிளறவும். ஒரு கொதி வந்து வெல்லப்பாகு நன்கு கலந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
நலன்கள்:
பொதுவாக விசேஷ தினங்களுக்கு இந்த பாயசம் செய்வது வழக்கம். தேங்காய் விட்டமின் சத்து நிறைந்தது. வாய்ப்புண், வயிற்றுப் புண் போன்றவற்றை ஆற்றக் கூடியது தேங்காய். அரிசி புரதச் சத்து நிறைந்தது. வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது. இவையெல்லாம் ஒரு சேர சமைக்கும் போது இவற்றின் சத்து நமக்கு ஒரே நேரத்தில் கிடைக்கிறது.

ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை போட்டு வறுத்து, பாயசத்தில் கலந்துவிட்டால் தேங்காய் பாயசம் தயார்.
நலன்கள்:
பொதுவாக விசேஷ தினங்களுக்கு இந்த பாயசம் செய்வது வழக்கம். தேங்காய் விட்டமின் சத்து நிறைந்தது. வாய்ப்புண், வயிற்றுப் புண் போன்றவற்றை ஆற்றக் கூடியது தேங்காய். அரிசி புரதச் சத்து நிறைந்தது. வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது. இவையெல்லாம் ஒரு சேர சமைக்கும் போது இவற்றின் சத்து நமக்கு ஒரே நேரத்தில் கிடைக்கிறது.
8 comments:
எனக்கு இதை பார்த்ததும் ஊர்ல பாசி பருப்பு [பச்சை பருப்பு] பாயசம் குடிச்சதுதான் ஞாபகம் வருது ! ]
அது எப்பிடி செய்யிறதுன்னும் பின்பு சொல்லிக்கொடுங்க :)
நன்றி ஆயில்யன். அவசியம் பாசி பருப்பு பாயசம் பற்றி சொல்கிறேன்.
கர்ர்ர்ர்ர்ர். பார்த்து வாயில ஜொள்ளு.... வருது....
பாயாசம் சூப்பர்.
பாயசம் புடித்த ஒன்னு
நன்றி ஜெயகுமார்.
நன்றி வானதி.
நன்றி சௌந்தர்.
புவனா மேடம்....
இப்போ தான் உங்க வலைக்கு ஃபர்ஸ்ட் டைம் வர்றேன்...
வந்து பார்த்தா, ஒரு அட்டகாசமான தேங்காய் பாயசம் ரெசிப்பி போட்டு, தூள் வரவேற்பு குடுத்துட்டீங்க....
எனக்கும் இந்த தேங்காய் பாயசம் ரொம்ப பிடிக்கும்.
மிக்க நன்றி....
மிக்க நன்றி கோபி.
Post a Comment