மைதா பூரி செய்ய தேவையான பொருட்கள்:
மைதா : 1/2 படி ரவா : 1 ஸ்பூன்
நெய் : 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் : 2 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
சன்னா குடைமிளகாய் மசாலா செய்ய தேவையான பொருட்கள்: வெள்ளை கொண்டை கடலை : 1/4 படி
குடைமிளகாய் : 1
பெரிய வெங்காயம் : 2
தக்காளி : 4
பச்சை மிளகாய் : 3
இஞ்சி : சிறிதளவு
பூண்டு : 5 பல்
மிளகு சீரகப்பொடி : 1 ஸ்பூன்
நெய் : 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் : 2 ஸ்பூன்
சீரகம் : 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் : 2 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
மைதா பூரி செய்முறை:
ஒரு பாத்திரத்தில், மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் மைதா, ரவா, உப்பு, நெய், நல்லெண்ணெய் போன்றவற்றை போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிடவும். மாவு நல்ல பதத்திற்கு வந்து விடும். பூரி மிகவும் மிருதுவாக இருக்கும். அதற்குள் சன்னா குடைமிளகாய் மசாலாவை செய்துவிடலாம்.
சன்னா குடைமிளகாய் மசாலா செய்முறை: முதலில் குக்கரில் கொண்டைக்கடலை போட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணெய், பெருங்காயம் சேர்த்து வேகவிடவும். பின், மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். மேலே கொடுத்த அளவில் பாதி வெங்காயத்தை விழுதாக அரைத்து கொள்ளவும். அதே போல் பாதி அளவு தக்காளி விழுது அரைக்கவும். மீதி வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். குடை மிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் நெய், நல்லெண்ணெய் ஊற்றி சீரகம் தாளிக்க வேண்டும். பிறகு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதினை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதன்மேல் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு சீரகப் பொடி சேர்க்க வேண்டும். இவை நன்கு வதங்கிய பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் போட்டு வதக்கவும். பின், வெங்காயம், தக்காளி விழுதினை சேர்த்து வதக்கவும்.
இத்தனையும் சேர்ந்து நன்றாக வதங்கியபின், தேவையான அளவு உப்பு, தண்ணீரை சேர்த்து நன்றாக வேக விடவும். ஒரு பிடி கொண்டை கடலையை தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீது கொண்டை கடலையை வேக வைத்த கலவையில் போட்டு அந்த மசாலாவுடன் நன்றாக சேரும் வரை கொதிக்க விடவும். கடைசியாக தனியே எடுத்து வைத்த கொண்டைக் கடலையை அரைத்து இவற்றுடன் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும். சன்னா குடைமிளகாய் மசாலா தயார்.
பலன்கள்:கொண்டைகடலை உட்கொள்வதால் எலும்புகள் வலுவடையும். எலும்பு வளர்ச்சிக்கு பயன் தரக்கூடிய இது போன்ற கடலை வகைகளை தினமும் ஒரு கடலை என்று, சிறு வயதிலிருந்தே கொடுத்து பழக்குவது நமது பிள்ளைகளுக்கு மிக நல்லது.
6 comments:
2ம் அருமையான குறிப்புகள்....
நன்றி மேனகா.
looking very yummy!
நன்றி வானதி.
புவனா மேடம்....
மைதா பூரி சாப்டு ரொம்ப நாளாச்சு... இந்த ரெசிப்பி பார்த்த உடன் பழைய ஞாபகம் வருகிறது..
இப்போ எல்லாம் கோதுமை பூரி தானே... அதுவுமின்றி, மைதா பூரியை இழுத்து, பிய்த்து எடுப்பதற்கு நமக்கு பொறுமை போதாது...
கால் படி, அரைப்படின்னு கணக்கு சொல்றீங்களே.. இப்போ இருக்கறவங்களுக்கு எல்லாம் இந்த கணக்கு தெரியுமா?
நன்றி கோபி. படிக்கணக்குடன் கிலோ அளவிலும் இனி நிச்சயம் சொல்கிறேன்.
Post a Comment