முன்னொரு காலத்தில் ஒரு திருக்கோயிலில் தீபம் ஏற்றி வைத்திருந்தார்கள். ஒரு எலி அந்த விளக்கில் உள்ள எண்ணையை குடிப்பதற்காக அதில் வாயை வைத்தது. அப்போது அதற்கு தெரியாமலேயே விளக்குத் திரியின் மேல் எலியின் வாய் பட்டு அணையும் நிலையில் இருந்த விளக்கு தூண்டிவிடப்பட்டு நன்கு எரிய ஆரம்பித்தது. அதனை அறியாமல் செய்த இந்த புண்ணிய காரியத்தினால் அந்த எலி அடுத்த ஜென்மத்தில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. ஆகவே, நாம் செய்யும் தர்மம் நம்மை எப்போதும் காக்கும்.
நாம் கோலமிடுவதற்கு முன் சாணமிட்டு சுத்தம் செய்து பின் கோலமிடுகிறோம். மாட்டின் சாணம், கோமியம், பால் போன்றவை நமக்கு பயனுள்ளவை. சாணமும், கோமியமும் மிகச் சிறந்த கிருமி நாசினிகள். இவற்றை வாசலில் இடும்போது வீட்டினுள் கிருமிகள் அண்டுவதில்லை. இவற்றின் அடிப்படையிலேயே பின்வரும் கோலங்கள் அமைந்துள்ளன.
* ஞாயிற்றுக்கிழமை * * * * சூரிய பகவான் *
* திங்கட்கிழமை * * * * சந்திர பகவான் *
* செவ்வாய்க்கிழமை * * * * குஜ பகவான் *
* வியாழக்கிழமை * * * * குரு பகவான் *
* வெள்ளிக்கிழமை * * * * சுக்ர பகவான் *
திருக்கோயில்களில் உள்ள சன்னதிகளிலோ, காலால் மிதி படாத இடங்களிலோ, நமது வீட்டு சுவாமி மாடங்களின் முன்பாகவோ, அந்தந்த கிழமைகளில் அதற்கேற்ற நவக்ரஹ, யந்திரங்கள், கோலங்களைப் போட்டு நெய் விளக்கேற்றி பூஜை செய்தால் நவக்ரஹங்களுடைய அருள் நமக்குக் கிட்டும். நவராத்ரி காலத்தில் இந்த கோலங்களை வரிசையாக ஒன்பது நாட்கள் கொலுவிற்கு முன்பு போட்டு வழிபடுவதும் நல்ல பலன்களைத் தரும்.
இடது பக்கத்தில் உள்ள கோலங்கள் கிழமைகளுக்கும், வலது பக்கத்தில் உள்ள கோலங்கள் நவக்ரஹங்களுக்கும் உரியவை. இராகுவின் யந்திர வடிவத்தை சனிக்கிழமையிலும், கேதுவின் யந்திர வடிவத்தை செவ்வாய் கிழமையிலும் சேர்த்து போடவும். இவ்வாறு தினமும் இந்த கோலங்களைப் போட்டு கடவுளின் அருளைப் பெற வாழ்த்துக்கள்.
9 comments:
arumai... todarungal .. vaalthukkal bhuvaneswari
மிக்க நன்றி LK.
இதனை note செய்து கொண்டாச்சு...மிகவும் நன்றி புவனா...
மிக்க நன்றி புவனா!! தொடருங்கள்..இந்த பக்கத்தினை புக் மார்க் செய்துவிட்டேன்....
மிக்க நன்றி மேனகா.
புவனா....
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி....
நல்ல விஷயங்களையே தொடர்ந்து எழுதுவதால்.. இந்த வலைப்பக்கம் என்னோட ஃபேவரிட் இப்போ....
உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கோபி.
inga vanthu paarunga
by
jothida express
WWW.SUPERTAMILAN.BLOGSPOT.IN
வருகைக்கு மிக்க நன்றி கார்த்திகேயன். வாழ்த்துக்கள்.
Post a Comment