கோதுமை மாவு : 1/2 கிலோ
பெரிய வெங்காயம் : 2
பூண்டு : 4 பல்
இஞ்சி : சிறிதளவு
உருளைக்கிழங்கு : 2
சோயா பருப்பு : 100 கிராம்
கேரட் : 4
பீன்ஸ் : 100 கிராம்
குடை மிளகாய் : 1
மிளகாய் தூள் : 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் : 1/2 தே.கரண்டி
மிளகுசீரகப் பொடி : 1 தே.கரண்டி
நல்லெண்ணெய் : 1 தே.கரண்டி
நெய் : 1 தே.கரண்டி
உப்பு : தேவையான அளவு
சீரகம் : 1 தே.கரண்டி
செய்முறை:
இதன்பின், கோதுமை மாவை உருண்டைகளாக்கி, வட்ட வடிவ சப்பாத்திகளிட்டு கொள்ளவும். ஒரு சப்பாத்தி எடுத்து சிறுது பூரணத்தை எடுத்து நீள வாக்கில் வைத்து, சப்பாத்தியில் வைத்து அதனை சுருட்ட வேண்டும். இதனை தோசைக்கல்லில் சிறிது நெய் விட்டு வேக வைக்கவும். இந்த ரோலை எடுத்து தட்டில் வைத்து இரண்டு துண்டுகளாக்கி பரிமாறவும்.
வெஜிடபள் ஸ்ப்ரிங் ரோலை முட்டைகோஸ், பனீர் சேர்த்து பனீர் வெஜிடபள் ஸ்ப்ரிங் ரோல் என்றும் செய்யலாம்.
வீட்டுக்குறிப்புகள்:
1. வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வயிற்றுப்புண் ஆறும். இரத்த அழுத்தம் சீராகும்.
5. உடல் சூட்டை தணிக்க, இரவு படுக்க போகும் முன் உச்சந்தலையிலும், உள்ளங்காலிலும், கண் இமைகளுக்கு மேலையும் வெளக்கெண்ணெய் சிறிது தடவிக்கொண்டு படுத்தால் உடல் சூடு தணியும்.
செய்முறை:
முதலில் கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு, 2 ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து, தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அந்த மாவை தனியே வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியில் 1 தே.கரண்டி நல்லெண்ணெய், 1 தே.கரண்டி நெய்விட்டு சூடானவுடன் அதில் 1 தே.கரண்டி சீரகம் போடவும். அது வெடித்தவுடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு அதனை நன்கு வதக்கவும். பின், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை நன்கு வதக்கவும். இதன்மேல் மிளகுசீரகப்பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இவற்றின் மேல் பொடியாக நறுக்கிய சோயா பருப்பு, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், குடை மிளகாய் போட்டு, அவற்றுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் காய்கள் மூழ்கும் வரை தண்ணீர்விட்டு அது கொதித்தவுடன் பாத்திரத்தை மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். 10 நிமிடத்தில் காய்கறி பூரணம் தயார்.
இதன்பின், கோதுமை மாவை உருண்டைகளாக்கி, வட்ட வடிவ சப்பாத்திகளிட்டு கொள்ளவும். ஒரு சப்பாத்தி எடுத்து சிறுது பூரணத்தை எடுத்து நீள வாக்கில் வைத்து, சப்பாத்தியில் வைத்து அதனை சுருட்ட வேண்டும். இதனை தோசைக்கல்லில் சிறிது நெய் விட்டு வேக வைக்கவும். இந்த ரோலை எடுத்து தட்டில் வைத்து இரண்டு துண்டுகளாக்கி பரிமாறவும்.
வெஜிடபள் ஸ்ப்ரிங் ரோலை முட்டைகோஸ், பனீர் சேர்த்து பனீர் வெஜிடபள் ஸ்ப்ரிங் ரோல் என்றும் செய்யலாம்.
வீட்டுக்குறிப்புகள்:
1. வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வயிற்றுப்புண் ஆறும். இரத்த அழுத்தம் சீராகும்.
2. வெங்காயத்தை வதக்கும்போது உப்பு போட்டு வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும்.
3. காலில் வலியிருந்தால் வெந்நீரில் சிறிதளவு உப்பு, எலும்பிச்சம்பழம் சாறு கலந்து அதனுள் காலை வைத்துக்கொண்டு உட்கார்ந்தால் காலில் உள்ள வலியும் போகும். பாதங்களில் உள்ள அழுக்கும் போகும்.
4. வாழைக்காய் சீவும் போது கையில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு சீவினால் கை கறுப்பாகாது.
6. சேமியா பாயசம் செய்யும்போது சேமியாவை பாலில் வேக வைத்து பாயசம் செய்தால் ருசி நன்றாக இருக்கும்.
7. வெங்காயத்தை 10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு வைத்துவிட்டு பிறகு அரிந்தால் கண் எரியாது.
8. நமது பிள்ளைகளுக்கு ஆரோக்யத்தை கெடுக்கும் தீனிகளுக்கு பதிலாக கடலை மிட்டாய், எள்ளுருண்டை, பாதாம் பருப்பு, முந்திருபருப்பு, காய்ந்த திராட்சை போன்றவற்றை தினமும் உண்ணும் பழக்கத்தை உண்டாக்கலாமே.9. அரிசி கொதிக்கும் தண்ணீரில் சிறிது வெண்ணை போட்டு குடிக்க வயிற்று வலி போகும்.
10. சூடான நெய்யில் மிளகை பொரித்து அந்த மிளகை சாப்பிட்டுவிட்டு அந்த நெய்யினையும் குடித்தால் இருமல் நிற்கும்.
7 comments:
Very Useful Kitchen tips...
சுவையான ஸ்ப்ரிங் ரோல் ,உபயோகமான குறிப்புகள் நன்றி .
நன்றி கீதா.
நன்றி ப்ரியா.
அருமை
வாழ்த்துகள் !
நன்றி கீதா.
அருமையான ரெசிபி..ஈசி செய்முறை...
நன்றி கோமதி.
Post a Comment